விளக்கில் வசிக்கும் லட்சுமி

வீட்டில் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றும் போது எத்தனை முகங்கள் ஏற்றவேண்டும் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. ஒருமுகம் ஏற்றினால் மத்திம பலனைத்தரும். இரண்டு முகம் ஏற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மூன்று முகம் ஏற்றினால் புத்திர சுகத்தை கொடுக்கும். நான்கு முகம் ஏற்றினால் மாடு, கன்று என்று கால்நடைச் செல்வம் பெருகும். ஐந்துமுகம் ஏற்றினால் எட்டுவிதமான செல்வச்செழிப்பும் பெருகும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தீபத்தை கொண்டு செல்லக்கூடாது என்கின்றன சாஸ்திரங்கள்
No comments:
Post a Comment