நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 12 February 2018

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்





நமது இணைய தளம் , சில அபூர்வமான அதே சமயம் சக்தி வாய்ந்த ஸ்தலங்களை , நமது வாசர்களிடம் பகிர்ந்து கொள்வதை , கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கிறது.


எப்படி கும்பகோணம் பகுதியில் நவக்கிரகத்தின் கோயில்கள் அமைந்துள்ளனவோ,அதே போல,தென் தமிழகத்தில் நவக்கிரகங்கள் சிவபெருமானின் அம்சமாக கோயில் கொண்டுள்ளன.

சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன.


இவை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் பெரும்பாலும் வழிபாடு செய்யப்பட்டுவருகின்றன.ஏனெனில்,இந்த கோயில்கள் பற்றி சிலருக்கே தெரிந்திருக்கின்றன.


அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியை வேண்ட, ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், ஸ்ரீ கைலாசநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார் அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களான

1. பாபநாசம்

2. சேரன்மாதேவி

3. கோடகநல்லூர்

4. குன்னத்தூர்

5. முறப்பாடு

6. ஸ்ரீ வைகுண்டம்

7. தென் திருப்பேரை

8. இராஜபதி

9. சேர்ந்த பூமங்கலம்


பொதிகைமலை எனப்படும் பாபநாசம் மலையில் பாணதீர்த்தம் அருவியின் அருகில் சூரியபகவானின் அம்சமான சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்தக்கோவில் காலை மணி 6.30 முதல் 11.30 வரையிலும்,மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர்கள் திரு.சதாசிவபட்டர் மற்றும் திரு.ஹரிகரசுப்பிரமணியன் விக்கிரமசிங்கபுரம் தெற்குமாடவீதியில் வசிக்கின்றனர்.


சேரன்மகாதேவியில் சந்திரபகவானின் அம்சமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.இக்கோவில் காலை 7 முதல் 9 வரையிலும்,மாலை 5.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சந்துரு,சேரன்மகாதேவியில் அக்ரஹாரம் தெருவில் வசிக்கிறார்.இவரது செல்:9442226511.

கோடகநல்லூரில் செவ்வாய்பகவான் சிவபெருமானாக எழுந்தருளிவருகிறார்.இந்தகோவில் காலை 7 முதல் 8.30 வரையிலும்,மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சுரேஷ் சிவாச்சாரியார் அவர்களின் போன்:04534-261849.

குன்னத்தூரில் ராகுபகவானின் அம்சத்துடன் இருப்பவர் சிவபெருமான்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 6 வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் என்ற சந்துரு திருவேங்கடநாதபுரம் என்ற இடத்தில் வாழ்கிறார்.இவரது செல்:9442018567,9442018077.

முறப்பநாடு என்ற இடத்தில் உள்ள சிவபெருமானே குரு பகவானாக அருள்பாலிக்கிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் பெயர்:திரு.செல்லப்பா ஐயர்,இவரது செல்:9842404559.

ஸ்ரீவைகுண்டத்தில் சிவபெருமான் சனிபகவானின் அம்சமாகத் திகழ்கிறார்.ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருப்பவர் பெருமாள்.அவரைத் தாண்டி ஒரு தெரு தள்ளிதான் சிவபெருமான் இருக்கிறார். சனிப்பிரதோஷ நாள் மட்டும் மாலை 4.30 முதல் 6.00 வரை சிவ வழிபாடு செய்தால் 5 வருடங்களுக்கு தினமும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது சைவசித்தாந்த விதிமுறையாகும். இக்கோவில் காலை 7 முதல் 10 மணி வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கே.சிவகுருபட்டர்.கோவில்வாசல்.போன்:04630-252117.

தென் திருப்பேரையில் புதன் பகவானின் அம்சமாக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கமலேஷ் பட்டர் செல்:9365889291.

கேது பகவானின் அம்சம் பெற்ற சிவபெருமான் ராஜபதியில் இருக்கிறார்.இக்கோயில் ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையில் இருக்கின்றது.இக்கோவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். குருக்கள் : திரு.லட்சுமணன்,திரு.ஜோதி செல்:9787382258,9942062825.

சுக்கிரபகவானின் அம்சமான சிவபெருமான் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் வாசம் செய்கிறார்.இக்கோவில் காலை 7.30 முதல் 9.30 வரையிலும்,மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர்கள் திரு.குமாரசுவாமிபட்டர் மற்றும் திரு.ஈஸ்வரபட்டர் செல் மற்றும் போன்:9486178063,04639-239319.

பாபநாசத்திலிருந்து சேரன்மகாதேவி 22 கி.மீதூரத்திலும்,
சேரன்மகாதேவியிலிருந்து கோடகநல்லூர் 15 கி.மீ.தூரத்திலும்,
கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் 12 கி.மீ.தூரத்திலும்,
குன்னத்தூரிலிருந்து முறப்பநாடு 18 கி.மீ. தூரத்திலும்,
முறப்பநாட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் 20 கி.மீ.தூரத்திலும்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென் திருப்பேரை 6 கி.மீ.தூரத்திலும்,
தென் திருப்பேரையிலிருந்து இராஜபதி 4 கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளன.

ஆக மொத்தம் 97 கி.மீ.தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.

ஆன்மீக சுற்றுலாவில் ஆர்வம் இருக்கும் அன்பர்கள், தவறாமல் பயன் படுத்திக் கொள்ளவும்

மஹா சிவராத்திரி விரதமுறை

மஹா சிவராத்திரி விரதமுறை
13.02.2018 செவ்வாய்கிழமை   
மஹா சிவராத்திரி




இந்து மதம் கூறும் மேன்மை மிக்க விரதங்களில் மஹா சிவராத்திரி விரதமும் ஒன்றாகும். பரம்பொருளாகிய சிவனை முன்னிலைப் படுத்தி நோற்கப்படும் இவ்விரதமானது மாசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் வருவதாலேயே இதனை மஹா சிவராத்திரி என்று அழைப்பர். சிவராத்திரி விரதம் பற்றி பண்டைய புராணங்கள் நமக்குப் பல கதைகளைக் கூறினாலும்... பார்வதி தேவி பரமேஸ்வரனை நோக்கிக் கடுந்தவம் இயற்றி வரம் பெற்ற கதையே சிறப்பாகக் கொள்ளப் படுகிறது. ஊழிக்காலம் உலகனைத்தையும் சிவ னுக்குள் ஒடுக்கியது. உலக இயக்கம் நின்று போனது. கோள்கள் இயங்கவில்லை, பொழுது புலரவில்லை. தேவர்கள் முதற் கொண்டு எல்லா ஜீவராசிகளுமே தனக் குள் அடங்கிவிட்டதை எண்ணி நீலகண்டன் நீண்ட தவமியற்றத் தொடங்கிவிட்டான். அன்பே வடிவான அன்னை பராசக்தி அருள் நிறைந்தவளல்லவா. மறுபடியும் உலகம் இயங்க வேண்டும், உயிர்கள் மலர வேண்டும், கோள்கள் நிதம் தவறாது இயல் பாய்ச் சூழல வேண்டும் என்றெண்ணினார். இவற்றுக் கெல்லாம் அருள் பாலிக்க வேண்டிய சிவனோ கண்களை மூடிக் கொண்டு யோகத் தவநிலை கொண்டு விட்டான். அவன் கண் திறப்பது எப்போது? தனக்கு வரம் கிடைப்பது எப்போது? கலங்கிப் போன அன்னைக்கு ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
சிவன் பாதம் பணிந்து அவன் முன்னே அமர்ந்து அவளும் கடுந்தவம் இயற்றத் தொடங்கினாள். காலநேரம் எதுவும் கணக்கிட முடியாத நிலை..... அன்னையின் விரத காலம் நீண்டு கொண்டே போனது.




ஞானக் கண்ணால் அதையுணர்ந்த மகா தேவன் மனமிரங்கினார். தேவி என்ன வரம் வேண்டும் என்றபடியே அவர் கண்களைத் திறந்ததும் கோள்கள் எல்லாம் இயங்கத் தொடங்கின. உலகம் ஒளிமய மாகியது. அன்னையின் மனமோ ஆனந்தக் களிப்பெய்தியது. உலகமெல்லாம் பழையபடி உயிர்ப்புற வேண்டும் சுவாமி நியதிப்படி கோள் களெல்லாம் இயங்க வேண்டும். அத்தோடு நான் வணங்கி வரம் பெற்ற இத்திருநாளை என்னைப் போல் வணங்கி விரதம் இருந்து, விழித்திருந்து பூஜிப்போரை நீங்கள் ஆசீர்வதித்து அவர்கள் அனைவரும் ஐஸ்வரிய பாக்கியங்களைப் பெற்று வாழ அனுகிரகிக்க வேண்டும் ஐயனே என்று கேட்டுக்கொண்டாளாம். கருணைக் கடலான சிவனும் தன் தேவியின் வேண்டுதலை ஒரு சிறு மாற்றத்துடன் ஏற்று வரமளித்தருள் பாலித்து விட்டாராம். தேவி... கால நேர வரையறையில்லாது கடுந்தவமியற்றிய உன்போல். விரதமிருக்க இந்த உலகத்தில் மானிடர்களால் ஒருபோதும் முடியாது.



எனவே மாசிமாத கிருஷ்ண பட்சத் சதுர்த்தஸியில் வரும் மஹா சிவராத்திரி தினத்தன்று இப்புனித விரதத்தை நான்கு ஜாமம் விழித்திருந்து பூஜனை செய்வோ ருக்கு பூரண பலன் கிடைக்க அருள் பாலிப்பேன் என்று வரங் கொடுத்தாராம். இதிலிருந்து சிவராத்திரி விரதத்தை முதன் முதலில் கடைப் பிடித்தருளியவர் அன்னை பராசக்திதான் என்ற உண்மையை நாம் உணரலாமன்றோ. மாயவன் அடிமுடி காணாது நின்ற போது அருட் பெருஞ் ஜோதியாக சிவன் எழுந்தருளிய தினமும் மஹா சிவராத்திரி தினம் தான் என்று புராணங்களுரைக்கின்றன.
காட்டிலே வேட்டையாடச் சென்ற வேட னொருவன் வழித்தடம் மாறி இருளுக்கும், விலங்கினங்களுக்கும் அஞ்சிக்கொண்டு ஒரு வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டானாம்... தூக்கமோ கண்ணைச் சுழற்றுகிறது. தூங்கிவிட்டால் மரத்தினின்று விழுந்துவிட நேரும் ஆதலால் தூங்காமல் இருக்க வேண்டி மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெடுத்து நிலத்தில் போட்டு வந்தானாம். அவன் போட்ட இலைகள் சாதாரண இலைகளல்ல. அவை சிவனார்க்குகந்த வில்வந் தழைகளாம். அந்தப் புனித பத்திரங்கள் யாவும் வீழ்ந்த இடமே மரத்தின் கீழ் உருவாகியிருந்த சிவலிங்கத்தின் மீதாம். பூஜை புனஸ்காரங் கள் பண்டிகைகள், விரதங்கள் என்று எதையுமே அறியாத வேடனொருவன் தன்னையே அறியாமல் செய்த வில்வார்ச் சனையால் ஈற்றில் பேரின்பப் பெறுவாழ் வெய்தினானாமெனில் சிவராத்திரி தினத்தின் மகிமையை அறிய இதைவிடவேறு சான்று களும் நமக்கு வேண்டுமோ. ஒரு சிவராத்திரி தினத்திலே இந்த வில்வர்ச்சனை நிகழ்ந்தமையே வேடனுக்கு அப்போது அமைந்ததாகச் சிவபுராணம் கூறுகிறது.




சிவராத்திரி விரத முறை :

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,
த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்


என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபிரான்,சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும். மகாசிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம். இங்ஙனம் விரதமிருந்துவர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும். தென்னகத்திலே திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.

இலங்கயிலும் திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன. கனடாவிலும் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் லிங்கேஸ்வரருக்கு நாமே அபிஷேகம் செயும் வசதிகள் செய்யப்பெற்றுள்ளன. மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.

சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.



சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும். "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.
"நாமும் இந்த விரத்தை கடைபிடிப்போம் வாழ்வில் வாளமாய் வாழ்வோம் "

தென்னாட்டுடைய சிவனே போற்றி!
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

Monday, 1 January 2018

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், அலங்காரம் , ஆராதனை

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், அலங்காரம் , ஆராதனை























அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடனமார்

ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 04-01-2018 வியாழன் கிழமை  ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார்
ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
 மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாகசுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651

மேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது





அமானுசியம், அற்புதங்கள் நிறைந்த
அத்ரி மலை






பிரபஞ்சத்தின் ஜீவநாடி அறுந்து போகாமலிருப்பதற்காக இயற்கை அன்னை பல நற் கொடைகளை வாரி வழங்கியிருக்கிறாள். அந்த இயற்கைவளம் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல பல ஆன்மீக அதிசயங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆணித்தரமான உதாரணம் அத்ரி மலையும் அங்கே உடனுறையும், சிவன் வடிவில் உள்ள அத்ரி ஆலயமே.

கையடக்கமான அந்த ஆலயம், அன்றாடம் ஆன்மீக பக்தர்களை ஈர்த்த வண்ணமிருக்கிறது.

எந்த ஒரு பொருளையும் நினைத்த வேளையில் அடைந்து விட்டால் அதற்கு மதிப்பு குறைவு தான். சிரமப்பட்டு, கஷ்டங்களை அனுபவித்துப் பெறும் பொருள், அதுவே பரம்பொருள் ஆனாலும், அது தரும் சுகமும், அமைதியும், வாழ்நாள் முழுக்க மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடும்.

அத்ரிமலை ஆலயத்தின் வரலாற்றுக்குள் போவதற்கு முன், அந்த ஆலயம் சென்றடைவதற்கான வழியினை முதலில் பார்த்து விடுவது நல்லது.

நெல்லை மாவட்டத்தின் நகரமான தென்காசி அல்லது அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ஆழ்வார்குறிச்சிக்கு, பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 6 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.

சுத்தமான பிராணவாயுக்காற்றோடு மூலிகை மணத்தையும் கொண்ட காற்று வீசும் சூழல். சுவாசிக்கும் மனிதர்களின் இதயத்தைச் சுத்திகரிக்கும். புத்துணர்ச்சியோடு கரடு முரடானபாதையைக கடப்பது கூட அங்கே செல்லும் பக்கதர்களுக்குத் துன்பமே தெரியாது.


அப்படி ஒரு சிறப்பம்சம்.

சரி. இனி ஞான விஷயத்திற்கு வருவோம்.

ஆன்மீக சரித்திரம் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறது.

இன்றைக்கு சரியாக 2.500 ஆண்டுகளுக்குச் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணமாக வந்த மகாமுனிவர் தான் அத்ரி.
தனது பக்தர்களோடு வந்த அத்ரி முனிவர் அந்த மலையில் சிவபெருமானை வேண்டிக் கடும் தவம் செய்தார். தனது அடியாரின் கடும் தவத்தை மெச்சிய சிவபெருமானும் அத்ரி முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.
அத்ரி மாமுனிவர் அங்கு தவமிருந்ததால் அது அத்ரி மலை எனப் பெயராகி, சிவன் வடிவில் உள்ள அத்ரி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய ஆலயாமானது.

இடையில் ஒரு அதிசயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அத்ரி முனிவர் தவ வேளையில் இருக்கும் சமயம் அவரது சீடர்களில் ஒருவரான அனுசுயாதேவிக்குத் தாக மெடுதத்து. தண்ணீருக்காக தன் சிஷ்யை தவிப்பதை உணர்ந்த அத்ரி முனிவர் தனது கமண்டலத்தைத் தரையில் ஒங்கி ஒரு தட்டு தட்ட, அந்த இடத்தைப் பிளந்து கொண்டு நீருற்று பீய்ச்சியடிக்க அனுசுயாதேவி தன் தாகம் தீர்த்துக் கொண்டாள். வானம் பிளந்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்தாலும், 110 டிகிரியளவு கோடைவெப்பம் சூட்டைக்கிளப்பினாலும், அந்த நீர் ஊற்று ஒரே சீரான அளவு பொங்கி வருவது. அற்புதமானது என்பது பக்தர்களின் திகைக்கவைக்கும் பேச்சாகத் தொடர்கிறது.


அத்ரி மலையின் சிவனாலயம் பற்றிய பேச்சு கசிந்த உடனேயே. அது ஆலயமாக உருவெடுக்கும் காரியங்கள் நடக்கத் தொடங்கின. மலைக்கு அவரைத் தரிசிக்கச் சொல்லும் பக்தர்களே நேர்ச்சையாகத் தலைக்கு மூன்று செங்கற்களைக் கொண்டு சேர்க்க, அதன் பிறகே பக்தர்களால் அமைக்கப்பட்ட கையடக்க கோயில் மலைமேல் உருவானது வனதுர்க்கை, பேச்சியம்மன், 21 கன்னிமார்சிலைகள், கருப்பசாமி, சுடலை மாடன உள்ளிட்ட பல துணை தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு. காலப் போக்கில் பிரபலமாகி தற்போது பக்தர்களின் ஜனரஞ்சகக் கேத்திரமாக மாறி நிற்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது. [

அத்ரி மலை சிவபெருமானைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் தங்களின் மன எண்ணப்படி நேர்ச்சையாகவும் விரதமிருந்தும், சிலர் அவரையே நெஞ்சில் தேக்கிக் கொண்டு மலை ஏறுகிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு கரடு, முரடான கற்களையும், பாதைகளையும், முட்களையும் மெத்தையாக மாற்றி அவர்களைச் சேதாரமில்லாமல் மலைக் கோவிலுக்குக் கொண்டு சேர்க்கிறார். அங்குள்ள வனதுர்க்கையம்மன். காட்டு மிருகங்கள் பக்தர்களை அண்ட விடாமல் பாதுகாத்தும், மழைக் காலங்களில் அங்குள்ள கல்லாறு வெள்ள மெடுத்து பக்தர்கள் கடப்பதற்கு தடையாய் நிற்பதையும் தடுத்துக் கொண்டு, அத்ரி பரமேஸ்வர சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களைச் சிரமமின்றி தரிசனம் முற்றுப் பெற்று தரையிறங்கும் வரை காவல் துணையாய் வழித்துணையாய் வந்த வனதுர்க்கையம்மனுக்கு முதல் வணக்கும் வைத்துப் பூஜிக்கிறார்கள்.


ஆலயம் தோன்றிய காலம் தொட்டே இந்த வனதுர்க்கை தான் அத்ரிவனத்தின் காவல் தெய்வம். ராமரும், சீதாப்பிராட்டியாரும் அத்ரிமலை தபோவனத்திற்கு வந்த போது வனதுர்க்கையைத் தான் முதலில் வணங்கி முதல் மரியாதை செலுத்தினார்கள்.


அத்ரிமலை அமைதிச் சூழலையும், மெஞ்ஞானத்தையும் கொண்ட சிறப்பான ஒரு தபோவனமாக இருந்த காரணத்தினால் தான், தன் பிரதான சிஷயர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார் அத்ரி மகரிஷி. அவரது சீடர்களில் குறிப்பிட்டத்தக்கவர் கோரக்கர். தன்னுடைய குருவான ஆத்ரி முனிவருக்குப் பணிவிடைகளைச் செய்தமையால், அதன் வலிமை காரணமாக தென்பாண்டிச் சீமையின் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தையும் போக்கியவர் கோரக்கர்.


அத்ரி பரமேஸ்வர சுவாமியை மனதார வணங்கி நீர் ஊற்றில் தலை நனைத்து பிறகு, அங்கேயுள்ள அரச மரத்தின் முன்பாக தியானத்தில் அமர்வது தான் இங்கே குறிப்பிடும்படியான விசேஷம்.


பரம்பொருளை வணங்கி விட்டு, மனதார அரசமரம் முன்பு தியானத்திலிருப்பவர்களின் மனக்குறை நீங்கப் பெற்று எண்ணிய காரியங்கள். ஈடேறுகின்றன. பறைசாற்றலோ விளம்பரமே இல்லாமல் அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தெல்லாம் அத்ரி மலைக்கு வருகின்றார்கள்.

அத்ரிமலையின் அற்புதங்களில் இது கடுகளவே... மலை ஏறினாலோ புதைந்து கிடக்கும் பிரம்மாண்டங்கள் விரியும்

Tuesday, 19 December 2017

முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் நீங்க… கைமருந்து, சித்தமருத்துவம்

முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் நீங்க…
கைமருந்து, சித்தமருத்துவம்


*வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர்ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

* தேன் மூன்று மேசைக்கரண்டி எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை( கறுவா) தூள் கலந்து கரும்புள்ளிகள்உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர,கரும்புள்ளிகள் மறையும்.

* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர அவை நாளடைவில் மறைந்து விடும்.

* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.

* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் நீங்கும்.

* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

* முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும்புள்ளியின் மேல் போட்டு வரவும். தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்புள்ளி மறைந்து விடும்.

கோபி சந்தனம் – ஒரு தேக்கரண்டி, பாதாம் பருப்பு – மூன்று(நீரில் ஊற வைத்தது), தயிர்- 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி. இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதிகளில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் நீங்கி முகம் அழகுபெரும்.

முகத்தில் தழும்புகள் – தீப்புண் தழும்புகள் மறைய:
அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவிவர தழும்புகள் படிப்படியாக மறையும்.

உடல் சூட்டால் உருவாகும் சளி

உடல் சூட்டால் உருவாகும் சளி

நம் உடலில் வியர்வை என்பது எப்படி ஒரு கழிவுப்பொருளோ, அதைப் போலத்தான் சளியும் ஒரு கழிவுப் பொருள். நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி.

நம் உடலில் வியர்வை என்பது எப்படி ஒரு கழிவுப்பொருளோ, அதைப் போலத்தான் சளியும் ஒரு கழிவுப் பொருள். நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் மனிதனின் உடல் சளியை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கும். சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நமது வாய், மூக்கு, தொண்டை, நுரையீரல், இரைப்பை, குடல் ஆகியவற்றில், ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் அமைந்துள்ளன. மேலும் பாதுகாப்பு கவசம் போலவும் செயல்படுகின்றன.

சளியில் பாக்டீரியா வைரஸ்களை, நம் உடல் கண்டு கொள்வதற்காக ஆன்டிபயாடிக், நொதிகள், புரதங்கள், பல்வேறு உயிரணுக்கள் நிறைந்து இருக்கின்றன. இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களை ஜீரணம் செய்யும் சக்தி நமது உடலுக்கு உண்டு. ஆனால் ரசாயனப் பொருட்கள் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, உடல் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் வேளையில் தான், அது சளியாக உருமாறுகிறது.

அதாவது உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ, அதைபோலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாக வெளியேறவேண்டும். ஆனால் சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே தக்க வைத்துக்கொள்கிறோம். இதன் காரணமாக அது அப்படியே இறுகிப்போய் கட்டியாக மாறி நுரையீரலில் படிகிறது.



இதை நம் உடலில் இருந்து வெளியேற்ற ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், நமது உள்ளுறுப்புகள் முயற்சி செய்கின்றன. இதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது நாம் உட்கொள்ளும் உணவு தான்.

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முறைகளில் சளி ஏற்படுகிறது, உடல் சூடானாலும், உடல் குளிர்ச்சியாக இருந்தாலும் சளி உருவாகும். உடல் சூட்டால் உருவாகும் சளி, மூக்கு வழியாக வெளியேறாது, இது தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே இருக்கும். அப்போது வறட்டு இருமல் ஏற்படும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சளியை வாய் வழியாகத் தான் வெளியேற்ற வேண்டும்.

உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது உருவாகும் சளி, பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த சளியை மூக்கு வழியாக வெளியேற்ற முடியும். இவ்வாறு உருவாகும் சளியை உடனே வெளியேற்ற வேண்டுமே தவிர, எந்த வித மருந்துகளும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலை போக்க ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய்யுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெய்யை மார்மீதும், முதுகுப்புறமும் தடவ சளி, இருமல் குறையும்.

சிறு குழந்தைகளுக்கு, சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும் போது, சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு, உப்பு கலந்த சுடுநீரை தொட்டுத் துடைத்தால், மூக்கடைப்பு நீங்கும்.

No comments:




இருமல்,சளிக்கு சிறந்த மருந்து திப்பிலி

🗣இருமல், 🤧சளிக்கு சிறந்த மருந்து திப்பிலி

*திப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள்.
👉🏻திப்பிலி என்றும்,
👉🏻மாதவி என்றும் இதற்குப் பெயர்.
👉🏻கணா’என்றும் சொல்வது உண்டு.*
உலர்ந்தால் உஷ்ண வீர்யமாக மாறும்.
👉🏻இருமல்,
👉🏻சளி,
👉🏻கபம், அதிகரித்த மூட்டு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்தது. இதனைப் பத்து பத்தாகக் கூட்டிக் குறைக்கும் முறை உண்டு. இதற்குத் திப்பிலி வர்த்தமானப் பிரயோகம் என்று பெயர்.
*பழங்காலத்தில் இவ்வாறு செய்கிற போது,
👉🏻செம்மறி ஆட்டுப் பாலைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

*திப்பிலி இருமல்,சளிக்கு ஒரு சிறந்த மருந்து. இதனால் செய்யப்படும் தைலம் மூல நோய்களுக்கும்,
👉🏻குடலில் வாயு சேர்ந்த நிலைகளிலும்,
👉🏻வஸ்தி (எனிமா) செய்யவும் பயன்படுகிறது. இதை 15 நாட்களுக்கு மேல் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. திப்பிலியின் காய்களில் வெற்றிலை போன்ற காரத்தன்மை அடங்கியுள்ளதால் வாசனை இருக்கும். கருமிளகைக் காட்டிலும் திப்பிலியின் காய்களில் காரத்தன்மை மிகுந்திருக்கும்.

*திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவர
👉🏻இருமல்,
👉🏻தொண்டை குமுறல்,
👉🏻வீக்கம்,
👉🏻பசியின்மை,
👉🏻தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.👌🏻

👉🏻திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை ஐந்து கிராம் சேர்த்துப் பொடியாக்கிக் கழுநீரில் ஐந்து கிராம் போட்டு ஏழு நாளைக்குக் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.👌🏻

👉🏻திப்பிலி பொடி, கடுக்காய் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இரண்டு வேளை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் சாப்பிட்டுவர, இளைப்பு நோய் குணமாகும்.👌🏻

No comments:

இன்றைய மருத்துவ பலன்


இன்றைய மருத்துவ பலன்


இன்றைய மருத்துவ பலன்
*இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்
#பயன்உள்ளதகவல்* #
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

🌹🌹 ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி:



🌹🌹 ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி:

🌸🌿 உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித் தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்

ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.

1-வது நாள் 1, 1, 1, = 3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம் 🦋🌸🌼🌼🌸🍃🎋🍂🌹🌿

No comments:




உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கான எளிய வழி!

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கான எளிய வழி!

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.

பிறகு ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி:

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

– அனைவருக்கும் பகிருங்கள்