நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 19 December 2015

திருநெல்வேலி ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா

திருநெல்வேலி ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா








கோயிலின் முதுகெலும்பாக கொடிமரத்தை கூறுகின்றன நமது ஆகமங்கள். துவஜஸ்தம்பம் என்று அழைக்கப்படும் ஆலய கொடி மரத்தைப் பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டின் வரலாற்றுகளிலேயே கூறப்பட்டுள்ளது. ஆலய திருவிழாக் காலங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது கொடிமரம். ஆலய வழிபாட்டில் கொடிமரம் அருகே பூமியில் நமது உடம்பை கிடத்தி செய்யப்படும் சர்வாங்க நமஸ்காரம் நமக்கு மன பலத்தையும், உடல் பலத்தையும் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கொடிமர நீள அளவு, பிரதிஷ்டை செய்யும் முறை, கொடிமரத்தை அலங்கரிக்கும் தேவதைகள், வாகனங்கள் பற்றிய அனைத்து விதிமுறைகளும் ஆகமங்களில் தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதைக் காணலாம்.

இவ்வகையில்,திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில்,மணிமூர்த்தீசுவரம்
அமைந்துள்ள ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் புதியதாக 33அடி உயரத்தில் தேக்கு மரத்தினாலான கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.கோவிலில்
 

புதியதாக செய்யபட்டு உள்ள கொடிமரம் பிரதிஷ்டை  20.12.2015 ஞாயிறு காலை 9.00 முதல் 10.00மணிக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது
கொடிமர பிரதிஷ்டையில் பங்கேற்பதால் அனைத்து செயல்களிலும் ஏற்றங்கள் ஏற்பட்டு உயர்ந்த வாழ்வினை தரும்.
அனைவரும் இந்த கொடிமர பிரதிஷ்டை கலந்து கொண்டு
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி நற்பணி மன்றம்
சார்பாக அன்புடன் அழைகின்றார்கள்.


ஆலயத்திற்கு வரும் வழி :-


திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வந்து மேற்சொன்ன படி வந்து சேரலாம்.அல்லது திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்தும் வரலாம் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது .

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733







Friday, 18 December 2015

கடன் தொல்லை தீர ஒரு அரிய வாய்ப்பு

கடன் தொல்லை தீர ஒரு அரிய வாய்ப்பு


கடன் தொல்லை தீர ஒரு அரிய வாய்ப்பு
மைத்ர முகூர்த்தம்
21.12.15 திங்கள் மதியம் 1.33pm முதல் மாலை 3.23pm வரை







இந்தக் கலியுகத்தில் மனிதர்களாகப் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் மூன்று வித கடன்களை சந்தித்துத் தான் ஆக வேண்டும். அவையே தேவ கடன், பித்ருகடன் மானுஷ கடன், அத்துடன் பெற்ற கடன் என்ற ஒன்றும் மனிதனை வாட்டி எடுத்து விடுகிறது. தேவ கடனை ஹோமங்கள், நித்ய கர்மங்கள், ஆலய வழிபாடுகள் செய்வதால் தீர்த்துக் கொள்ள முடியும்.

இதிகாச புராணங்கள் படிப்பதாலும், கேட்பதாலும் ரிஷி கர்ப்பணம் செய்வதாலும் தீர்த்துக் கொள்ளலாம். பித்ரு கடனை - பெற்றவர்களைக் காத்து வருவதாலும், அவர்கள் காலமான பிறகு அவர்களது திதி நாளில் சிரத்தையுடன் சிரார்த்தம் (திவசம்) செய்வதாலும் தீர்த்து விடலாம்.




பெற்ற கடன் என்பது பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கி கல்வி கற்க வைத்துத் திருமணம் செய்வித்து வாழ்க்கையை நன்றாக ஆக்கித் தருவதால் சுமை குறையும். ஆனாலும் பெற்றோர்களுக்குப் பிரதி கடனைத் தீர்க்காமல் நன்றி மறந்து விடுகிறார்கள்.


மனித கடனை - மனிதாபிமானத்தோடு ஏழை-எளிய மக்களுக்கு உபகாரம் செய்வதாலும், முடிந்த அளவில் மற்றவர்களுக்கு உதவி செய்வதாலும் தீர்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால் மனிதர்கள் மற்ற மனிதர்களிடம் பெற்ற கடனைப் பெற்றுக் கொண்டு திருப்பித்தர முடியாமல் அவஸ்தைப் படுகிறார்களே!




இதற்குத் தீர்வு யாதெனில் கடன் வாங்கியதில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்த நேரத்தில் திருப்பி கொடுத்தால், அந்த கடனை எளிதில் அடைத்து விடலாம் என்ற தேவ ரகசியத்தைக் கடன் பெற்றவர்கள் உணர்ந்து அறிந்து விட்டால் இந்த வகை மனுஷ கடன் பரிதியைக் கண்ட பனிபோல விலகிவிடும்.

கடன் வாங்கியவர்கள், அதைக் கொடுத்துவிட்டு விழிப்போர் கலங்கும் வகையில் நடந்து கொள்வதும், அதைத் திருப்பக் கொடுக்கப் பல பரிகாரங்களைச் செய்வதும் இக்காலக் கட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளில் காணலாம்.


ஓம் அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸவ:
நமோஸ்துதே மமோசேஷம் ருணமாக விநாயக- என்று பிரதி செவ்வாய்க்கிழமை அன்று அங்காரகனுக்குத் தீபம் ஏற்றுதலும் குணஹர லிங்காஷ்டகம், கடன் தீர்கணபதி அஷ்டகம், கடன் தீர்க்கும் சுதர்ஸனாஷ்டகம், காலபைரவ துதி. என்று பல வழிபாட்டுத் துதிகள் பரிகாரங்களைச் செய்து வருகிறார்கள். மன திருப்திக்காகச் செய்யும் இவை சிலருக்குப் பலனும் தருகின்றன.

ஆனால், காலம் நமக்குத் தோழனாக நின்று வழிகூறும் என்பதை - நாள் செய்வதை நல்வோர் செய்யார் - என்ற பழமொழியின் வழியாக அறிந்து காலத்தைப் பயன்படுத்தலாம். நல்ல நேரத்தையும் நமக்கு நன்மைகள் புரியும் காலத்தையும் தான் முகூர்த்த வேளை என்கிறோம். ஹோமம் முதலிய சுபநிகழ்ச்சிகள் செய்ய பிரம்ம முகூர்த்தத்தை (அதிகாலை 4-6) பயன்படுத்துகிறோம்.

திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம், செய்ய சுபலக்ன முகூர்த்தத்தைப் பயன்படுத்துகிறோம். குட முழுக்குப் பெருஞ்சாந்தி பெருவிழா ஆலய சுப பூஜைகள் செய்ய நேத்ர ஜீவனுடன் கூடிய முகூர்த்த வேளையைப் பயன்படுத்துகிறோம். அரசு அனுகூலம், பதவி உயர்வுக்கு - இந்திர முகூர்த்த வேளையைப் பயன்படுத்துகிறோம்.

லட்சுமி கடாட்சத்துடன் தொழில் வளர, செல்வநிலை உயர லட்சுமிகுபேர வேளையை (வியாழன் மாலை 5-8 மணி) பயன்படுத்துகிறோம். ஆனால், மனிதனைப் படாதபாடுபடுத்துகிற கடன் தொல்லையைத் தீர்த்திட மைத்ர முகூர்த்தம் என்ற மதிய வேளையைப் பயன்படுத்த இதுவரை யாருக்குமே தெரியவில்லை.

இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் சிறுதொகையை அடைத்து விட்டால் வாங்கிய கடன் முழுவதும் ஏதாவது ஒரு வழியில் அடைந்து நிம்மதி அடையலாம் என்று சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளது. மார்பளவுக் கடனையும் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம் - கால விதானத்தை அடிப்படையாகக் கொண்டு கோள்களின் இயக்க நிலைப்படி கணிக்கப்பட்டுள்ளது.



கடன் தீர்ப்பதற்கு வேண்டிய காலத்திற்கு மித்ர முகூர்த்தம் (மித்ர-நட்பு) நமக்கு சாதகமாகச் செயல்படும் நேரம் என்று பெயர். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்ற பழமொழிக்கேற்ப, மற்றவர்களை விட்டு சிபாரிசும், மற்ற துர்பிரயோக மார்க்கமும் தேடாமல் நேரடியாகக் கடன் கொடுத்தவரிடமே ஒரு சுபவேளையில் நேரில் சென்று வாங்கிய கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை இன்முகத்துடன் திருப்பிக் கொடுத்து வரல் வேண்டும்.

மித்ர முகூர்த்தம் என்று சொல்வழக்கில் இருந்தது மாறி மைத்ர முகூர்த்தம் என்று வந்ததாக வருண பரிகார விளக்க விதி சொல்கிறது. பொதுவாகக் கணக்கிட்டுக் கூறும் மைத்ர முகூர்த்தம் என்றும் தனிநபர்களுக்குக் கணக்கிட்டுக் கூறும் மைத்ரே முகூர்த்தம் என்றும் இருக்கிறது.




இதன்படி இந்திய தேசத்தில், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரா, கேரளா, ஸ்ரீலங்கா, மொரிஷியஸ், அந்தமான், லட்சத்தீவுகள் ஆகியவற்றுக்கு ஒன்றாக இருக்கும். நேர வித்தியாசம் வருவதால் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுமார் 2 மணி நேரம் வித்தியாசப்படுவதால், தொலைத் தொடர்பு வழி தொழிலில் கடன் வைத்திருப்போர் இந்திய தேச நேரப்படி கணக்கிடாமல் அந்நாட்டு நேரத்தில் மட்டும் கடன் தீர்க்க வேண்டும்.




அமெரிக்காவில் உள்ள ஒரு கம்பெனியிடம் இந்தியா கடன் வாங்கி இருந்தால், அவர்களது பகல் பொழுதில் உள்ள மைத்ர முகூர்த்த நேரத்தில் தான் கடன் அடைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 10.15 மணி முதல் 12.15 மணி வரை இந்த கடன் அடைக்கும் நேரம் வந்தால் சனி இரவு 10.30 மணிக்கு கடன் தொகையை ஆன்லைனில் கட்டி விடலாம்

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு குரு பூஜை விழா

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு குரு பூஜை விழா





நெல்லை மாவட்டம் அம்பசமுத்திரம் ஆழ்வார்குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரிமலை அமைந்துள்ளது.

இங்கு அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம். அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.
மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.மேலும் கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது.
சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு. அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.

பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை.

சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது
இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.

அத்ரி மகரிஷியின் கோவிலுக்கு வருகிறவர்கள் வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை.

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டிநெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 
29-12-2015 தேதி செவ்வாய் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி – மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு


தொலைபேசி எண்கள் :9842078733, 9043942091, 9843016651

Thursday, 17 December 2015

அத்ரி மலையின் அற்புதங்கள்!

அத்ரி மலையின் அற்புதங்கள்!




பிரபஞ்சத்தின் ஜீவநாடி அறுந்து போகாமலிருப்பதற்காக இயற்கை அன்னை பல நற் கொடைகளை வாரி வழங்கியிருக்கிறாள். அந்த இயற்கைவளம் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல பல ஆன்மீக அதிசயங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆணித்தரமான உதாரணம் அத்ரி மலையும் அங்கே உடனுறையும், சிவன் வடிவில் உள்ள அத்ரி ஆலயமே.

கையடக்கமான அந்த ஆலயம், அன்றாடம் ஆன்மீக பக்தர்களை ஈர்த்த வண்ணமிருக்கிறது.

எந்த ஒரு பொருளையும் நினைத்த வேளையில் அடைந்து விட்டால் அதற்கு மதிப்பு குறைவு தான். சிரமப்பட்டு, கஷ்டங்களை அனுபவித்துப் பெறும் பொருள், அதுவே பரம்பொருள் ஆனாலும், அது தரும் சுகமும், அமைதியும், வாழ்நாள் முழுக்க மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடும்.

அத்ரிமலை ஆலயத்தின் வரலாற்றுக்குள் போவதற்கு முன், அந்த ஆலயம் சென்றடைவதற்கான வழியினை முதலில் பார்த்து விடுவது நல்லது.

நெல்லை மாவட்டத்தின் நகரமான தென்காசி அல்லது அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ஆழ்வார்குறிச்சிக்கு, பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 6 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.

சுத்தமான பிராணவாயுக்காற்றோடு மூலிகை மணத்தையும் கொண்ட காற்று வீசும் சூழல். சுவாசிக்கும் மனிதர்களின் இதயத்தைச் சுத்திகரிக்கும். புத்துணர்ச்சியோடு கரடு முரடானபாதையைக கடப்பது கூட அங்கே செல்லும் பக்கதர்களுக்குத் துன்பமே தெரியாது.


அப்படி ஒரு சிறப்பம்சம்.

சரி. இனி ஞான விஷயத்திற்கு வருவோம்.

ஆன்மீக சரித்திரம் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறது.

இன்றைக்கு சரியாக 2.500 ஆண்டுகளுக்குச் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணமாக வந்த மகாமுனிவர் தான் அத்ரி.
தனது பக்தர்களோடு வந்த அத்ரி முனிவர் அந்த மலையில் சிவபெருமானை வேண்டிக் கடும் தவம் செய்தார். தனது அடியாரின் கடும் தவத்தை மெச்சிய சிவபெருமானும் அத்ரி முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.
அத்ரி மாமுனிவர் அங்கு தவமிருந்ததால் அது அத்ரி மலை எனப் பெயராகி, சிவன் வடிவில் உள்ள அத்ரி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய ஆலயாமானது.

இடையில் ஒரு அதிசயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அத்ரி முனிவர் தவ வேளையில் இருக்கும் சமயம் அவரது சீடர்களில் ஒருவரான அனுசுயாதேவிக்குத் தாக மெடுதத்து. தண்ணீருக்காக தன் சிஷ்யை தவிப்பதை உணர்ந்த அத்ரி முனிவர் தனது கமண்டலத்தைத் தரையில் ஒங்கி ஒரு தட்டு தட்ட, அந்த இடத்தைப் பிளந்து கொண்டு நீருற்று பீய்ச்சியடிக்க அனுசுயாதேவி தன் தாகம் தீர்த்துக் கொண்டாள். வானம் பிளந்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்தாலும், 110 டிகிரியளவு கோடைவெப்பம் சூட்டைக்கிளப்பினாலும், அந்த நீர் ஊற்று ஒரே சீரான அளவு பொங்கி வருவது. அற்புதமானது என்பது பக்தர்களின் திகைக்கவைக்கும் பேச்சாகத் தொடர்கிறது.


அத்ரி மலையின் சிவனாலயம் பற்றிய பேச்சு கசிந்த உடனேயே. அது ஆலயமாக உருவெடுக்கும் காரியங்கள் நடக்கத் தொடங்கின. மலைக்கு அவரைத் தரிசிக்கச் சொல்லும் பக்தர்களே நேர்ச்சையாகத் தலைக்கு மூன்று செங்கற்களைக் கொண்டு சேர்க்க, அதன் பிறகே பக்தர்களால் அமைக்கப்பட்ட கையடக்க கோயில் மலைமேல் உருவானது வனதுர்க்கை, பேச்சியம்மன், 21 கன்னிமார்சிலைகள், கருப்பசாமி, சுடலை மாடன உள்ளிட்ட பல துணை தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு. காலப் போக்கில் பிரபலமாகி தற்போது பக்தர்களின் ஜனரஞ்சகக் கேத்திரமாக மாறி நிற்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது. [

அத்ரி மலை சிவபெருமானைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் தங்களின் மன எண்ணப்படி நேர்ச்சையாகவும் விரதமிருந்தும், சிலர் அவரையே நெஞ்சில் தேக்கிக் கொண்டு மலை ஏறுகிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு கரடு, முரடான கற்களையும், பாதைகளையும், முட்களையும் மெத்தையாக மாற்றி அவர்களைச் சேதாரமில்லாமல் மலைக் கோவிலுக்குக் கொண்டு சேர்க்கிறார். அங்குள்ள வனதுர்க்கையம்மன். காட்டு மிருகங்கள் பக்தர்களை அண்ட விடாமல் பாதுகாத்தும், மழைக் காலங்களில் அங்குள்ள கல்லாறு வெள்ள மெடுத்து பக்தர்கள் கடப்பதற்கு தடையாய் நிற்பதையும் தடுத்துக் கொண்டு, அத்ரி பரமேஸ்வர சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களைச் சிரமமின்றி தரிசனம் முற்றுப் பெற்று தரையிறங்கும் வரை காவல் துணையாய் வழித்துணையாய் வந்த வனதுர்க்கையம்மனுக்கு முதல் வணக்கும் வைத்துப் பூஜிக்கிறார்கள்.


ஆலயம் தோன்றிய காலம் தொட்டே இந்த வனதுர்க்கை தான் அத்ரிவனத்தின் காவல் தெய்வம். ராமரும், சீதாப்பிராட்டியாரும் அத்ரிமலை தபோவனத்திற்கு வந்த போது வனதுர்க்கையைத் தான் முதலில் வணங்கி முதல் மரியாதை செலுத்தினார்கள்.


அத்ரிமலை அமைதிச் சூழலையும், மெஞ்ஞானத்தையும் கொண்ட சிறப்பான ஒரு தபோவனமாக இருந்த காரணத்தினால் தான், தன் பிரதான சிஷயர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார் அத்ரி மகரிஷி. அவரது சீடர்களில் குறிப்பிட்டத்தக்கவர் கோரக்கர். தன்னுடைய குருவான ஆத்ரி முனிவருக்குப் பணிவிடைகளைச் செய்தமையால், அதன் வலிமை காரணமாக தென்பாண்டிச் சீமையின் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தையும் போக்கியவர் கோரக்கர்.


அத்ரி பரமேஸ்வர சுவாமியை மனதார வணங்கி நீர் ஊற்றில் தலை நனைத்து பிறகு, அங்கேயுள்ள அரச மரத்தின் முன்பாக தியானத்தில் அமர்வது தான் இங்கே குறிப்பிடும்படியான விசேஷம்.


பரம்பொருளை வணங்கி விட்டு, மனதார அரசமரம் முன்பு தியானத்திலிருப்பவர்களின் மனக்குறை நீங்கப் பெற்று எண்ணிய காரியங்கள். ஈடேறுகின்றன. பறைசாற்றலோ விளம்பரமே இல்லாமல் அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தெல்லாம் அத்ரி மலைக்கு வருகின்றார்கள்.


ஞாயிறு, அமாவாசை, பங்குனி, சித்திரை, மாதப் பிறப்பு, பிரதோஷம் போன்ற காலங்களில் சிறப்பான சிறப்பு பூஜை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கிறது


அத்ரிமலையின் அற்புதங்களில் இது கடுகளவே... மலை ஏறினாலோ புதைந்து கிடக்கும் பிரம்மாண்டங்கள்


அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை



































அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி



அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை


நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள 
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 29-12-2015 தேதி செவ்வாய் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்மேலும் தகவல்கள்களுக்கு

cell :9842078733
9043942091,
9843016651

Wednesday, 16 December 2015

மூன்று முக்கிய வழிபாடுகள்:

மூன்று முக்கிய வழிபாடுகள்:

குல குரு வழிபாடு
ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலகுரு ஒருவர் இருப்பார்.அவரே அவர் குலத்துக்குச் சமயம் சார்ந்த வாழ்வியலுக்கு வழிகாட்டி ;ஞானம் அளிப்பவரும் கூட .உங்கள் குலகுரு யார் என்பதை அறிந்து ,அவரை இயலும் போதெல்லாம் வழிபட வேண்டும்.குலகுரு யார் என்பது தெரீயவெ இல்லை என்றால் ,உங்கள் மனம் ஈடுபடக்கூடிய மரபு வழிபட்ட துறவியைக் குருவாக ஏற்கலாம்.எது எப்படி ஆனாலும் குலகுரு வழிபாடு மிக முக்கியமானது ஆகும்

குல தெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு,ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே குல தெய்வங்கள் உண்டு.அவை கிராம தேவதைக் கோவில்களாகவே இருக்கும்.அவரவர் தம் குல தெய்வ கோயில்களுக்கு இயலும் போதெல்லாம் செல்ல வேண்டும்.வருடம் ஒரு முறையாவது செல்ல வேண்டும்

குல முன்னோர் வழிபாடு
மூன்றாவது முக்கியமான வழிபாடு நீத்தார் வழிபாடாகும் .இறந்து போன முன்னோர்கள் நீத்தார் எனப்படுவர்.தாத்தா ,பாட்டி,அம்மா,அப்பா முதாலான முதியவர்களை வாழும் காலத்தில் வயதான நிலையில் ஆதரிக்க வேண்டும்.
அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.இருக்கும்போது உதவியோடு இறந்த பின்னரும் அவர்களை நினைவு கூற வேண்டும்

இம்மூன்று வழிபாடுகளை முறைப் படிச் செய்யாமல் எந்தப் பரிகாரம் செய்தாலும் ,எவ்வளவு பயனும் கிடைக்காது என்பது ஒட்டு மொத்தச் சாத்திரங்களும் ஓங்கிய குரலில் சொல்லும் தலையாய உண்மையாகும்

அமானுஷ்ய குலதெய்வ வழிபாடு

அமானுஷ்ய குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது


அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று
விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண் ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது

.குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

சனிக்கிரக தோஷம் நீக்கும் ஸ்ரீசத்குருசம்ஹாரமூர்த்தி சுவாமிகள்


சனிக்கிரக தோஷம் நீக்கும் ஸ்ரீசத்குருசம்ஹாரமூர்த்தி சுவாமிகள்



























சனிக்கிரக தோஷம் நீக்கும் ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள்
திருச்செந்தூர் கடற்கரையில் சூரசமஹாரம் நடக்கும் இடத்தில் முருகனின் ஜெயந்தி மண்டபத்திற்கு அருகில் சுமார் பத்திற்கும் மேல் சித்தர் சமாதிகள் உள்ளன. அவற்றில் கடைசியாக தென்னை மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தவர் தான ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள். .
சுவாமிகள் பெயரிலே அவரைப்பற்றிய முழுமையான தகவலும் அடங்கி உள்ளது. அவரை வணங்கினால் ஏவல், பில்லி சூனியம், எதிர்ப்பு, கோர்ட், கேஸ் வழக்குகள் மற்றும் சனிக் கிரஹத்தின் கொடிய தோஷங்களும் விலகி விடும்



ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்திசுவாமிகள் 1880ம் ஆண்டுநல்லமுத்து பொன்னம்மாள் தம்பதிகளுக்க திருச்சி மாவட்டம் வாதிரிப்பட்டியில் குழந்தையாக திருஅவதாரம் செய்தார்கள். பெற்றோர்கள் சுவாமிக்கு கனகசபாபதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். சுவாமிகளுக்கு 1901ல் சொர்ணத்தம்மாள் என்ற பெண்மணிக்கும் திருமணம் நடந்து 3ஆண்டுகள் புதுச்சேரி நெல்லிகுப்பத்தில் குடும்பம் நடத்தினார்கள்.



பின்பு பொன்அமராவதி அரசுபபள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இந்த சமயத்தில் சிதம்பரம் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. திருச்சி மலைக்கோட்டையின் வடமேற்கு சரிவின் தரை தளத்தில் தெப்பக்குளத்தின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ள நந்தி கோவில் தெருவில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோவிலில் தவக்கோலத்தில் அமர்ந்திருந்த சுவாமிகளை 12 ஆண்டுகள் கழித்து உறவினர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டார்

அதுமுதல் சுவாமிகள் சத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமியாக அனைவராலும் அழைக்கபட்டார்கள். சில காலம் கழித்து சுவாமிகள் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிழமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து வந்தார்கள். இந்த காலத்தில் சுவாமிகள் நடத்திக் காட்டிய அற்புதங்களும், அதிசயங்களும் ஏராளம் ஆகும். அவற்றை எல்லாம் எழுதினால் இக்கட்டுரை முடியாது. இவற்றில் சிகரம் வைத்தாற்போல் அமைந்த அதிசய செய்தியை மட்டும் இங்கு விவரிக்கின்றேன்.

குடுமியான்மலை குகையின் முன்னால் சுவாமிகள் ஒரு அத்திமரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது மலைக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள வீரப்பட்டி என்ற ஊரில் உள்ள அடர்ந்த காட்டில் அதிசயிக்கத்தக்க தன்மைகொண்ட மரம் ஒன்று இடிவிழுந்து கருகி பட்டு போயிருப்பதைத் தன் ஞானதிருஷ்டியால் அறிந்தார். மகிமை பொருந்திய அம்மரத்தின் பெயர் தான்றிமரம். இந்த மரத்திற்கும் நளமகாராஜனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை இங்குக் காண்போம்.

நளன் எல்லாவற்றையும் சனி தோஷத்தால் இழந்து சமையல்காரனாகவும், தேரோட்டியாகவும் வந்து தேரோட்டி சென்ற பொழுது ராஜாவின் அங்கவஸ்திரமான மேலாடை கீழே விழுந்து விட்டது. அதனை தேடி எடுக்க ரதத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய நளமகராஜன் தான்றி மரத்தின் மீது வஸ்திரம் இருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நான்கு திசைகளுக்கும் நான்கு கிளைகள் செல்வதைக் கண்டார். அதில் ஏறி வஸ்திரம் எடுக்கும்முன்பு மரத்தை ஒருமுறை சுற்றி வணங்கிவிட்டு அதில் ஏறினார். மரத்தில் நான்கு கிளைகளுக்கும் கிளைக்கு ஒன்றாக நான்கு கனிகள் இருந்தன. அதை பறித்து சாப்பிட்டபொழுது ஒவ்வொன்றும் ஒருவித சுவையாக இருந்தது. அவைகளை நளன் பறித்து சாப்பிட்ட பொழுது இனிப்பு சுவையை உடைய கனியைச் சாப்பிட்ட பொழுது அங்கு ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது. அசரீரியாக சனிபகவான் நளனிடத்தில் இந்த தலத்திற்கு வந்து தான்றி மரத்தை நீ வணங்கியதால் நான் உன்னிடம் விட்டு விலகிக் கொள்கிறேன். நீ குடும்பமாக வந்து திருநள்ளாறில் என்னை வழிபடு என்று அருளினார்.

இவ்வளவு சிறப்புப்பெற்ற நளமகாராஜனுக்கே சனி விலக செய்த இந்தத் தான்றி மரத்தின் சிறப்பை உலக மக்கள் அறியும்படி அதனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று சுவாமிகள் எண்ணினார். சுவாமிகள் குடுமியான மலையை விட்டு நீங்கி தான்றி வனத்தை அடைந்தார். அங்கு பட்டுப்போயிருந்த தான்றி மரத்தை அடைந்தார்கள்



இந்த மரத்தின் தூரில் உள்ள பொந்தினுள்ளே சுவாமிகள் அமர்ந்து தியானத்தைத் தொடங்கி விட்டார்கள். சுவாமியின் ஆணைப்படி அன்பர்கள் வெளியே அடிமரத்தையும் அவர் அமர்ந்துள்ள பொந்தையும் சுற்றி களிமண்ணைக் கொண்டு முழுமையாகப் பூசிவிட்டார்கள். சிறிது நாட்கள் கழித்து பட்டுப்போன அந்த மரம் மெல்ல தளிர்க்க தொடங்கியது. புரவி படர்ந்து பூத்துக் குலுங்கியது.

இதனைக்கண்ட மக்கள் சுவாமியின் சக்தியைக் கண்டு போற்றி வணங்கினர். அதுபோல் சுவாமிகளின் புகழ் எல்லா ஊர்களிலும் பரவியது. இப்பொழுது மரம் மேலும் நன்கு தழைத்து பெரிய விருட்சமாக விளங்குகிறது. இதன் இலையை எடுத்து உண்டாலே பிணி விலகுகிறது.சனிக்கிரக தோஷம் முடக்கம் நீங்குகிறது.



அதன் பின்னர் சுவாமிகள் அங்கிருந்து திருச்செந்தூர் வைகாசி விசாகத்திற்கு தன் மனைவி சொர்ணத்தம்மாள் மற்றும் அன்பர்களுடன் போயிருந்தார்கள். விழா முடிந்த பின்பு தான் திருச்செந்தூரில் தங்க விரும்புவதானசும் மனைவியை அழைத்துக்கொண்டு அன்பர்களை ஊருக்கு கிளம்பி போகும்படி கட்டளையிட்டார்கள்.

பின்னர் 1938ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி புரட்டாசி 25ம் தேதி செவ்வாய்கிழமைபரணி நட்சத்திரத்தில் தான் முக்தி அடையப் போவதை தன் மனைவிக்கும் அன்பர்களுக்கும் தெரியப்படுத்தினார்கள். அந்த நாளும் வந்தது அன்று சுவாமிகள் அதிகாலையில் ஓங்காரநாதத்திற்கு அப்பனுக்கே பாடம் சொன்ன திருச்செந்திலாண்டவனுடன் ஒளி நிலை எய்தி ஒன்று கலந்தார்கள்

அங்கு அழுது கொண்டே நின்ற சுவாமியின் துணைவியாரிடம் முருகப்பெருமானே ஒரு துறவியாக வந்து ஏன் அழுகிறாய்? இந்தா பிடி மண் இதைக் கொண்டு போய் தான்றி மரத்தில் நிலை நிறுத்து என்று அருளினார்.

அதன்படியே அத்திருத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து அந்த தலத்திற்கு தான்றீஸ்வரம் என்று பெயர் சூட்டப்பட்டது. இன்று தான்றீஸ்வரத்தில் சுவாமிகளின் திருஉருவப்படம் காட்சி தருகிறது. அன்று பட்டமரம் தழைத்த இந்த தான்றி மரப்பொந்தில் தான் சுவாமியின் ஆலயத்தில் இன்றும் மாதம் தோறும் பரணி, ஆயில்யம் ஆகிய நட்சத்திரத்திலும் பௌர்ணமி திதியிலும் அன்னதானங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் குரு பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் திரளாக சுவாமியின் பக்த கோடிகள் சிறப்பாக பூஜைகளைச் செய்து வருகிறார்கள்.

மாமியார் கொடுமைக்கு ஆளான மருமகள் எத்தனையோ பேர்கள் சுவாமியை வணங்கி நல்ல வாழ்க்கை அமையப்பெற்றார்கள். கோர்ட் கேஸ் விவகாரங்களில் உயிர் ஆபத்துக்களில் இருந்தும் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சுவாமியின் அருளையும் கருணையையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களும் தங்களது வாழ்க்கை துன்பங்களில் விடுதலை அடைய வேண்டும்
மேலும் தகவல்கள்களுக்கு :
N.செந்தில்குமார்
திருநெல்வேலி 
cell :+91 98420 78733