நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 20 May 2015

தெரிந்துகொள்ள வேண்டிய பூஜையறை டிப்ஸ்!


தெரிந்துகொள்ள வேண்டிய பூஜையறை டிப்ஸ்!

கற்பூரத்துடன் மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும். தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தி மயிலிறகுக்கு உண்டு என்கின்றன ஞான நூல்கள். அதனால், பூஜையறையில் மயிலிறகை வைத்து வழிபடுவது சிறந்தது. மழை நாட்களில், தீப்பெட்டி தீக்குச்சிகள் நமத்துப் போகும். நான்கு ஐந்து அரிசி மணிகளை உள்ளே போட்டுவைத்தால் தீக்குச்சிகள் நமத்துப் போகாது. காலையிலும் மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும் 5 முதல் 6மணி வரையிலான நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றுவது மிக நல்லது. அப்போது வீட்டின் வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால் தேவதைகளின் ஆசி கிட்டும். விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபடுவதால், வீட்டில் சர்வ சுபி ட்சங்களும் பெருகும்.

Tuesday, 19 May 2015

பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுக்கு Menstrual problems




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுக்கு Menstrual problems

நிலப்பனை,பறங்கிச் சக்கை இவற்றை அவித்து இருத்து குடி நீராக குடித்து வர நன்மை .


கருஞ்சீரகம் ,சதக்குப்பை ,பெருங்காயம் சம அளவு பொடியாக்கி பனை வெல்லம் இட்டு பாகாக்கி உணவு உண்பதற்கு முன் காலை ,மாலை மூன்று நாள் மட்டும் கொடுத்து வந்தால் ருது வாகாத பெண் ருதுவாக்கும் .
சீரான மாத விடாய் இல்லாதவர்களும் அருந்தினால் சீராகும்

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை



அத்ரி மலையின் தெய்வீக அனுபவங்கள்




நெல்லை மாவட்டம் அம்பசமுத்திரம்
ஆழ்வார்குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரிமலை அமைந்துள்ளது.

இங்கு அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம். அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.
மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.மேலும் கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது.
சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு. அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.



பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை



சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது
இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.

அத்ரி மகரிஷியின் கோவில்வருகிறவர்கள்
.வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை;






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு
24-05-2015 வைகாசி  மாதம்
 ஞாயிற்று கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்  

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651

Saturday, 16 May 2015

ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி மந்திரம்

    ஸ்ரீ பாலா மந்திரம்



மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட

குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி

முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட

தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.எல்லா யோகிகளுக்கும் யோக

முதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள்

என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியாரின்

பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சிததர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது (இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது விரும்பியவர்கள் நேரில் கேட்டால் விளக்கம் தரப்படும்) பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.

சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.பீஜம் என்றால் விதை எப்படி விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாக சொல்லப்படுகிறது.


ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-
ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|

இதில் சௌம் என்பதை "சௌஹூம் "என்று சொல்லுவது சிறந்தது.

ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்),வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீகரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.

சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.

இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அன்னை.இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு வாழ்ந்து ஆன்மீகத்திலும் ,வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம்.



2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-
ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||


3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-
ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||


முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.

வாழ்க வையகம்|வாழ்க வளமுடன்||

பித்ரு சாபம் நீங்க,பூர்வ ஜன்ம பாபங்களின் தீய விளைவுகள் தீர ,காரியத்தடை நீங்க:-


பித்ரு சாபம் நீங்க,பூர்வ ஜன்ம பாபங்களின் தீய விளைவுகள் தீர ,காரியத்தடை நீங்க:-




ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை அன்று அல்லது ஏதேனும் ஒரு அமாவாசை அன்று ஆரம்பம் செய்யவும்.பின் இயன்ற வரை ஞாயிற்றுக்கிழமைகளில் (நாளை 17.05.2015 அமாவசை) செய்துவர பூர்வ ஜன்ம பாபங்கள் தீரும்,காரியத்தடை நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.ஜாதகத்தில் பித்ரு சாபம் உடையவர்கள் இதைச் செய்ய பித்ரு சாபம் நீங்கி வாழ்வில் மங்களமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கும்.

காலைக்கடன்களை முடித்துக் குளித்தபின் ஈர வஸ்திரத்துடன் சூரியனை நோக்கி கைகூப்பி நின்று கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.

மந்திரம்: ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்| சஹசிவ சூரியாய |வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா



--நன்றி M.சூர்யா

ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம்

ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம்



சென்னை பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) யில் உள்ள ஸ்ரீவைதீஸ்வரன் கோவில் அருகே ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்றுஅமைந்துள்ளது. அந்த ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு இருதெருக்கள் தாண்டி அமைந்துள்ளது, ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவசமாதி ஆலயம். எளிமையான தோற்றத்தோடு , ஒருகாம்பவுண்டிற்குள் அமைந்துள்ளது ஆலயம். ஆஞ்சநேயர்ஆலயம் அருகே விசாரித்தால் , வழி கூறுவார்கள்.
வல்லப சக்தியோடுகூடியதான விநாயகர்திருக்கோலம் முதலில்அமைந்துள்ளது.அதனைஅடுத்து அமைந்துள்ளஅறையில் ஸ்ரீ பைரவசித்தரின் ஜீவ சமாதிஅமைந்துள்ளது. மிகவும்சக்திபடைத்ததாகஅமைந்துள்ளது. பைரவஉபாசனை செய்பவர்கள்அவசியம்தரிசிக்க வேண்டிய இடம் ஆகும்.

Friday, 15 May 2015

பெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம்


பெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம்




கீழே உள்ள இரண்டு பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்து வரவும்.



பரிகாரம் 1:-
பௌர்ணமி அன்று ஆலமரத்தை 108 தடவை வளம் வந்து சர்க்கரை கலந்த நீரை மாற வேறில் ஊற்றி வழிபட விரைவில் திருமணமாகும்.


பரிகாரம் 2:-

ஒரு வளர்பிறை வியாழக்கிழமை அன்று தொடங்கி வியாழக்கிழமைகள் தோறும் ஆலமரம்,அரசமரம் அல்லது வாழை மரத்திற்கு நீர் விட்டு வரத் திருமணத் தடை நீங்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


நன்றி M.சூர்யா