நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 16 December 2016

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்


மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்



மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி ,அருபமான ஸ்ரீ போகர்மகரிஷிக்கும்,ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,ஸ்ரீ சுதிஸ்சனருக்கும் 
18-12-2016 மார்கழி (03) மாதம் ஞாயிற்றுகிழமைஆயில்யம் நட்சத்திர 
குரு பூஜைதினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236


மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :85250 56537
மேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், அலங்காரம் , ஆராதனை


அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், அலங்காரம் , ஆராதனை










அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடனமார்

 ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
 ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 18-12-2016 மார்கழி (03) மாதம் ஞாயிற்றுகிழமைஆயில்யம் நட்சத்திர குரு பூஜை தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார்
 ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651

மேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது


அமானுசியம், அற்புதங்கள் நிறைந்த
அத்ரி மலை







பிரபஞ்சத்தின் ஜீவநாடி அறுந்து போகாமலிருப்பதற்காக இயற்கை அன்னை பல நற் கொடைகளை வாரி வழங்கியிருக்கிறாள். அந்த இயற்கைவளம் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல பல ஆன்மீக அதிசயங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆணித்தரமான உதாரணம் அத்ரி மலையும் அங்கே உடனுறையும், சிவன் வடிவில் உள்ள அத்ரி ஆலயமே.

கையடக்கமான அந்த ஆலயம், அன்றாடம் ஆன்மீக பக்தர்களை ஈர்த்த வண்ணமிருக்கிறது.

எந்த ஒரு பொருளையும் நினைத்த வேளையில் அடைந்து விட்டால் அதற்கு மதிப்பு குறைவு தான். சிரமப்பட்டு, கஷ்டங்களை அனுபவித்துப் பெறும் பொருள், அதுவே பரம்பொருள் ஆனாலும், அது தரும் சுகமும், அமைதியும், வாழ்நாள் முழுக்க மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடும்.

அத்ரிமலை ஆலயத்தின் வரலாற்றுக்குள் போவதற்கு முன், அந்த ஆலயம் சென்றடைவதற்கான வழியினை முதலில் பார்த்து விடுவது நல்லது.

நெல்லை மாவட்டத்தின் நகரமான தென்காசி அல்லது அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ஆழ்வார்குறிச்சிக்கு, பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 6 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.

சுத்தமான பிராணவாயுக்காற்றோடு மூலிகை மணத்தையும் கொண்ட காற்று வீசும் சூழல். சுவாசிக்கும் மனிதர்களின் இதயத்தைச் சுத்திகரிக்கும். புத்துணர்ச்சியோடு கரடு முரடானபாதையைக கடப்பது கூட அங்கே செல்லும் பக்கதர்களுக்குத் துன்பமே தெரியாது.


அப்படி ஒரு சிறப்பம்சம்.

சரி. இனி ஞான விஷயத்திற்கு வருவோம்.

ஆன்மீக சரித்திரம் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறது.

இன்றைக்கு சரியாக 2.500 ஆண்டுகளுக்குச் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணமாக வந்த மகாமுனிவர் தான் அத்ரி.
தனது பக்தர்களோடு வந்த அத்ரி முனிவர் அந்த மலையில் சிவபெருமானை வேண்டிக் கடும் தவம் செய்தார். தனது அடியாரின் கடும் தவத்தை மெச்சிய சிவபெருமானும் அத்ரி முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.
அத்ரி மாமுனிவர் அங்கு தவமிருந்ததால் அது அத்ரி மலை எனப் பெயராகி, சிவன் வடிவில் உள்ள அத்ரி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய ஆலயாமானது.

இடையில் ஒரு அதிசயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அத்ரி முனிவர் தவ வேளையில் இருக்கும் சமயம் அவரது சீடர்களில் ஒருவரான அனுசுயாதேவிக்குத் தாக மெடுதத்து. தண்ணீருக்காக தன் சிஷ்யை தவிப்பதை உணர்ந்த அத்ரி முனிவர் தனது கமண்டலத்தைத் தரையில் ஒங்கி ஒரு தட்டு தட்ட, அந்த இடத்தைப் பிளந்து கொண்டு நீருற்று பீய்ச்சியடிக்க அனுசுயாதேவி தன் தாகம் தீர்த்துக் கொண்டாள். வானம் பிளந்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்தாலும், 110 டிகிரியளவு கோடைவெப்பம் சூட்டைக்கிளப்பினாலும், அந்த நீர் ஊற்று ஒரே சீரான அளவு பொங்கி வருவது. அற்புதமானது என்பது பக்தர்களின் திகைக்கவைக்கும் பேச்சாகத் தொடர்கிறது.


அத்ரி மலையின் சிவனாலயம் பற்றிய பேச்சு கசிந்த உடனேயே. அது ஆலயமாக உருவெடுக்கும் காரியங்கள் நடக்கத் தொடங்கின. மலைக்கு அவரைத் தரிசிக்கச் சொல்லும் பக்தர்களே நேர்ச்சையாகத் தலைக்கு மூன்று செங்கற்களைக் கொண்டு சேர்க்க, அதன் பிறகே பக்தர்களால் அமைக்கப்பட்ட கையடக்க கோயில் மலைமேல் உருவானது வனதுர்க்கை, பேச்சியம்மன், 21 கன்னிமார்சிலைகள், கருப்பசாமி, சுடலை மாடன உள்ளிட்ட பல துணை தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு. காலப் போக்கில் பிரபலமாகி தற்போது பக்தர்களின் ஜனரஞ்சகக் கேத்திரமாக மாறி நிற்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது. [

அத்ரி மலை சிவபெருமானைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் தங்களின் மன எண்ணப்படி நேர்ச்சையாகவும் விரதமிருந்தும், சிலர் அவரையே நெஞ்சில் தேக்கிக் கொண்டு மலை ஏறுகிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு கரடு, முரடான கற்களையும், பாதைகளையும், முட்களையும் மெத்தையாக மாற்றி அவர்களைச் சேதாரமில்லாமல் மலைக் கோவிலுக்குக் கொண்டு சேர்க்கிறார். அங்குள்ள வனதுர்க்கையம்மன். காட்டு மிருகங்கள் பக்தர்களை அண்ட விடாமல் பாதுகாத்தும், மழைக் காலங்களில் அங்குள்ள கல்லாறு வெள்ள மெடுத்து பக்தர்கள் கடப்பதற்கு தடையாய் நிற்பதையும் தடுத்துக் கொண்டு, அத்ரி பரமேஸ்வர சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களைச் சிரமமின்றி தரிசனம் முற்றுப் பெற்று தரையிறங்கும் வரை காவல் துணையாய் வழித்துணையாய் வந்த வனதுர்க்கையம்மனுக்கு முதல் வணக்கும் வைத்துப் பூஜிக்கிறார்கள்.


ஆலயம் தோன்றிய காலம் தொட்டே இந்த வனதுர்க்கை தான் அத்ரிவனத்தின் காவல் தெய்வம். ராமரும், சீதாப்பிராட்டியாரும் அத்ரிமலை தபோவனத்திற்கு வந்த போது வனதுர்க்கையைத் தான் முதலில் வணங்கி முதல் மரியாதை செலுத்தினார்கள்.


அத்ரிமலை அமைதிச் சூழலையும், மெஞ்ஞானத்தையும் கொண்ட சிறப்பான ஒரு தபோவனமாக இருந்த காரணத்தினால் தான், தன் பிரதான சிஷயர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார் அத்ரி மகரிஷி. அவரது சீடர்களில் குறிப்பிட்டத்தக்கவர் கோரக்கர். தன்னுடைய குருவான ஆத்ரி முனிவருக்குப் பணிவிடைகளைச் செய்தமையால், அதன் வலிமை காரணமாக தென்பாண்டிச் சீமையின் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தையும் போக்கியவர் கோரக்கர்.


அத்ரி பரமேஸ்வர சுவாமியை மனதார வணங்கி நீர் ஊற்றில் தலை நனைத்து பிறகு, அங்கேயுள்ள அரச மரத்தின் முன்பாக தியானத்தில் அமர்வது தான் இங்கே குறிப்பிடும்படியான விசேஷம்.


பரம்பொருளை வணங்கி விட்டு, மனதார அரசமரம் முன்பு தியானத்திலிருப்பவர்களின் மனக்குறை நீங்கப் பெற்று எண்ணிய காரியங்கள். ஈடேறுகின்றன. பறைசாற்றலோ விளம்பரமே இல்லாமல் அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தெல்லாம் அத்ரி மலைக்கு வருகின்றார்கள்.

அத்ரிமலையின் அற்புதங்களில் இது கடுகளவே... மலை ஏறினாலோ புதைந்து கிடக்கும் பிரம்மாண்டங்கள் விரியும்

Thursday, 15 December 2016

பாம்பு ஓட மற்றும் விஷ ஜந்துக்கள் தொல்லை தராமல் இருக்க

பாம்பு ஓட மற்றும் விஷ ஜந்துக்கள் தொல்லை தராமல் இருக்க




சிலர் வீட்டில் அடிக்கடி பாம்புகள் வந்து அதனால் விஷபயம் ஏற்பட்டு கஷ்டப் படுபவர்கள் பாம்பைக் கண்டுடன் "முனிராஜ் ஆஸ்தீக் நமஹா" என்று சில தடவைகள் சொன்ன உடனே பாம்பு நம் பார்வையில் படாமல் விலகிச் சென்று விடும்.இதை எந்த விஷ ஜந்துவை விரட்டவும் பயன்படுத்தலாம்.

வீட்டில் அல்லது கடையில் பாம்புத் தொல்லை நிரந்தமாக இல்லாமல் இருக்க விரும்புவோர் :

ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பரில் நான்கு பக்கமும் இம்மந்திரத்தைக் பன்னீர் விட்டுக் குழைத்த குங்குமத்தால் எழுதவும்.இது போல் 5 பேப்பரில் எழுதி வீட்டைச் சுற்றி நான்கு மூலைகளிலும் ஒவ்வொன்றைப் புதைத்து வைக்கவும்.மீதமுள்ள ஒன்றை வீட்டின் நிலைக் கதவில் சுருட்டி வைக்கவும் அல்லது லேமினேஷன் செய்து ஒட்டவும்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு


ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு




ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.

இவரது மந்திரம் ஞாபக சக்தி தரும்.ஞானம்,மோக்ஷம்,நற்குணங்கள் தரும்.(க்ஷிப்ர பிரசாதனர் ) விரைந்து அருள் செய்பவர்.இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற ,கடன் தீர ,அடமானம் வைத்த பொருள் ,நகைகளை மீட்ட,காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.



ஸ்ரீ வித்யா உபாஸனை மந்திர சாஸ்திரத்தில் உயர்வான வித்தை இதைப் பற்றி இயற்றப்பட்ட கிரந்தங்களில் பெரியதும் சிறந்ததும் இவரால் இயற்றப்பட்டதே.அதை பின்பற்றி இவரது சீடரான ஸ்ரீ பரசுராமரால் சுருக்கமாக ஒரு கிரந்தம் இயற்றப்பட்டது.இன்றளவும் அந்த கிரந்தமே ஸ்ரீ வித்யா உபாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அவதூதர்களுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரே சத்குரு.சகுன உபாசகர்களுக்கு கற்பக மரம் போல் நல்வாழ்வு தருபவரும்,நிர்குண உபாசகர்களுக்கு சத்குருவாய் விளங்கி ஆன்ம உயர்வு தந்து ஜீவசமாதி ஆகும் நிலை வரை அருள் செய்பவர்.



ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம் :-

மாலகமண்டலு தர கரபத்மயுக்மே |
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |
அத்யஸ்த ஊர்த்வ கரயோ : சுப சங்க சக்ரே |
வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||

பொருள்: மாலை,கமண்டலம் ,உடுக்கை, ஈட்டி ,சங்கு, சக்கரம் இவற்றைக் தம் ஆறு கரங்களில் தாங்கியவரும் அத்ரி மகரிஷியின் மகனுமான 
 ஸ்ரீ தத்தாத்ரேயரே தியானிக்கிறேன்.

Tuesday, 13 December 2016

நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்!

நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர்!



கல்யாணப் பெண்ணைப் போல சந்தோஷத்துடனும், அழகுடனும், வெட்கத்துடனும், நளினத்துடனும், கருணையுடனும், காதலுடனும், கனிவுடனும் காட்சி தரும் திருநெல்வேலி காந்திமதி அம்மனை முதல் முறை பார்ப்பவர்கள், மெய்சிலிர்த்துப் போவார்கள். அம்மனின் எழிலில், வேண்டுதல் கூட மறந்து போய்விடும். தெய்வத் திருமணத்திற்கு வந்த உணர்வுதான் ஏற்படும்.

மணப்பெண்ணின் அலங்காரத்தைப் பார்க்கலாமா? தலையில் வைர மணிமுடி, இராக்குடி, திருமுகத்தில் வைரப் பொட்டு மூக்குத்தி, புல்லாக்கு, மார்பில் நவரத்ன வடம், திருவடியில் மணிச்சிலம்பு, உயர்த்திய வலக்கரத்தில் பச்சைக்கிளியுடன் கூடிய செண்டு என, தகதக தங்க ஜரிகையில் பளபளக்கும் பட்டுப் புடவை அணிந்து கண்களில் மைதீட்டி நெற்றியில் குங்குமம் தரித்து எப்போதும் அழகு கொஞ்சும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் நெல்லை காந்திமதியை தரிசனம் செய்தாலே, திருமண பாக்கியம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



அம்மனே இங்கே தவமிருந்துதான் நெல்லையப்பரை மணம் புரிந்து கொண்டார்.




அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஐப்பசி மாதம் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியதும், மூன்று நாட்கள் ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நாள்களில் தேவாரம், திருவாசகம், நான் மறைகள் ஓதுவதும், சமய சொற்பொழிவுகளும் நடைபெறும். திருக்கல்யாண மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் சிறப்பாக அமைந்துள்ளது.




நெல்லையப்பர் கோயிலின் ராஜகோபுரமே வினோதமான தோற்றத்தைக் கொண்டது. மற்ற கோயில்கள் போல ஓங்கி, உயர்ந்து காணப்படாமல், உயரமாகக் கட்டிப் பின் மேலேயிருந்து அழுத்தம் கொடுத்து தட்டி அமுக்கியது போல அடி பரந்து குட்டையான அமைப்பு!

திருத்தலக் குறிப்பு:


தல மூர்த்தி :
நெல்லையப்பர்
(வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர்)

தல இறைவி :
காந்திமதி அம்மை
(வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்)

தல விருட்சம் :
மூங்கில்

தல தீர்த்தம் :
மொத்தம் 32 தீர்த்தங்கள். முக்கியமான தீர்த்தங்கள் 9. திருக்கோயிலின் உள்ளே அமைந்துள்ள தீர்த்தங்கள் பொற்றாமரை தீர்த்தம், கருமாறி தீர்த்தம், வயிரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம். திருக்கோயில் வெளியே அமைந்த தீர்த்தங்கள் கம்பை, தெப்பக்குளம், சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குதுறை.

திருத்தலச் சிறப்பு:
பெருமை வாய்ந்த திருநெல்வேலிக்கு வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம் போன்ற பெயர்களும் உண்டு. இவ்வூர் மேலும், தென் காஞ்சி, கன்னிப்பதி, கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களுடனும் விளங்குகிறது.

சைவ சமயப் பெரியவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் அவர்களால் பாடி அருளப் பெற்ற பெருமைவாய்ந்த தலம் நெல்லையப்பர் திருத்தலம். அதற்கு திருநெல்வேலி பதிகம் என்றே பெயர். இத்திருத்தலம் பாண்டியநாட்டு பாடல் பெற்ற பதினான்கு தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

திருநெல்வேலி நகரின் மத்தியில் 850 அடி நீளமும் 756அடி அகலமும் கொண்டு மிக பிரமாண்டமாக அமைந்திருக்கிறது ஆலயம். அந்தக் காலத்தில் அம்மன் கோயிலும் சுவாமி கோயிலும் தனித் தனியாகத்தான் இருந்தன. புராணப்படி முழுவதும் கண்ட ராம பாண்டியனாலும், ஏழாம் நூற்றாண்டில் நின்ற சீர் நெடுமாறனாலும் இவை கட்டப்பட்டன. கி.பி.1647ல் வடமலையப்ப பிள்ளையன், இரண்டு கோயிலையும் ஒன்றாக இணைக்க, சங்கிலி மண்டபத்தை அமைத்தான் என்கிறது வரலாறு.



இதோ அந்தக் கதை:

அந்தக் காலத்தில் மூங்கில் காடாக இருந்தது இந்தப் பகுதி. அருகில் இருந்த ஒரு தொழுவத்திலிருந்துதான் அரசனுக்கு தினசரி பால் போகும். அந்தக் கடமையைச் சரிவர செய்து கொண்டிருந்தார் ஓர் ஆயர். அவர் செல்லும்போது மூங்கில் காட்டில் தினசரி அவரது கால் தடுக்கி குடங்கள் கீழே விழுந்து பால் கொட்டிற்று. தரையில் முளை விட்டிருந்த மூங்கில்தான் இதற்குக் காரணம் என்று எண்ணிய ஆயர், கோடரியால் மூங்கிலை வெட்ட, ரத்தம் கிளம்பிற்று.பதறிப்போய் மன்னரிடம் சொல்ல, அரசன் ராமபாண்டியனும் விரைந்து வந்து பார்க்க, அங்கே சிறிதாய் ஒரு லிங்கம் இருப்பது தெரிந்தது.

பரிதவித்த மன்னன் அந்த லிங்கத்திற்கு ஓர் ஆவுடையார் அமைக்க, லிங்கம் அதற்கேற்ப வளர்ந்தது. மீண்டும் ஒரு ஆவுடையார் என்று மன்னனும் 21 பீடங்களை ஒன்றன்மேல் ஒன்றாக வைக்க லிங்கமும் அதற்கேற்ப வளர்ந்தது. சோதித்தது போதும் என்று மன்னன் ராமபாண்டியன் கைதொழ, சிவபெருமான் அவனுக்கு ஜோதி வடிவில் காட்சி தந்தார். உருவத்தைக் குறுக்கி சகஜ அளவுக்கு வந்தார். ``ஜோதி மயமாய் என்னை நீ முழுவதும் கண்டதால் உன் பெயர் இனி, `முழுவதும் கண்ட ராம பாண்டியன்' என்று அழைக்கப்படும்'' என்று ஆசி வழங்கினார்.

அந்த முழுவதும் கண்ட ராம பாண்டியன் கட்டியதுதான் இந்தக் கோயில்.



மூங்கில் என்றால் வேணு. எனவே வேணுவனநாதர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.

தல விருட்சம் மூங்கில்தான்!

நான்கு வேதங்களும் இங்கே மூங்கிலாக இருப்பதாக ஐதிகம்.

``நான் நடனம் புரியும் 21 தலங்களில் மிகவும் சிறந்த திருநெல்வேலியில் என்னுடனேயே நீங்களும் மூங்கிலாக இருங்கள்'' என்று இறைவனே கூறியிருக்கிறார் என்றால், இதன் சிறப்பை சொல்லி மாளாது.

ஈசன் பார்வதி தேவியின் திருமணம் இமயத்தில் நடைபெற்றபோது தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வடப்புறம் தாழ்ந்து, தென்புறம் உயர்ந்தது. இதனைக் கண்ட சிவன், அகத்திய பெருமானை தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே அகத்தியர் தென்பால் வந்து திருக்குற்றாலம் அடைந்து பின் பொதிகை மலையை அடைந்து பூமியை சமன் படுத்தினார். இங்கே திருநெல்வேலி வந்த அகத்தியருக்கு சிவபிரானும், பார்வதி தேவியும் மணக் கோலத்தில் காட்சி கொடுத்தனர்.

இராமபிரான், சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் முன், அகத்தியரின் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று நெல்லையப்பரை வணங்கி பாசுபதாத்திரம் பெற்று போரில் இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி அடைந்தார்.

மதுரைக்கும், நெல்லைக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. அங்கே வைகை. இங்கே தாமிரபரணி. அங்கே மீனாட்சி ஆட்சி. இங்கே காந்திமதியின் ஆட்சி. இரு நகரங்களுமே கோயிலைச் சுற்றித் திருவீதிகளாக விளங்குகின்றன. மதுரையில் பொற்றாமரைக் குளம் இருப்பதுபோல இங்கும் பொற்றாமரைத் தீர்த்தம் அமைந்திருக்கிறது!

இந்த குளத்தில் சிவனே நீர் வடிவமாய் உள்ளதாக ஐதீகம். பிரம்மன் தங்க மலரோடு வந்து எழுந்தருளியதாகவும் நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே பொற்றாமரைக் குளம் என்ற பெயர் வந்தது.



கிழக்கு வாசலில் நுழைந்து, நந்தியையும், சூரியனையும் வணங்கி, மணிமண்டபம் செல்லும்போது அங்கேயுள்ள இசைத்தூணைக் காண மறவாதீர்கள்.
ஒரே கல்லில் அமைந்த 64 தூண்கள். ஒவ்வொரு தூணைத் தட்டினால் ஒவ்வொரு இசை.
கி.பி.7ம் நூற்றாண்டில் கூன் பாண்டியன் அமைத்த மண்டபம் இது.



இத்திருக்கோயில் தெற்குப் பிரகாரம், மேலப் பிரகாரம், வடக்குப் பிரகாரம், கீழப் பிரகாரம் என்ற அமைப்புடன் உள்ளது.

நேரே சென்றால் வேணுவனநாதர் என்னும் மூங்கில் முளையில் தோன்றிய ஈசனைக் காணலாம். மன்னனுக்காக 21 பீடங்களைத் தாண்டியும் உயர்ந்து ஜோதி வடிவில் காட்சி தந்த ஈசன் இவர்தான். இவரே அருள்மிகு நெல்லையப்பர்.



நெல்லையப்பருக்கு அருகில் நெல்லை கோவிந்தர் சன்னதி அமைந்திருக்கிறது. வேணுவனநாதர் வெளிப்படுவதற்குமுன் தோன்றிய திருமூலநாதர் சன்னதியும் மிக முக்கியமானது. மேற்புறப் பிராகாரத்தில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையில் அருள்புரியும் நடேசரையும் கட்டாயம் தரிசிக்கவேண்டும்.

பின்னர், வேணுவன நாதருக்கு வடப் புறமாக கிடந்த கோலத்தில் பெரிய உருவத்துடன் ரெங்கநாதரின் தரிசனம் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி. உட்பிரகாரத்தில் பிள்ளையார், சந்திரசேகரர், பிச்சாண்டேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரது தரிசனம். வட பிரகாரத்தில் பள்ளத்தில் திருமூலநாதரின் தரிசனம்.

நெல்லையப்பர், காந்திமதியம்மன் உற்சவ மூர்த்திகள், ஏழு கன்னியர், ஏழு முனிவர், அறுபத்து மூன்று நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், பொல்லாப் பிள்ளையார் சந்நதிகளையும் காணலாம். மேலப் பிரகாரத்தில் தாமிர சபை அமைந்துள்ளது.

பஞ்சபூத ஸ்தல இறைவன் நடனமாடிய சபைகள் ஐந்து உள்ளன.1. திருக்குற்றாலம் - சித்திரசபை
2. மதுரை - வெள்ளிசபை
3. திருவாலங்காடு - ரத்தின சபை
4. சிதம்பரம் - பொற்சபை
5. திருநெல்வேலி - தாமிரசபை

தாமிர சபை மண்டபத்தின் உள்ளே சந்தன சபாபதியை வழிபடலாம். வடக்குப் பிரகாரத்தில் அஷ்டலெட்சுமி, சனீஸ்வர பகவான், சஹஸ்ரலிங்கம் போன்றோரது தரிசனம். நெல்லை நகரத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் அம்மன் கோயில், சுவாமி கோயில் என இரு பகுதிகளாக அமைந்துள்ளன. அம்மன் கோயில் தென்புறம், வடபுறம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது. அதேபோல சுவாமி கோயிலும் வடபுறம், மேற்க்குபுரம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் சுவாமி ரதம், அம்மன் ரதம், விநாயகர் ரதம், சுப்பிரமணியர் ரதம், சண்டிகேஸ்வரர் ரதம் என ஐந்து ரதங்கள் இருக்கின்றன. அது போலவே, இத்திரு கோயில் சார்ந்த ஆறு சபைகள் உள்ளன. அவை,

1. சிந்துபூந்துறை - தீர்த்த சபை
2. மானூர் - ஆச்சர்ய சபை
3. அம்மன் கோயில் முன்புறம் வடப் பக்கமாக சிவன் ஆனந்த நடனம் புரிந்த - சௌந்திர சபை
4. அம்மன் கோயிலின் திருக்கல்யாண மண்டபம் - கல்யாண சபை
5. சுவாமி கோயிலின் முன்பக்கம் - அழகிய ராஜசபை
6. சுவாமி கோயிலின் மேல்புறம் - தாமிர சபை

வேணுவனநாதர், நெல்லையப்பர் ஆனதும் ஒரு கதை.

இந்த ஊரின் பெயர் தோன்றியதும் அதே கதையில்தான்! ராம பாண்டியனின் பிற்காலத்தில் 12 வருடங்கள் மழையில்லாமல் போய், பெரும்பஞ்சம் இங்கே ஏற்பட்டது. மக்கள் பசியால் தவித்தார்கள். இறைவனுக்கே நைவேத்தியத்திற்குத் திண்டாட்டம் ஏற்பட்டது. அப்போது, வேதசர்மா என்ற பக்தர் பிட்சையெடுத்தாவது கொஞ்சம் நெல்லைச் சேகரித்து, இறைவனுக்குப் படைத்து வந்தார். இறைவன் அவரை மேலும் சோதிக்க எண்ணினான். கைவசம் இருந்த கைப்பிடி நெல்லை, கோவில் சன்னதியிலேயே உலர்த்திவிட்டு வெளியில் சென்றார் வேதசர்மா. அப்போது திடீரென பெருமழை பெய்தது. நெல், மழைநீரில் மிதந்து போய் விட்டால், இறைவன் பட்டினி கிடப்பாரே என்று ஓடோடி வந்தார் வேதசர்மா.

அங்கே ஆச்சர்யம் காத்திருந்தது. தான் உலர்த்திய நெல்லைச் சுற்றி மழைநீரே ஒரு வேலியாக உயர்ந்து நிற்க, நெல்லுக்கு மட்டும் வெய்யில் அடிப்பதைக் கண்டு நெக்குருகிப் போனார். நெல்லைக் காத்ததால் அன்று முதல் வேணுவனநாதருக்கு `நெல்வேலி நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஊரும் திருநெல்வேலி ஆயிற்று. பஞ்சமும் பறந்து போயிற்று.

தன்னை வணங்கினால் உணவுப்பஞ்சம் தீரும், பசிப்பிணி போகும் என்பதை உணர்த்தவே இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் இது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் 4-ம் நாளன்று பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெறும்.



திருவிழாக்கள்:
இத்திருக்கோயிலில் விழாக்களுக்கு பஞ்சமில்லை. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள்தான். ஆனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்போது நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். வருடாபிஷேகம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா அம்பாளுக்கு பத்து நாட்கள், பௌத்திர உற்சவம் நான்கு நாட்கள், அம்மனுக்கு ஐப்பசி மாதத்தில் பதினைந்து நாட்கள் திருக்கல்யாண வைபவம், கந்த சஷ்டி திருவிழா, கார்த்திகை மாதத்தில் சோமவாரம் நான்கு நாட்கள், மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி முப்பது நாட்கள், திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம், தை மாதத்தில் தைப்பூசத் தெப்ப உற்சவம் உட்பட பன்னிரண்டு நாட்கள், வைகாசி விசாகத் திருநாள் மூன்று நாட்கள், மாசி மகத்தன்று பொற்றாமரைத் திருக்குளத்தில் அப்பர் தெப்பம் என அடுக்கிக் கொண்டே போகலாம் இத்திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களை.

நெல்லையப்பர் பிள்ளை அவர்கள் பாடிய திருநெல்வேலி தல புராணம், அருணாசல கவிராயர் இயற்றிய வேணுவன நாதர் புராணம், வித்வான் சொக்கநாதப் பிள்ளை பாடி அருளிய காந்திமதிஅம்மை பிள்ளைத் தமிழ், ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, நெல்லை வருக்கை கோவை, நெல்லைச் சிந்து, திருநெல்வேலி சேத்திரக் கும்பி, மும்மணிக் கோவை போன்ற நூல்கள் இத்தல இறைவன், அன்னையின் அருளினை சிறப்பித்துக் கூறுகின்றன.




எங்கள் குல நாயகியே காந்திமதிஎம்மை வாழவைக்கும் அருள்நிதியே காந்திமதி பொங்கிவரும் பேரெழிலே காந்திமதி
புவனமெல்லாம் காப்பவளே காந்திமதி
உன் பாதம் சரணடைந்தோம் காந்திமதி உலகாளும் ஈஸ்வரியே காந்திமதி அன்பர்கட்கு அருள்பவளே காந்திமதி அருள் மழையின் மறுபெயரே காந்திமதி

இன்பங்கள் தருபவளே காந்திமதி ஈடில்லாக் குணக்குன்றே காந்திமதி சன்னதியில் நின்றார்க்கு காந்திமதி சங்கடங்கள் தீர்த்திடுவாய் காந்திமதி

நெல்லையப்பர் மகிழ்தேவி காந்திமதி ஈடில்லாக் குணக்குன்றே காந்திமதி தொல்லைதனைப் போக்கிடுவாள் காந்திமதி தொழுது உன்னை பணிந்திடுவோம் காந்திமதி.





திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய திருநெல்வேலி பதிகம்:

மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றும் மெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூஞ்
செருத்திசெம் பொன்மலர் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

என்றுமோர் இயல்பினர் எனநினை வரியவர் ஏறதேறிச்
சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
தன்றுதண் பொழில் நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர் போலுஞ்
செறிபொழில் தழுவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்
தீண்டிவந் துலவிய திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளவுரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனில்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதன் ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெல்லாம் புகழுறுந் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

பைங்கண்வாழ் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்ச நின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அணைலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆலத்
திவருறு மதிதவழ் திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடம்மல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே !!

*** திருச்சிற்றம்பலம் ***


நந்தி தேவரின் பிரம்மாண்ட தோற்றம்.
திருக்கல்யாண மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் சிறப்பாக அமைந்துள்ளது.

ஓடுகளால் வேய்ந்தது போன்ற அமைப்பில் கருங்கற்களால் ஆன மேற்கூரை.


இசைக்கு இவ்வுலகமே அடிமை என்பதை உணர்த்தும் இசைத் தூண்கள் நெல்லையப்பர் சன்னதி முன்பாக. ஏழு ஸ்வரங்களும் எழுகின்றன இந்த இசைத் தூண்களில்.


பிறை நிலவுகளை ஒன்று சேர்த்து கட்டி உள்ளார்களோ என்று எண்ணும் விதமாக தாமிர சபையின் முன்னே உள்ள மண்டபத்தின் தோற்றம்.


தட்சிணாமூர்த்தி சன்னதியின் வெளிப்புறத்தில் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முன் மண்டபம்.

திருக்கோயில் கோபுரத்தை அடுத்த மேற் கூரையில் மரத்தால் ஆன ஆயிரக் கணக்கான சிற்பவேலைப்பாடுகள். மேற்கூரையில் மட்டுமல்லாது இருபுறங்களிலும்.

ஏராளமான தெய்வங்கள், ஏராளமான கல்வெட்டுகள், ஏராளமான தலப் பதிகங்கள் என்று இங்கே எல்லாமும் ஏராளம்... தாராளம். நெல்லையப்பரையும், காந்திமதியையும் வணங்கினால், நிச்சயம் பசிப்பிணி போகும்.

அப்புறம் ஒன்று, இனிமையான நெல்லையப்பரின் தரிசனத்தை முடித்த கையோடு கோயில் வாசலில் மாலையில் கிடைக்கும் இருட்டுக் கடை அல்வாவையும் ஒரு கை பாருங்கள்.

நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. ``கோயில் நேரம்?'' ``காலை 6 - 12.30, மாலை 5.30-9''

ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 வது குருபூசை விழா

ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 வது குருபூசை விழா












பொள்ளாச்சி வேட்டைகாரன் புதூரில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 வது குருபூசை விழா

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
கார்த்திகை மாதம்29ஆம் நாள் (14-12-2016) புதன் கிழமை மிருகசீரிட நட்சத்திர ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 மகா குருபூஜை
அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ல ஸ்ரீ அழுக்கு சித்தரின் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அனைவரையும் அன்புடன்


அனைவரும் வருக! வருக!! வருக!!

இடம் -பொள்ளாச்சி இருந்து வேட்டைகாரன் புதூர்

Monday, 12 December 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமிதிருவிளக்குபூஜை -தங்கக் கவசம்


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி
திருவிளக்குபூஜை  -தங்கக் கவசம்

















அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்

13-12-2016 கார்த்திகை (28) மாத செவ்வாய் கிழமை
காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை
மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236