நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 7 January 2017

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை


வைகுண்ட ஏகாதசி நாளில் 


விரதம் இருக்கும் முறை









ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன”. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும் , வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது. தீட்டு காலத்தில்கூட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

மகாபாரதத்தில் கவுரவர்களோடு பாண்டவர்கள அதர்மத்தை எதிர்த்து தர்மத்தை காக்க யுத்தம் செய்து கொண்டிருந்தபோது வைகுண்ட ஏகாதசி நாளன்று அர்ஜுனனுக்குக் கீதையை பகவான் கிருஷ்ணன் போதனை செய்தார். எனவே இந்தநாளை, “கீதா ஜெயந்தி’ என கொண்டாடுகின்றனர். ஏகாதசி விரதத்தின்போது எக்காரணத்தை கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்துவிட வேண்டும்.

ஏகாதசி விரதம் இருக்கும் முறை

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.

2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

3. ஏகாதசி திதி_முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழு_முறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர்_மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதனால் , ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த_நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து (பிரசாதமாக)_உண்ணலாம்.

4. இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது.

5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் உணவு_அருந்துவதை பாரணை என அழைக்கிறோம் .துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில்_படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை_கூறி ஆல் இலையில் உணவு வைத்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். (அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய்_துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.) துவாதசி அன்று காலையில் 21 வகையான காய்கறி சமைத்து உண்ணவேண்டும். இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.

6. துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில்_காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.

7. உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

No comments:

Post a Comment