நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 25 May 2016

சித்தர்கள். மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை


சித்தர்கள். மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை







அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.

கடுக்காய் வகைகள் :

பிஞ்சு கடுக்காய்,
கருங்கடுக்காய்,
செங்கடுக்காய்,
வரிக்கடுக்காய்,
பால்கடுக்காய்
என, பல வகைகள் உண்டு. கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும்.

இவை தவிர,
காபூல் கடுக்காய்,
சூரத் கடுக்காய்
எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.

# பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.

# கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.

# செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.

# வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.

# பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்

என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.

கடுக்காயை
விஜயன்,
அரோகினி,
பிருதிவி,
அமிர்தமரிதகி,
த்ருவிருத்தி
என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு் வகைப்படுத்தியுள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.

உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து.

மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.

“கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு”
என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

பசியின்மையைப் போக்கும் கடுக்காய் :

பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.

ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள். துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம். அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.

சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய் :
கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.

திரிபலா பெருமைகள் :

திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது. நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

புண்களைக் கழுவ இந்தத் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ் நாள புண், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலாசூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

எமன் அருகில் வராமல் இருக்க, காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவ உலகம்.

வேலையின்மைக்கு தீர்வு தரும் பரிகாரம்!!!

வேலையின்மைக்கு தீர்வு தரும் பரிகாரம்!!!



201604131007574690_best-pariharam-for-unemployment_SECVPF
வேலையில்லாமல் அவதிப்படுபவர்கள் சூரிய பகவானை தினமும் துதித்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை சூரியோதய வேளையில் ஒரு கிண்ணம் அல்லது அகன்ற பாத்திரத்தில் சுத்தமான நீர் எடுத்துக்கொண்டு சூரிய வெளிச்சம் தன மேல் படும்படிக் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். அந்தப் பாத்திரத்தில் தெரியும் தன் முகத்தைப் பார்த்தபடியே "ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ" என்று 108 தடவை ஜெபிக்கவும்.


ஜபத்திற்கு எந்த மாலையையும் பயன்படுத்தலாம். அதன் பின்னர் வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர அருள் செய்யுமாறு சூரிய பகவானை வேண்டிய பின் அந்த நீரை ஏதேனும் மரம் அல்லது செடியின் வேர் பாகத்தில் ஊற்றி விடவும். (அரச மர வேரில் ஊற்றினால் மிகவும் சிறப்பு).

தொடர்ந்து அல்லது விட்டு விட்டு 

10 ஞாயிற்றுக்கிழமைகள் செய்து வர வேலையின்மை, நிர்வாகத்திறமை இன்மை நீங்கும். அரசு தேர்வு எழுதுபவர்கள் இதைச் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

காகபுஜண்டரின் ஜீவசமாதி கொண்ட -சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி

காகபுஜண்டரின் ஜீவசமாதி கொண்ட -சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி




>> தென்பொன்பரப்பி எனும் சிற்றூரில் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்றுள்ளது... .இறைவன் சொர்ணபுரீஸ்வரர் அம்பாள் சுவர்ணாம்பிகை என்ற திருநாமத்தில் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இந்த ஆலயத்தின் மூலவரான ஷோடச லிங்கம் எல்லா சித்தர்களுக்கும் மூத்தவரான காகபுஜண்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும் . காகபுஜண்டர் பதினாறு ஆண்டுகள் கடுந்தவம் மேற்கொண்டதன் விளைவாக தவத்திற்கு மெச்சிய சிவபெருமான் ஒரு பிரதோஷ வேளையில் 16 முகங்களை கொண்ட ஷோடச லிங்கமாக அவருக்குக் காட்சி தந்தார்.


>> அதே போன்ற சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதினார். அதன் காரணமாகவே காகபுஜண்டர் இங்கு சிவலிங்கத்தை நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ..இக்கோவிலில் ஜீவசமாதியும் அடைந்தார். லிங்கமானது சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
>> இந்த சிவாலயம் எழுப்பப்பட்ட காலக்கட்டத்தில் தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னன் வானகோவராயன் ஆவான் . மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் ஒரு அழகிய சிவாலயத்தை கலை நுணுக்கத்தோடு எழுப்பினான். அப்போது ஊரில் செல்வம் கொழித்து, பொன்னும் பொருளும் அளவற்று புழங்கியதால் இவ்வூருக்கு பொன் பரப்பி என்ற பெயர் ஏற்பட்டது.
>> ஒரு கட்டத்தில் வானகோவராயனுக்கு சோதனை வந்தது. கப்பம் கட்டாததால் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் படையெடுக்கும் நோக்கத்தில் அவனைத் தாக்க வந்தனர். வானகோவராயன் குறுநில மன்னராக இருந்தபோதும் தைரியத்தில் குறைவில்லாதவன். தான் வணங்கும் சொர்ணபுரீஸ்வரரை மனமுருக வணங்கி போருக்குப் புறப்பட்டான். ஈசனின் முழு அருளையும் பெற்ற மகிழ்ச்சியில் போர் முரசு கொட்டிச் சென்ற மன்னனை பார்த்த மாத்திரத்தில் மூவேந்தர்களும் தம் அரசமுடிகளை கழற்றி வைத்துவிட்டு திரும்பினர். அதனாலேயே இந்த இடம் மும்முடி என்று அழைக்கப்படுகிறது.
>> ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம்.இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
>> காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
மேலும் ராகு கால வேளையில் சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.
>> இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.
>> காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். எனவே சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார்.
>> இத்தலத்தில் உள்ள நந்தி குட்டியாக இருக்கிறது. "பால நந்தி' என்பது இதன் திருநாமம். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. காண கண் கோடி வேண்டும் ..வந்து பாருங்கள் .

>> சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் அம்மையகரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து மேற்கே ஒரு கி.மீ. தூரத்தில் சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி-606 201, விழுப்புரம் மாவட்டம். தொடர்புக்கு - 9894667934.

தீராத நோய்களும் தீரும் கஞ்சமலை சித்தேஸ்வரர் வழிபாடு


தீராத நோய்களும் தீரும் கஞ்சமலை சித்தேஸ்வரர் வழிபாடு





இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள் இருப்பதால், இங்கு கிரிவலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. அழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில் உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது. இங்கு நடந்து தான் செல்ல முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர். கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது. மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. 'ஞானசற்குரு பால முருகன்' என இவரை அழைக்கின்றனர். நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் சிறப்பாக இருக்கின்றன.

காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர். 'கஞ்சம்' என்றால் 'தாமரை' எனப் பொருள்.
மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் 'கஞ்சம்' என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம்.

காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர். அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது. ''ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,'' என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார்.

தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்தியபாடு தான். காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காணவில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார். ''அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்?'' என்றார். இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார். ''குருவே! நான் தான் காலாங்கி,'' என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார். திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, ''அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,'' என்றார். காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார்.

திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார். இருவரும் இனைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே 'இளம் பிள்ளை'. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை 'காலாங்கி சித்தர்' என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து 'சித்தேஸ்வரர்' என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது.

இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள் இருப்பதால், இங்கு கிரிவலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இந்த கோயில் அருகே ஓடும் பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை. பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். கோயிலுக்குள் இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் உப்பு, மிளகு வாங்கி போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். முகத்தில் பரு உள்ளவர்கள் உப்பு, மிளகு வாங்கிப் போட்டு இந்த குளத்து நீரால் முகம் கழுவினால் பரு வருவதில்லை என்கிறார்கள்.

சில டாக்டர்களும் இங்கு போகச் சொல்லி நோயாளிகளை பரிந்துரை செய்வதாக சொல்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர். இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.'அமாவாசை கோயில்' என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம். பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில் இருந்து கிரிவலம் துவங்குகிறார்கள். 18 கி.மீ., சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம் சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம் மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக நம்புகின்றனர்.

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில், கஞ்சமலை, சேலம்.

மும்மூர்த்தியின் ஓர் உருவம்

மும்மூர்த்தியின் ஓர் உருவம்
31–5–2016 தத்தாத்ரேயர் ஜெயந்தி







31–5–2016 தத்தாத்ரேயர் ஜெயந்தி


சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக தோன்றியதே தத்தாத்ரேயர் அவதாரமாகும். மும்மூர்த்திகளின் மனைவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு தாங்களே உலகில் சிறந்த பதிவிரதைகள் என்பதில் கர்வம் இருந்தது. அந்த கர்வத்தைப் போக்க எண்ணம் கொண்ட இறைவன், அதற்கு கருவியாக நாரதரை தேர்வு செய்தார்.

ஒரு நாள் நாரதர் தன் கையில் சில இரும்பு குண்டுகளை எடுத்துக்கொண்டு முப்பெரும் தேவியர்களையும் சந்தித்தார். ‘தேவியர்களுக்கு என் வணக்கம். தாயே இன்று இறைவன் எனக்கு அளித்த உணவு இது. இந்த இரும்பு குண்டை பொரியாக்கி சாப்பிட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவு. பதிவிரதைகளால் மட்டுமே இந்த இரும்பு குண்டுகளை, பொரியாக்க முடியும் என்பதால் உங்களைத் தேடி வந்தேன்’ என்று தன் தந்திர வார்த்தைகளை உதிர்த்தார்.

இதனைக் கேட்டு மூன்று தேவியர்களும், ‘நாரதரே! விளையாடுகிறீர்களா? இரும்பு குண்டுகள் எப்படி பொரியாகும்? முட்டாள்தனமாக அல்லவா இருக்கிறது’ என்றனர்.

‘இல்லை தாயே! நிச்சயம் பதிவிரதைகளால் இது சாத்தியமாகும்’ என்று மீண்டும் நாரதர் வற்புறுத்தினார். இதனால் முப்பெரும் தேவியர்களும் அந்த இரும்புக் குண்டை தீயிலிட்டு பொரியாக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அது இயலவில்லை. அவர்களின் மனதில் இருந்த அகந்தையே அதற்கு காரணமாக அமைந்தது

.
இதையடுத்து நாரதர் அந்த இரும்பு குண்டுகளைக் கொண்டுபோய், அத்ரி முனிவரின் மனைவியான அனுசுயா தேவியிடம் கொடுத்தார். அவர் அதனை பொரியாக்கி நாரதரிடம் கொடுத்தார். இந்த அரிய செயலை கேள்வியுற்ற முப்பெரும் தேவியர்களும், அனுசுயாவின் மீது பொறாமை கொண்டனர். தங்கள் கணவர்களிடம் கூறி அனுசுயாவின் கற்பை சோதனை செய்யும்படி அனுப்பி வைத்தனர்.

அதன்படி சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் முனிவர் வேடம் பூண்டு அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். முனிவர்களுக்கு உணவளிப்பதற்காக பலகாரங்களை தயார் செய்தார் அனுசுயா. பின்னர் உணவு பரிமாற தொடங்கியபோது, முனிவர் வேடத்தில் இருந்த முப்பெரும்தேவர்களும், ‘நீங்கள் நிர்வாண நிலையில் உணவு பரிமாறினால்தான் உணவை ஏற்றுக்கொள்வோம்’ என்றனர்.

சற்று திகைத்தாலும், தன் பதிவிரதை தன்மையால் அந்த மூவரையும் குழந்தைகளாக உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அவர்களுக்கு அமுது அளித்து தொட்டிலில் தூங்கச் செய்தாள். அனுசுயாவின் கற்பை பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், பலகாலம் ஆகியும் இருப்பிடம் திரும்பாததை எண்ணி மனம் கலங்கிய முப்பெரும் தேவியர்கள், அனுசுயாவின் குடிலை நோக்கி வந்தனர்.

அங்கு மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அனுசுயாவின் கற்பை எண்ணி மலைத்தனர். இதையடுத்து அனுசுயாவிடம் சென்ற அவர்கள், ‘தாயே! கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழைய படியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்டனர்.

இதையடுத்து அனுசுயா, மும்மூர்த்திகளையும் பழைய உருவுக்கு மாற்றினார்.

பின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயா– அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டனர்.

அதற்கு அனுசுயா, ‘இறைவா! தாங்கள் மூவரும் எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்’ என்ற வரத்தை தரும்படி இறைவனிடம் வேண்டினர்.

இறைவனும் அவ்வாறே வரம் அளித்தார். அதைத் தொடர்ந்து பல காலம் தவத்தில் ஈடுபட்டிருந்த அத்ரி– அனுசுயா தம்பதியருக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் பிறந்தார். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர்.

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மும்மூர்த்திகள் அருளும் பிரார்த்தனைக் கோயில்!


மும்மூர்த்திகள் அருளும் பிரார்த்தனைக் கோயில்!



பிரம்மன், மகாவிஷ்ணு, சிவனார் ஆகிய மூவரும் பிரதான மூர்த்திகளாக ஒருங்கே அருளும் திருத்தலங்கள் மிக அபூர்வம். அந்த வகையில், மதுரையில் இருந்து காரியாபட்டி செல்லும்
வழியில், மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள வலையங்குளத்தில் மும்மூர்த்தியரும் அருளும் ஒரு திருக்கோயில் அழகுற அமைந்திருக்கிறது.

சிவபக்தரான மூர்த்தி என்ற அன்பர், தியானம் செய்யும் போது தமக்குக்கிடைத்த அசரீரி வாக்குப்படி கட்டிய திருக்கோயில் இது.நடுநாயகமாக சிவபெருமான், அவருக்கு வலப்புறம் நின்ற நிலையில் நான்முகன், இடப்புறமாக மகாவிஷ்ணு என தனித்தனி விமானங்களுடன் கூடிய சந்நிதிகளில் அருள்பாலிக் கின்றனர் மும்மூர்த்திகளும். மூவரிலும் சிவபெருமான் நடுநாயகமாக இருந்து, பிரதான மூர்த்தியாக இருப்பதால், கொடிமரம் அவருக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது.

காரணப் பெயர்களோ, சிறப்புத் திருநாமங்களோ எதுவும் இன்றி சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மன் ஆகிய நாமங்களுடனேயே தெய்வங்கள் அருள்வது இக்கோயிலின் சிறப்பம்சம். அம்பிகைக்கும் தாயாருக்கும் முறையே பார்வதிதேவி, மகாலட்சுமி என்றே திருப் பெயர்கள் திகழ்கின்றன. அதுமட்டுமா? பிரார்த்தனைகள் பலிதமாவதால், ‘பிரார்த்தனைக் கோயில்’ என்றே இக்கோயிலைச் சிறப்பிக்கிறார்கள் பக்தர்கள்.
புதிதாகத் திருமணம் ஆன தம்பதியர் அறிவும் அழகும் மிக்க குழந்தைகள் பிறக்கவும், அவர்களின் எதிர்காலம் சிறக்கவும் பிரம்மாவுக்கு மஞ்சள் வஸ்திரம், தாமரைப்பூ மாலை அணிவித்து, மஞ்சள் பிரசாதம் வைத்து வழிபடுகின்றனர். அதேபோல், வியாபாரம் செழிக் கவும் வீட்டில் செல்வம் பெருகவும், கடன் தொல்லைகள் தீரவும் இங்குள்ள மகாவிஷ்ணு, மகாலட்சுமிக்கு துளசி மாலை அணிவித்து, கற்கண்டு, உலர் திராட்சை, ஏலக்காய் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள்.
மேலும், நோய்கள் தீர, நீண்ட நாட்களாக தடைப் பட்டிருந்த திருமணம் நடக்க, காரியத்தடைகள் விலக, எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். வியாழ பகவானுக்கு தனி சந்நிதி உள்ளதால் குரு ஸ்தலமாகவும் இது விளங்குகிறது. பிரதோஷம், சிவராத்திரி, கிரகப் பெயர்ச்சி காலங்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெறுகின்றன. மேலும் சனிக்கிழமைதோறும் மகா விஷ்ணுவுக்கு சிறப்பு பூஜையும், ஞாயிற்றுக் கிழமைகளில் கால பைரவருக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. குடும்ப நன்மைக்காகவும், பொது நன்மைக்காகவும் ஹோமங்களும் நடத்தப்படுகின்றன. காலை 7 முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

கடன் தொல்லை நீக்கும் லட்சுமி நரசிம்மர் கோவில், கீழப்பாவூர், திருநெல்வேலி.



கடன் தொல்லை நீக்கும் லட்சுமி நரசிம்மர் கோவில், கீழப்பாவூர், திருநெல்வேலி.
லட்சுமி நரசிம்மர் கோவில்  கீழப்பாவூர், திருநெல்வேலி க்கான பட முடிவு

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம்– சுரண்டை செல்லும் சாலையில் உள்ளது கீழப்பாவூர். இங்கு சைவ, வைணவ புராணச் சிறப்புமிக்க இரண்டு ஆலயங்கள் அருகருகே அமைந்துள்ளன. வாலி வழிபட்ட சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில், வயல் வெளிகளுக்கு மத்தியில் இருக்கிறது. இதன் அருகிலேயே ரிஷிகளுக்கு காட்சி கொடுத்து நரசிம்மர் கோவிலும் உள்ளது. இத்தலத்தில் சப்த மகரிஷிகளில் ஒருவரான காசியபர், வருணபகவான், சகோஷன் என்ற முனிவர் ஆகியோர் மகாவிஷ்ணுவை வழிபட்டனர். அதன்பேரில் மகாவிஷ்ணு அவர்களுக்கு நரசிம்மராக காட்சி கொடுத்தார். இந்த நரசிம்மரை வழிபட்டால் எதிரிகளின் தொல்லை அகலும். கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்கும். வியாபாரம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.


மேலும் தகவல்கள்களுக்கு:9842078733