நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 6 January 2017

மாபெரும் சக்தி உடைய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு



மாபெரும் சக்தி உடைய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு




கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், கொல்லன் கோவை என வேறு பல பெயர்களும் உண்டு. இருப்பினும்

"ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர்தான் முன்பு அனைவருக்கும் தெரிந்தபெயராக இருந்து வந்துள்ளது.

இம்மூலிகை காடுகள்,வனம் , மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 - 50 வருடங்களுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்கு சென்று இக்கிழங்கை சேகரித்துகொண்டு வந்து நாடு ,நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.

நிலத்தில் பூமியின்அடியில் விளையும் கிழங்குவகையான இம் மூலிகைகிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம்முன்னோர்கள் சூட்டினார்கள்.?

பொதுவாக பூமியில் ஊர்ந்துசெல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்துசெல்வதை பார்த்தால் ஓடி ஒளிந்துகொள்ளும். அதே போன்று இக்கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தைவிட்டு உடனே அகன்றுவிடும், ஓடிவிடும்.

இம் மூலிகை கிழங்கை கயிற்றில்கட்டி வீட்டில் தொங்கவிட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப்போலவே தோற்றம் தரும்.

உண்மையில் ஆகாசகருடன் என்ற இம் மூலிகைக்கு மாபெரும் சக்தி உண்டு. "சாகா மூலி" என பெயரும் இதற்குண்டு. ஆம் இம் மூலிகை கிழங்கு சாகாது . இக்கிழங்கை ஒரு கயிற்றில்கட்டி தொங்கவிட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர்வாழும் சக்திகொண்டது.முளைவிட்டு கொடியாக படர்ந்துவிடும்.

இம் மூலிகைகிழங்கிற்கு சில அமானுஷ்யசக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி,தோஷங்களை போக்கும்தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர்வினைகளை ஈர்த்து தன்னைத்தானே அழித்து கொள்ளும் தன்மைகொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீயவிளைவுகளில் இருந்து காக்கப்படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன் :-

இதன் முக்கியகுணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல்கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத்தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும்குணம் கொண்டது. ஆனால் சித்தமருத்துவரின் மேற்பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்புசுவை கொண்டது.

சிறப்பாக பாம்புவிஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில்முறியும். பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாசகருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்னகொடுக்க 2தடவை வாந்தியும், மலம்கழியும் உடனே விஷமும் முறிந்துவிடும்.

No comments:

Post a Comment