நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 4 February 2016

பாவங்களுக்கே பாவம் போக்கும் கும்பகோணம் மஹா மகம்

பாவங்களுக்கே பாவம் போக்கும் கும்பகோணம் மஹா மகம்
பிப்ரவரி 13.02.2016 மாசி 1 முதல் 22.02. 2016 மாசி 10வரை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஈரெழு பதினான்கு லோகங்கலில் உள்ள அனைத்து நதிகளும் தங்களிடம் நிராடியாவரிடம் பெற்ற பாவங்களை மகாமகம் குளத்தில் நிராடி பாவங்களை போக்குவார்கள் . மகாமகம் குளக்கரையில் உள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி அம்மன் உடன்னமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்தருலுலி பின் ஸ்ரீ காசி விசாலாட்சி அம்மன் உடன்னமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர்,ஸ்ரீ மங்களாபிம்கை உடன்னமர்
ஸ்ரீஆதி கும்பேஸ்வரார் மற்றும் அனைத்து நதிகளுக்கும் திர்த்தவாரி மாசி மகம் நட்சத்திரல் நடை பெறும்
கும்பகோணம் மஹா மகம் பிப்ரவரி 13.02.2016 மாசி 1 முதல் 22.02. 2016 மாசி 10வரை


மகாமகம்குளம் , பொற்றராமரை குளம்,காவேரி ஆறு நிராடி

மஹா மகம் திரு விழாவில் கலந்து கொண்டு
ஸ்ரீ மங்களாபிம்கை உடன்னமர் ஸ்ரீஆதி கும்பேஸ்வரார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைகின்றேன்

No comments:

Post a Comment