நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 7 May 2016

அட்சயம் தரும் திருதியை =அட்சய திருதியை

அட்சயம் தரும் திருதியை =அட்சய திருதியை



அட்சயம் என்றால் அழியாதது , திருதியை என்றால் திரிந்து பெருகுதல்.


அட்சயம் யாரிடம் இருக்கும் சூரிய தேவரிடம் இருக்கும் ! அது ஏன் சூரிய தேவரிடம் என்றால் எல்லா ஜீவ ராசியின் புண்ணிய கணக்கு என்பது சூரிய தேவருக்கே தெரியும் ஏனென்றால் சிருஷ்டியின் முதல் படைப்பு அவர்தான் அணைத்து ஜீவ ராசிகளின் தந்தை காரகர். ஜன்ம ஜன்மமாக ஒருவரது பிறப்பு கணக்கில் அவரது பித்ருக்கள் முதற்கொண்டு எந்த ஜீவராசியிடம் சுயநலமில்லாத பரம்பரை பரம்பரையாக அதீத புண்ணிய பலம் இருக்கிறதோ அவரிடமே சூரிய தேவர் அட்சய பாத்திரத்தை அளிப்பார் ! மற்றவருக்கு அந்த ஒரு ஜீவ ராசி தீராத அழியாத அந்த பாத்திரத்தில் இருந்து உண்மையான தேவைபடுவோருக்கு அள்ளி குடுபதர்க்காக.

அப்படி அட்சய பாத்திரம் பிரபு ஸ்ரீ ராமர், மணிமேகலை, பாண்டவர்கள், விக்கிரமாதித்யர் என்று பூலோக நல் ஆத்மாக்களிடம் சூரிய தேவர் கொடுத்திருக்கிறார்.

ஆகவே நீங்கள் உண்மையில் மற்றவர் நலன் கருதும் ஆத்மாவாக இருந்தால் அழியாதது என்ற அர்த்தம் கொண்ட அட்சயம் எனும் புண்ணியத்தை திரிந்து பெருக்கும் நாளன வருகிற சித்திரை மாத வளர்பிறை திருதியையில் தர்மம் புண்ணியம் சேர்க்கும் என்றென்றும் நீடித்து இருக்கும் அழியாத எண்ணில் அடங்கா பெருக்கி தந்து இருக்கும் அட்சய திருதியை உபயோகபடுத்தி பயன்பெறுவோம். புண்ணியவான் ஆகிடுவோம்.

அதை விட்டு விட்டு ஒரு அற்புதமான நாளை அழிய கூடிய பொருள் ஆசையில் செலுத்தி அழியாத புண்ணியத்தை சேர்க்கும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.

அபரிதமான அட்சய திருதியை உண்மையான பலன் தரக்கூடிய நேரம் இந்த ஆண்டு எந்த நேரத்தில் வருகிறது தெரியுமா ?

ஞாயிறு இரவு 09:05 முதல் திங்கள் கிழமை சூரிய உதயத்திற்கு முன் காலை 5:30 வரைக்குள் இருக்கும் திரிதியை திதியில் அமையும் ரோகினி நட்சத்திரத்தில் நீங்கள் புண்ணியம் சேர்க்கும் செயலில் ஈடுபட்டால் அதி உத்தமமான அபரிதமான புண்ணியம் பெருக்கும் பலன் கிடைக்க பெறுவீர்கள்.

திங்கள் கிழமை அமிர்த சித்த யோகத்தில் காலை 5:30 மணி முதல் இரவு 7:13 வரை கிடைக்க பெரும் அட்சய திருதியை பலனை காட்டிலும் நான் மேல் கூறிய நேரத்தில் செய்தால் அதிக புண்ணிய பலன் பெறலாம்.

புண்ணியம் பெருகும் காரியம் என்றால் எதை செய்யலாம் என்றால் ?

புண்ணிய தீர்த்தம் ஆடுதல்
புண்ணிய ஸ்தலம் செல்லுதல்
புண்ணியவான்கள் தரிசனம் ஆசிகள் பெறுதல்
புண்ணிய யாகம் செய்தல்
புண்ணிய தர்மம் தானம் செய்தால்
புண்ணிய உபவாசம் (உறக்கம் உணவு இன்றி இருப்பது)
புண்ணிய பக்தி நாம மந்திர உச்சாடனம்
புண்ணிய புராண இதிகாசதில் லயத்தல்

நான் சொன்ன அட்சய திருதியை நேரமான ஞாயிறு இரவு 9:05 முதல் திங்கள் கிழமை விடியும் முன் அதி காலை வரை 5:30 வரை இருக்கிற சூரிய தேவர் கிழமையில் செய்தால் யாருக்கு தெரியும் சூரிய தேவர் உங்களுக்கே இந்த ஜன்மம் இல்லை என்றாலும் ஒரு ஜன்மத்தில் அட்சபாதிரம் அளிக்கலாம்.

அட்சயம் என்பது லக்ஷ்மி தான் செல்வம் தான் அனால் அந்த செல்வத்தின் மூலம் புண்ணியம் ஆகும். அட்சயம் என்ற புண்ணியம் ஆகும். புண்ணியம் இல்லாத எவருக்கும் லக்ஷ்மி என்ற செல்வம் என்ற அட்சயம் கிடைக்காது

புண்ணியம் சேர்க்காமல் வெறும் பொருள் வாங்கி வைத்து பெருகும் என்றால் நம்மை போல் மூடர்கள் யாரும் கிடையாது.

நான் பார்த்தவரை இது எந்த ஜோதிடரும் கூறாதது உங்களுக்காக நான் இதை கூறுகிறேன் விட்டுவிடாதீர்கள்.

மதியால் விதியை வெல்லும் நேரம் அந்த இறைவன் நமது விதியை மாத்தி நமக்கு எழுதி தரும் வாய்ப்பு.

ஞாயிற்று கிழமை என்ற சூரிய தேவர் கையில் இருக்கும் அட்சயம் என்ற பெருகும் செல்வ லக்ஷ்மி திருதியை அன்பு கருணை புண்ணியம் என்ற ரோகினி அம்ச சந்திரன் அமைப்பில் இருக்கிறது இந்த இரவு.

Wednesday, 4 May 2016

கர்ப்பம் தரிக்க மாமருந்து

கர்ப்பம் தரிக்க மாமருந்து
***************************************


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


வாறான மங்கையர் கெர்பமாக
வறையுறேன் பசும்பாலு வசம்புந்தானும்
நீறான் விழுதிஇலை மூலிதானும்
நிலையான குப்பை மேனி சமனாய்க் கூட்டி
காறான பால் தனிலே குழப்பியே தான்
கனமாக இருவேளை கொண்டாயானால்
சோரான கிருமியது அற்றுப் போகும்
செனிக்குமே பிள்ளையது செனிக்கும் பாரே .........தன்வந்திரி மகரிஷி


விளக்கம் :

தன்வந்திரி பகவான் பெண்கள் கர்ப்பம் தரிக்க உடலைப் பக்குவப்படுத்த
சுரண முறை வைத்தியத்தை பற்றி சொல்லி இருக்கிறார் அதை கொண்டு பலன் பெறாலாம்
தன்வந்திரி மகரிஷியை வணங்கி அவர் ஆசியை பெற்று வைத்தியத்தை ஆரம்பிக்கவும் .
வசம்பு,விழுதி இலை மூலிகை ,குப்பைமேனி இம் மூன்ரையும் சம அளவுஎடுத்து நிழலில் உலர்த்தி சரி எடையாக எடுத்து இடித்து வைத்துக்கொள்ளவும் .

இச் சூரணத்தை பசும் பாலில் காலை-மாலை உணவுக்கு முன் குழப்பி சாப்பிட்டு வர ,கர்ப்பப் பையில் இருந்திடும் கிருமிகள் அழிந்து போய் கர்ப்பம் தரித்து குழந்தை..

செனிக்குமது பிள்ளையது பிறக்கும் பாரு
தெளிவாகும் திரேகமது சொலிக்கும் பாரு
கனிக்குமே இந்த முறை பொய்யாதையா
காசினியில் யாரும்தான் சொல்லமாட்டார் .......தன்வந்திரி மகரிஷி


வசம்பு

விழுதி இலை (ஆலமரத்து இலை ) மூலிகை
குப்பைமேனி -------பசும் பால்

மானாமதுரை ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மன் பால்குடம் திருவிழா

மானாமதுரை ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மன் பால்குடம் திருவிழா







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் உள்ள ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால்குடம் கல்கோட்டை முனிஸ்வரன் கோவிலில் இரூந்து சித்திரை மாதம்(25) 08.05.2016 ஞாயிற்றுகிழமை காலை 6.00 மணிக்குள் துவங்குகிறது.
அனைவரும் கலந்து  கொண்டு 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி மற்றும் ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மன் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Tuesday, 3 May 2016

குல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்

குல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்



குல தெய்வம் இன்னதென அறியாதவர் செய்ய வேண்டியது என்னவெனில் தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் பிரம்ம முகூர்த்த வேளையில் சுத்தமான பசு நெய்விட்டு ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
அந்த விளக்கயே உங்கள் குல தெய்வமாக பாவிக்க வேண்டும். அந்த விளக்கிடமே என் குல தெய்வத்தை அறிந்து கொள்ள உதவுமாறு பிரார்த்தனை வைக்க வேண்டும்.
இப்படியே தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் செய்து வர உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருந்தாலும் சரி, சரியாக தொண்ணூறு நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய உண்மையான தகவல் உங்களை வந்து சேரும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்







மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்

06.05.2016 வெள்ளி கிழமை நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டி
நடைபெறுகிறது

அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புண்ணிர்கள் யாகம் செய்த இடம்.
புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது
விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.

அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது 

அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.

இந்த மண்ணை மிதித்துஇந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்பெற்பட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டுஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,


திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,








அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை

ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 06-05-2016 சித்திரை 23 மாத வெள்ளி கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் பூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

பஞ்சபூதேஸ்வரம் 
வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

சிவகங்கை மாவட்டம்

cell :+91 909510237

Monday, 2 May 2016

ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி

ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி




மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்டகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட
தெய்வம்


அன்னை ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரியே.எல்லா யோகிகளுக்கும் யோகமுதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள்

என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியாரின்பாடல்களும் நூல்களும் 
இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சிததர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை


ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது (இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.
சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.பீஜம் என்றால் விதை எப்படி விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம்.

இந்த தாயை வாலை என்றும் பாலம்பிகா என்றும் அழைப்பர். சித்தர்கள் அனைவரும் தங்களின் பாடலில் வாலை கும்மி பாடி வணங்கி தொடங்குகின்றனர். வாலை தாய் அன்னை அதிபராசக்தியின் 10 வயது பால பருவமாக காட்சியளித்த தோற்றம். சித்தர் களின் தலைவன் முருக பெருமானை வணங்கி வந்தால் அன்னை வாலை தாய் அருள் புரிந்து, சித்தி பெற முடியும். முக்தியடைய முடியும். சக்தியை பெற்று பரம்பொருளுடன் இணைத்து முக்தியடைய முடியும்.

வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.