நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 28 February 2015

சருமத்தில் வெள்ளை நிறம் மாற

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 

சருமத்தில் வெள்ளை நிறம் மாற


சவுரிப்  பழம் எண்ணெய் சீரகம்மேல்  பூச்சாம்
சிவலிங்கம்  வெண்தோல் நோய்க்  குண் .................குறள்


விளக்கம் :

சவுரிப் பழமும்  கருஞ்சீரகமும்  சேர்த்து  நல்லண்ணெயில்  காய்ச்சி  வடித்த தைலத்தை மேலுக்கு தடவி ஊறவைத்து பின் குளிக்கவும்   இத்துடன்  சிவலிங்கமாகிய  இலிங்க செந்தூரத்தை  தேனில் குழைத்து  இரு வேளை உண்டுவர  வெண்  தோல்  நோய்  தீரும் .


அளவு :

இலிங்க செந்தூரம் ----ஒரு  அரிசி  எடை அளவு

சவுரி பழம் -----1 க்கு  100 கிராம்  கருஞ்சீரகம்  எடுத்துக்கொள்ளவும்





Monday, 16 February 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

அமாவாசை யாகம் மாசி மாத 18.02.2015 புதன் கிழமை
**************************************************************************************
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்


மாசி மாதம் புதன் கிழமை 18-02-2015 அன்று நடைபெறுகிறது

அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி

திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்

ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.

அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்

இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்

யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து

புனித சேஷ்திரமகிமை
***********************************
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்பெற்பட்ட புனித சேஷ்திரம் இது .

.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

cell : +91 98428 58236

சிவனுக்குகந்த மகாசிவராத்திரி

சிவனுக்குகந்த மகாசிவராத்திரி
இந்து மதம் பல தெய்வ வழிபாட்டை ஏற்பதால் விரதங்களையும் பலவாகப் பிரித்துள்ளது. இந்த வகையில் இந்து மதம் கூறும் விரதங்களை தெய்வங்களின் அடிப்படையில் வகுப்போமாயின் சிவ விரதம், சக்தி விரதம், விநாயக விரதம், சுப்பிரமணிய விரதம், விஷ்ணு விரதம், வைரவ விரதம், வீரபத்திர விரதம் என வகைப்படுத்தலாம். இவ்விரதங்களை நாள் விரதம், வார விரதம், மாத விரதம், வருட விரதம் என பிரிக்கலாம். இந்நான்கு கால விரதங்களும் பெளர்ணமி விரதம், சஷ்டி விரதம், நட்சேத்திர விரதம், சதுர்த்தி விரதம் என பிரிக்கப்பட்டுள்ளன.

சிவ விரதத்தினை நோக்கும் போது முக்கிய விரதங்களாக மகா சிவராத்திரி, சோமவாரம், திருவாதிரை, பிரதோஷம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மகா சிவராத்திரி விரதம் சிவனது அருவத்திருமேனியான சிவலிங்கத்தினை வழிபடும் ஓர் விரதமாகும். இவ்விரதம் மாசி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தியில் அனுட்டிக்கப்படுகின்றது. சிவ விரதங்களில் மிகவும் முக்கியத்துவம் உடைய ஓர் விரதமாக இது விளங்குகின்றது. இதனால் சிவனுக்கு உகந்தது சிவராத்திரி என பேசப்படுகின்றது.

சக்திக்கு ஒன்பது ராத்திரி. அது நவராத்திரி. சிவனுக்கு ஒரு ராத்திரி. அது சிவராத்திரி. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பலவகைப் பொருளைத்தரும். சிவமான ராத்திரி என்பதே இவைகளில் மிகப் பொருத்தமானதாகும்.

சிவபிரான் திருவருளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் சைவமக்கள் அனுட்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும். சிவராத்திரி என்ற தொகைச் சொல் சிவனை விசேடமாக வழிபடுவதற்குரிய இரவு என பொருள்படும். சிவராத்திரி விரதம் மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, மாத சிவராத்திரி என மூவகைப்படும். மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியில் நோற்கப்படுவது மகா சிவராத்திரி எனப்படும். அமாவாசையும் சோமவாரமும் கூடிய தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது யோக சிவராத்திரி ஆகும். ஆண்டின் மாதந்தோறும் தேய்ப்பிறைச் சதுர்த்தசியில் அனுட்டிக்கப்படுவது மாத சிவராத்திரி எனப்படும். இம் மூவகைச் சிவராத்திரிகளில் இக்காலத்தில் மகா சிவராத்திரியே பெரிதும் பின்பற்றப்படுகின்றது.

மாசி மாதம் கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் சிவ பெருமான் லிங்கத்தில் தோன்றினார். அன்றே மகா சிவராத்திரி ஆதலால் இப்பொழுதும் அந்த இரவில் உலகிலுள்ள எல்லா இலிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார். அன்று சிவபூஜை எல்லோருக்கும் விருப்பத்தைக் கொடுக்கக் கூடியது. அன்று காலை குளித்துக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சிவாலயம் சென்று பஞ்சாட்சரம் அல்லது சிவ நாமத்தை ஜெபிக்க வேண்டும். மகா சிவராத்திரி தினத்தின் முன்தினமான திரயோதசியில் ஒருவேளை பகல் உணவருந்தி மறுநாள் முழுவதும் உபவாசமிருந்து சிவராத்திரியின் மறுதினம் பாரணையில் உணவுண்ணல் விரத விதியாகும். மேலும் சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது விழித்திருந்து சிவாலயத்தில் நடைபெறும் நான்கு ஜாமப் பூஜை வழிபாடுகளின் போது இலிங்க தரிசனம் செய்தல் மற்றொரு முக்கிய விதியாகும்.

சிவபூஜை விதி தவறாமல் நான்கு ஜாமத்தும் ஜாமத்திற்கு ஒரு முறையாகப் பூஜை செய்ய வேண்டும்.

முதலாம் ஜாமம் : பால், தயிர், நெய், கோசலம், கோமேயம் என்னும் இவ்வைந்தும் கலந்த பஞ்ச கவ்வியத்தில் அபிஷேகம் செய்து வில்வம் சாத்தி தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்..அச்சமயம் பயற்றம் பருப்பு, சேர்ந்த பொங்கல் நிவேதித்து தூப தீப ஆராதனைகள் செய்து இருக்கு வேதம் ஓதி இரு கை கூப்பி அர்க்கியம் கொடுத்து அஷ்டாங்கமாக வணங்கி வழிபடல் வேண்டும்.

இரண்டாம் ஜாமம் : பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்து சந்தனத்துடன் தாமரை மலரும் சாத்தி துளசியால் அர்ச்சித்து பாயாசம் நிவேதித்து யசுர் வேதம் ஓதி வணங்க வேண்டும்.

மூன்றாம் ஜாமம் : தேனால் அபிஷேகம் செய்து அரைத்த பச்சைக் கற்பூரத்துடன் சாதிமுல்லை மலர் சாத்தி, முக்கிளையுடன் கூடிய வில்வ தளத்தால் அர்ச்சித்து எள், அன்னம் நிவேதித்தும் சாம வேதம் ஓதி வழிபடல் வேண்டும்.

நான்காம் ஜாமம் : கருப்பஞ் சாற்றினால் அபிஷேகித்து அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலரும் சாத்தி நீலோற்பல மலரால் அர்ச்சித்து சுத்த அன்னம் நிவேதித்து அதர்வ வேதம் ஓதி வழிபடல் வேண்டும்.

இவ்வாறு நான்கு ஜாமத்தும் நித்திரை நீங்கிப் பூஜித்து மறுநாள் அதிகாலையில் புனித நீராடி அனுஷ்டானம் செய்து தமது தீட்சா குருவைத் தியானித்து தக்கவாறு தானம் தந்து சூரியன் உதித்து ஆறு நாளிகைக்குள் பாரணை செய்ய வேண்டும். இவ்வறு 24 வருடம் விரதம் நோற்றுப் பின் கோதானம், பூதானம், சுவாணதானம் முதலியன தந்து விரதத்தைப் பூர்த்தி செய்வோர் சிவகதி அடைவர்.

அறிந்தோ அறியாமலோ கூட ஒருவன் சிவராத்திரி அன்று விழித்திருந்தால் புண்ணியம் கிட்டிவிடும். சிவராத்திரியன்று விழித்திருக்க வேண்டியது தானே முக்கியம் என நினைத்து சிலர் சினிமா கொட்டகைகளுக்கும், நாடகக் கொட்டகைகளுக்கும் சென்று பொழுதைக் கழிக்க விரும்புகின்றார்கள். சிவராத்திரியின் போது தூங்காமல் இருந்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் சிவராத்திரியின் நோக்கம் அதுவல்ல. சிவராத்திரி நாள் இரவில் நான்கு ஜாமத்திலும் சிவலிங்க வழிபாடுகளைத் தரிசித்தும், வழிபாடு செய்தும் சிவபெருமானைச் சிந்தித்திருந்து நற்பேறு பெற வேண்டும் என்பதே உண்மையாகும். சிவராத்திரியன்று சிவன் கோயில்களிலோ மற்றைய கோவில்களிலோ நான்கு ஜாமமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டும் தானதருமங்கள் செய்தும் சிவபெருமானின் புகழ் பாடியும் சிவபுண்ணியம் அடையலாம்.

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்!!

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்!!


1329683215356


சிவ வழிபாடுகளில் முக்கியமானது மகாசிவராத்திரி விழா. இது மிகவும் சிறப்பு வாய்ந்த சிவ வழிபாடாகும். இதன் மேன்மையை உணர்ந்த ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானிடம் மகாசிவராத்திரி பூஜைமுறைகளை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டு அதன்படி வழிப்பட்டார் என்கிறது சிவபுராணம்.

வேடன் சூதமுனிவரிடம் நைமிசாரணியவாசிகள் மகா சிவராத்திரி மகிமையை பற்றி கேட்டார்கள். அதற்கு சூதமுனிவர் சிவராத்திரியால் பயன் அடைந்த வேடனை பற்றி கூறினார். அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

குருத்ருஹன் என்ற வேடவன் ஒருவன் காட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தான். ஒருநாள் வேட்டைக்கு சென்றபோது எந்த மிருகமும் கிடைக்கவில்லை. அதனால் வருத்தத்துடன் வீடு திரும்பினான். வேடனின் வயதான பெற்றோர், குழந்தைகள், வேடனுடைய மனைவி ஆகியோர் அன்று உணவு இல்லாததால் பசியால் அவதிப்பட்டார்கள். நாளை எப்படியாவது வேட்டையாடி ஒரு மிருகத்தையாவது வீட்டுக்கு எடுத்து வர வேண்டும் என்று தீர்மானத்துடன், மறுநாள் காட்டுக்கு சென்றான். தன் தாகத்திற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ள, ஓடை பக்கமாக வந்து பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு பெரிய வில்வமரத்தில் ஏறி உட்கார்ந்துக்கொண்டான். ஏதாவது ஒரு மிருகம் கண்டிப்பாக இந்த வழியாக வரும் என்பது அவன் எதிர்பார்ப்பு.

முதல் ஜாமத்தில் ஒரு மான் வேடன் கண்ணில்பட்டது. அதை கண்ட வேடன், வில்லை எடுத்து மானை குறி வைத்தான். அப்போது தன் தாகத்திற்காக தண்ணீர் வைத்திருந்த பாத்திரம் அசைந்ததால், சிறிதளவு தண்ணீர் வில்வமரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல்பட்டது. அத்துடன் வில்ல இலையும் எதர்ச்சையாக சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிப்பது போல் விழுந்தது.

வேடன் தன்னை குறி வைத்ததை அந்த பெண் மான் பார்த்துவிட்டது. “என்னை கொல்வதற்கு முன் ஒரு உதவி செய். நான் என்னுடைய வீட்டுக்கு சென்று என் குழந்தைகளை பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்.” என்றது. மிருகங்களின் மொழி அறிந்த வேடனும், “நீ திரும்பி வருவாய் என்று உன்னை நம்புகிறேன். ஆனால் நீ என்னை ஏமாற்றினால், உன் குட்டிகளையும் சேர்த்தே கொன்றுவிடுவேன்.” என்று எச்சரித்து அனுப்பினான். மான் பேசும் மொழியை வேடன் எப்படி புரிந்துக் கொண்டான்? என்று சிலருக்கு கேள்வி எழலாம். பல யுகங்களுக்கு முன்பு எத்தனையோ அற்புதங்கள் ஆற்றல்கள் மனிதர்களுக்கு இருந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் மிருகங்களின் சப்தத்தை ஒரு மொழியாக புரிந்துக்கொள்வதும். சரி நாம் கதைக்கு வருவோம்.

அந்த பெண் மான், வேடனிடம் “திரும்ப வருவேன் என்னை நம்பு” என்ற கூறிவிட்டு சென்றது. வேடனும் அந்த பெண்மானுக்காக காத்திருந்தான். அந்த மான் கிடைத்தால் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் இன்று ருசியாக சாப்பிடுவார்கள் என்று ஆனந்த கனவில் இருந்தான். இரண்டாவது ஜாமம் வந்தது. அந்த பெண்மான் வருவது போல தெரியவில்லை. இதனால் கோபமாக தூங்காமல் மரத்தின் மேல் அசைந்து அசைந்து உட்பார்ந்தான் வேடன்.

அப்போதும் வேடனின் பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் மீண்டும் வில்லமரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல்பட்டது. அத்துடன் வில்லஇலையும் அந்த சிவலிங்கத்தில் பட்டது. அந்த நேரத்தில் ஒரு ஆண் மான் வருவதை கண்ட வேடன், அந்த மானை குறி வைத்தான். இதை பார்த்த அந்த ஆண் மானும் தப்பி ஓடி முயற்சிக்காமல் வேடனிடம் பேச ஆரம்பித்தது.

“வேடனே எனக்கு மனைவி மக்கள் இருக்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன்.” என்றது. இதை கேட்ட வேடன் படுகோபமாக வில்லை எடுத்தான். அந்த நேரம் மூன்றாம் ஜாமம். மீண்டும் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் பட்டு, வில்ல இலையும் லிங்கத்தின் மேல் பட்டது. மானை பார்த்த வேடன் கோபமாக, “நான் ஏற்கனவே ஒரு பெண் மானிடம் ஏமாந்தேன். மீண்டும் ஏமாற மாட்டேன். உன்னை கொல்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.” என்றான் வேடன்.

ஸ்ரீ ராமருக்கு உதவியவன் “இரு இரு. சற்று பொறு. என்னை நம்பு. நான் சிவபக்தன். அதுவும் இன்று சிவராத்திரி. நீ இருக்கும் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வழிபடவே வந்தேன். சிவ பக்தன் ஆகிய நான் பொய் சொல்ல மாட்டேன்.” என்றது ஆண் மான். இதை கேட்ட வேடன், பரிதாபபட்டு, “சரி போ. ஆனால் சீக்கிரம் வந்துவிட வேண்டும்.” என்ற நிபந்தனையுடன் ஆண் மானை அனுப்பினான். நான்காவது ஜாமத்திலும் வேடன் நித்திரை இல்லாமல் தண்ணீர் குடிக்கலாம் என்று அருகில் இருந்த பாத்திரத்தை எடுக்கும் போது, அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் சிவலிங்கத்தின் மீது பட்டது. மீண்டும் வில்லஇலையும் மரத்தில் இருந்து உதிர்ந்து சிவலிங்க திருமேனில் விழுந்தது.

அப்போது, ஆண்மானும் பெண்மானும் சொன்னதுபோல் வேடன் முன்னே வந்து நின்றது. “வேடனே…நாங்கள் சொன்னது போல வந்துவிட்டோம். நீங்கள் எங்களை கொன்று சாப்பிடுங்கள்.” என்றது மான்கள். மான் கூறியதை கேட்ட வேடன், “சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டீர்கள். மிருகங்களான உங்களுக்கே நேர்மை இருக்கும்போது, நான் மனிதன் என்பதை நானும் நிரூபிக்க வேண்டும். அதனால் உங்களை கொல்ல எனக்கு விருப்பம் இல்லை. பத்திரமாக திருப்பி செல்லுங்கள்.” என்றான் வேடன்.

வேடன் சொன்னதை கேட்ட ஆண் மானும் பெண் மானும் துள்ளிக் குதித்தபடி வில்வமரத்தை மகிழ்ச்சியுடன் சுற்றி வந்து ஓடி மறைந்தது. அந்த மான்களின் மகிழ்ச்சியை கண்டு வேடன் மிகவும் மகிழ்ந்தான். பிறகு, “ஈஸ்வரா…” என்று வாய் திறந்து சொல்லி மரத்தில் இருந்து இறங்கினான் வேடன். அந்த சமயம், சிவபெருமான் தோன்றினார். இறைவனை நேரில் கண்ட வேடன் அதிர்ந்து போனான்.

“குருத்ருஹன். உன்னை அறியாமல் நீ சிவபூஜை செய்தாய். அத்துடன் என் நாமத்தையும் உச்சரித்தாய். உன் பாவ கர்மாக்கள் தீர்ந்தது. இனி வறுமை இல்லாமல் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்வாய். அடுத்த பிறவில் நீ குகன் என்று அழைக்கப்படுவாய். ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமரை தரிசித்து, பிறவி இல்லா பெருவாழ்வை பெறுவாய்.” என்று ஆசி வழங்கினார் ஈசன்.

இதை, நைமிசாரணியவாசிகளிடம் சொன்னார் சூத முனிவர். வேடன், ஒரு மகாசிவராத்திரி அன்று தன்னை அறியாமல் பூஜை செய்ததற்கே நல்ல பலன் பெற்றான்.

ஆனால் பல வருடங்கள் மகாசிவராத்திரி பூஜை செய்கிறோம் எங்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே என்று சிலருக்கு கேள்வி எழலாம். வங்கியில் லோன் போட்டு வீட்டை வாங்குகிறீர்கள். சில கடன் ஐந்து வருடங்கள் இருக்கும். சில கடன்கள் பத்து-பதினைந்து வருடங்கள் இருக்கும். நீங்கள் தவனையை சரியாக கட்ட கட்ட கடன் சுமை குறைவதை போல, நாம் மகாசிவராத்திரி வழிபாடு செய்ய செய்ய நம் நீண்ட கால கர்மவினை படிபடியாக குறையும். கடன் தீர்ந்தால் சொத்து திரும்ப கிடைப்பதை போல, கர்மவினைகள் தீர்ந்தால் தலைமுறை தலைமுறையாக இராஜயோக வாழ்க்கை அமையும்.

வீட்டில் சிறிய அளவில் சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பவர்கள், சிவலிங்கத்தின் நான்கு ஜாமத்திலும் மலர்கள், பன்னீர், வில்வ இலைகளால் பூஜிக்க வேண்டும். நான்கு ஜாமத்திலும் பூஜிக்க முடியாதவர்கள், இரவு பண்ணிரெண்டு மணிக்கு சிவபூஜை செய்தாலு்ம் பலன் கிடைக்கும். மறுநாள் சிவாலயம் சென்று வழிபடுபவது இன்னும் நல்லது.

முருகப்பெருமான், சூரியன், இந்திரன், யமன், அக்கினி, குபேரர் போன்றவர்கள் மகாசிவராத்திரி பூஜை செய்து பலன் அடைந்தார்கள். அதுபோல பிரம்ம தேவன், மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ததால் சரஸ்வதி தேவி பிரம்ம தேவனுக்கு மனைவியாக அமைந்தார்.

ஸ்ரீமகாவிஷ்ணு இந்த சிவராத்திரி விரதத்தை கடைபிடித்ததால் சக்ராயுதத்தை பெற்றார். அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியை மனைவியாக அமையப் பெற்றார். சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி.

பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்திலும் பூஜை செய்தார். மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, “ஓம் நமசிவாய – ஹர ஹர மஹாதேவ” என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான்.

Sunday, 15 February 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி முன்றாம் ஆண்டு பாத யாத்திரை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி உலக நன்மைக்காகவும்,மழை பொழீயவும், சுவாமிஜி - மாதாஜி அவர்கள் மதுரை ஸ்ரீ மீனாட்சி அன்னை உடன்னமர் ஸ்ரீ சுந்தரெஸ்வரர் சுவாமி கோவில் கிழக்கு கோபுர வாயிலில் இருத்து
03-03-2015 செவ்வாய் கிழமை மாசி மாத புண்ணிய தினத்தன்று காலை 5.00 மணிக்கு முன்றாம் ஆண்டு பாத யாத்திரை புறப்பட்டு 05-03-2015 வியாழகிழமை மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில் சென்று அடையும்.
பக்தர்கள் உலக நன்மைக்காகவும், நாட்டு நலன்க்காகவும்,பக்தர்கள்குடும்ப நலன்க்காகவும் பாத யாத்திரையில் கலந்து கொள்ள
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா   வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
98428 58236

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி ,ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலின் அருகில் மலைமேல், . அமைந்து உள்ளஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு 16-02-2015 திங்கட் கிழமை மாசி மாத உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236

Wednesday, 11 February 2015

உடல் நலம் பாதிக்கப்படுவதால் குழந்தை பெற இயலாமை மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்மக்கள் உணவு ,உறங்குதல், பழக்கவழக்கம் இவற்றால் உடல் நலம் பாதிக்கப்படுவதால் குழந்தை பெற இயலாமை மருந்து
இவற்றை தவிர்க்க குறள் காட்டும் வழியில் நடந்தால் வாழ்வில் வளம் பெற்று நன் மக்களையும் பெறலாம் .மிக எளிமையானது .


கசகசா வால்மிளகு கற்கண்டு பாதாம்
வசமுடற்காம் வன்மையுறும் தாது .............குறள்


விளக்கம் :
கசகசா ,வால்மிளகு,கற்கண்டு வாதுமை பருப்பு (பாதாம் )
இவை சேர்த்து வெல்லத்தில் பாகு செய்து காலை, இரவு அருந்திவர
உடலுக்கும் மனத்திற்கும் நன்மை தரும்
தாது நலம் பெரும்
( 16 நாள் நெல்லிக்காய் அளவு )