நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 18 August 2015

அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?


அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?
வான்வெளியில் உள்ள 27 நட்சத்திர கூட்டங்களை வைத்து அனைத்து வகையான் முகூர்த்தங்களும் குறிக்கப்படுகிறது.அபிஜித் என்ற நட்சத்திரகூட்டமும் வான்வெளியில் உண்டு.இதன் அமைப்பு நான்கு தெரு சந்திக்கும் இடம்போல் அமைய பெற்றியிருக்கும்.மொத்தம் 27 நட்சத்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.அபிஜித் என்ற நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக முன்னர் பயன்பாட்டில் இருந்துள்ளது.இந்த நட்சத்திர கூட்டம் முதல் நட்சத்திரமாக கொள்ளும் அளவுக்கு சக்தியில்லை என பயன்படுத்தவில்லை.
சூரியன் உச்சி வானில் இருக்கும் நேரமே அபிஜித் முகூர்த்தமாகும்.அதாவது நண்பகல் 11-30 லிருந்து 12-30 வரை உள்ள காலமாகும்.பிரம்ம முகூர்த்தம்,உதய காலம்,அஸ்தம காலம் போன்ற நேரங்களுக்கு எப்படி தோஷமில்லையோ அதேபோல் இந்த அபிஜித் காலத்திற்கு எந்தவிதமான தோசமும் கிடையாது.
முகூர்த்த நாளோ,நேரமோ இல்லாவிட்டாலும் கூட சரியாக பகல் 12 மணியை முகூர்த்தமாக பயன்படுத்திகொள்ளலாம்.அதேபோல் முகூர்த்த நேரத்தை தவறவிட்டவர்களும் இந்த நேரத்தை பயன்படுத்தலாம்.இந்த நேரம் வாழ்வில் வெற்றியைதரும்,முன்னேற்றத்தை கொடுக்கும்.தொழிற்கூடத்தை நிறுவி வியாபார ஏற்ற இறக்கத்தாலும்,கிரகங்களின் தொந்தரவாலும் இழந்தவைகளைப் பெற்றிட இந்தநேரமானது உன்னதமான காலம் ஆகும்.

No comments:

Post a Comment