நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 15 December 2015

ஸ்ரீ மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்!

ஸ்ரீ மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்!
சுக முனிவர் ஒரு முறை
ஸ்ரீமகாலட்சுமிதேவியிடம், ‘‘செல்வம் உட்பட சகல வளங்களையும் அருளும் தேவியே! பக்தர்களின் வீடுகளில் தாங்கள்நித்திய வாசம் செய்ய வேண்டுமெனில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’’ என்று கனிவுடன் கேட்டார்.
‘‘வெள்ளை மாடப் புறாக்கள் வாழும் இடம், அடக்கமும் அமைதியும் கொண்ட பெண்கள் வாழும் இல்லம், நவதானியங்கள் நிறைந்துள்ள இடம், தானம் செய்து எல்லோருடனும் பகிர்ந்து உண்டு வாழும் நல்ல மனிதர்கள், இனிமையான சொற் களைப் பேசுபவர்கள், பணிவு நிறைந்தவர்கள், நாவை அடக்கியவர்கள், சாப்பிடுவ திலேயே நீண்ட நேரத்தைக் கழிக்காதவர்கள், பெண் களை தெய்வமாக மதிப்பவர்கள் போன்றவை அனைத்திலும் நான் நித்திய வாசம் செய்வேன்.
மேலும் சங்கு, நெல்லிக்காய், கோமியம், தாமரை மலர், வெண்மை நிற உடைகள், சுத்தமான ஆடைகள், சுத்தமான இல்லங்கள் இவற்றிலும் நான் வாசம் செய்கிறேன். தூய உள்ளம் கொண்டு பரிசுத்தமாக இருப்போர் அனைவரிடத்திலும் நான் நிச்சயம் இருப்பேன்!’’ என்று சுக முனிவருக்குப் பதில் கூறினாள் ஸ்ரீமகாலட்சுமி.

No comments:

Post a Comment