நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 30 October 2015

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி


கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்






கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி


கருப்பங் கலைந்தால் கனிமா துளம்தோல்
பெருமரப் பட்டைய சோகு .-------------------குறள்


விளக்கம் :-
தாய் கருவுற்ரும் ,பின்னர் கலைந்துவிட்டால் ,அதற்கு மாதுளம் பழ தோல் உடன் அசொகமரப் பட்டையும் சம அளவு எடுத்து கொதி நீரிட்டுப் பதமுடன் 45 நாள் காலையில்அருந்தி வர உடல் நலம் தேறி ,நலம் பெற்று மீண்டும் கரு உண்டாகி நிலைத்துப் பிறக்கும்

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி


ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி


ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள், தெரியாமல் செய்தபாவங்கள்,அறிந்து செய்த பாவங்கள்,அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு

சனிக்கிழமையன்று (இன்று 08.11.2014 சனிக்கிழமை) காலையில் வன்னி மரம் அருகே அமைந்துள்ள விநாயகர்க்கு பச்சரிசியை ஒரு கையில் அள்ளி (நன்கு பொடி செய்து) சூரியநமஸ்காரம் செய்துவிட்டு மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த பச்ச அரிசிமாவை வன்னி மரம்விநாயகரைச் சுற்றிப்போட வேண்டும் ,


அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.

இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.


இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன்இழந்துபோய்விடும். இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது

சித்தர்கள் , திருவண்ணாமலை பற்றிய மேலும் சில ரகசியங்கள்



சித்தர்கள் , திருவண்ணாமலை பற்றிய மேலும் சில ரகசியங்கள்





சித்தர் சமாதி என்பது, சித்தர்கள் தங்கள் யோக நெறியினால் முத்தி நிலையடைந்த பின்பு, அவர்கள் தங்கள் உடலின் இயக்கத்தை நிறுத்தி வைத்து விட்டு, பல ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த உடலை மீண்டும் இயங்கவைத்து உலகத்தில் நடமாடுவது என்பர். சித்தர் தங்கள் உடலியக்கத்தை நிறுத்திவிட்டு, உடலைப் பூமிக்குள் புதைத்து வைக்கச் செய்வர். அவ்வாறு உடல் புதைக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடம் சமாதி எனப்படும். சமாதி நிலையில் இருப்பதும் யோக நெறியின் உச்ச நிலையென உரைக்கப்படுகிறது.
அவ்வாறு, சித்தர்கள் சமாதி அடைந்த இடங்களாகத் தமிழகத்திலும் பிற இடங்களிலும் சுமார் 39 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வாரு இடமும் ஒவ்வொரு சித்தர் அடங்கிய இடமாகக் கூறப்படுகிறது. சித்தர்கள் அடங்கிய 39 இடங்களும் இன்றைய நிலையில் சைவ மதத்தின் திருக்கோயில்களாகவும் வழிபாட்டிடங்களாகவும் இருக்கின்றன. சித்தர்கள் அடக்கமாகிய சமாதிகள் சைவமதத்தின் திருக்கோயில்களாக மாறியது பற்றிய உண்மை ஆராய்தற்கு உரியது

தில்லையில் திருமூலர்,

அழகர் மலையில் இராமதேவர்,

அனந்த சயனத்தில் கும்ப முனி,

அருணையில் இடைக்காடர்,

வைத்தீஸ்வரன் கோயிலில் தன் வந்தரி,

எட்டுக்குடியில் வான்மீகர்,

மருதாசலத்தில் பாம்பாட்டி,

மாயுரத்தில் குதம்பை,

ஆருரில் கமல முனி,

பழநியில் போகர்,

பரன்குன்றில் குதம்பை,

திருப்பதியில் கொங்கணர்,

இராமேசுரத்தில் பதஞ்சலி,

காசியில் நந்தி,

கருவூரில் காங்கேயர்,

பொய்யூரில் கோரக்கர்,

சோதிரங்கத்தில் சட்டமுனி,

மதுரையில் சுந்தரானந்த தேவர்


இந்த இடங்களில் அமைந்த ஆலயங்களில் எல்லாம், மக்கள் கூட்டம் ஏன் அலை மோதுகிறது என்கிற கேள்விக்கு , உண்மை உங்களுக்கு புலப்படக்கூடும்.


சித்தர்கள் இன்றும் அருள் பாலிக்கும் இடங்கள் :


கலசப்பாக்கம் மலபீடான் சித்தர் என்ற பூண்டி சித்தரின் ஜீவசமாதி சென்னை அருகில் போரூர்/கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில் உள்ளது.இவர் மாத சிவராத்திரி அன்று திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகிறார்.

ஸ்ரீபெருமானந்த சித்த சாமிகள்(தேனி மலை) அவர்களின் ஜீவசமாதி புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் காரையூர் வழியில் உள்ள தேனி மலையில் இருக்கிறது.ஏராளமானவர்கள் இவரை வழிபட்டுவருகின்றனர்.





வாத்யார் ஐயா ஸ்ரீமுத்துவடுகநாத சித்தர்(சிங்கம்புணரி) ஸ்ரீவராஹி உபாசனையில் அனுபவம் மிக்கவர்.
திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீவராஹி தீர்த்தத்திற்கு தினமும் வந்து வழிபடுகிறார்.ஸ்ரீமுத்துவடுகநாத சித்தர்
தவிர தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீவராஹி சன்னதி, கும்பகோணம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வராஹி அம்மன் சன்னதிக்கு தினமும் வந்து வழிபடுகிறார்.இவர் தினமும் இந்தியா முழுக்க சூட்சும ரீதியாகப் பயணிக்கிறார். இதனால்தான் மாந்திரீகக்கட்டுக்களால் இந்தியா பாதிக்கப்படுவதில்லை.

ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் திருவிசைநல்லூர், திருமா நிலையூர், கரூர், கராச்சி,மானாமதுரை, நெரூரில் ஜீவசமாதி யடைந்துள்ளார்.




சீரியா சிலம்பாக்கினி சித்தர் திருஅண்ணாமலையில் வசிக்கிறார்.இவர் பெயரில் சிலம்பாக்கினி மலை ஒன்று அங்கு உள்ளது.

ஸ்ரீபெத்தநாராயணசித்தர் பல நூற்றாண்டுகளாக திருஅண்ணாமலையில் வாழ்கிறார். ஸ்ரீஉண்ணாமுலை சமேத ஸ்ரீஅண்ணாமலை ஈசனே போற்றி என வணங்கி ஸ்ரீபெத்த நாராயண சித்த சுவாமிக்கு நமஸ்காரம் என கிரிவலம் செய்யும்போது ஜபித்து ஆங்காங்கே பூக்களைத் தூவிக்கொண்டு வந்தால் அவர்களுக்கு ஏராளமான நற்பலன்கள் உண்டு.

இடியாப்பசித்தர் இமயத்தில் அன்னபூரணி சிகரங்களில் உறைந்திருக்கிறார்.

சீனந்தல் சிவப்பெருவாளச்சித்தர் திருஅண்ணாமலையில் பிறந்தவர்.ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் உணவு சார்ந்த பிரச்னைகள் தீரும்.உணவகம், காய்கறி , மளிகைப்பொருள் வியாபாரம் செழிக்கும்.வயிறு சார்ந்த நோய்கள் தீரும். அன்ன துவேஷத்தால் சரியாக சாப்பிடமுடியாதவர்கள் ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் குணமாகும்.

திருவல்லம் பாம்பணையான் சித்தர் மார்கழிமாத பவுர்ணமி அன்று மனிதவடிவில் கிரிவலம் அண்ணாமலையில் வந்துகொண்டிருக்கிறார். இவரை நினைத்தாலே பாம்புகளால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

கணதங்கணான் சித்தர் இவர்தான் மாத சிவராத்திரி மகிமையை பூமிக்கு உணர்த்தியவர்.இங்குதான் வசிக்கிறார். ரோகிணி,திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களின் கபாலம் சார்ந்த நோய்கள் குணமாகும்.சிலந்தித் தலைவலி, மைக்ரான் தலைவலி குணமாகும்.

மாதசிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்த ஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவர் தரிசனம் பாக்கியம் உள்ளோருக்கு கிட்டும்.

இடைக்காடர் திருஅண்ணாமலை, திருவிடை மருதூர், இடைக்காட்டூரில் ஜீவசமாதியடைந்திருக்கிறார். இவர் கோடி ஆண்டுகளுக்கு கார்த்திகை தீபம் தரிசித்தவர். திருஅண்ணாமலைபற்றி பரிபூரண ரகசியம் அறிந்தவர் இவர் மட்டுமே!!!


ஒரு தடவை தீபம் பார்த்தாலே , எவ்வளவோ புண்ணியம்.. கோடி தடவை.. யோசித்துப் பாருங்கள் !! இன்றும் இடைக்காடர் , அண்ணாமலை ஆலயத்திலும், கிரிவலப் பாதையிலும் அரூபமாகவோ, வேறு ரூபமேடுத்தோ உலவுகிறார். உங்களுக்கு யோகமெனில், அவர் தரிசனம் கிடைக்க கூடும்.

எந்த நாளிலும், நீங்கள் கிரிவலம் செல்லலாம். சித்த புருஷர்களின் உடலை தழுவி வரும் காற்று , உங்கள் மேல் பட்டாலே , உங்களுக்கு வாழ்வில் நல்லதொரு ஏற்றம் உண்டாகும்.

சித்தர்கள் மலைகளிலேயே தங்கள் குடிலை அமைத்துக் கொண்டு மருந்தாய்விலும் யோக நெறியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த மலை ‘சித்தர் பருவதம்’ என்று வழங்கப்படும். சதுரகிரி மலையையே சித்தர் பருவதம் என்பர். இம்மலையில் அனேக சித்தர்கள் வாழ்ந்ததாகச் சதுரகிரிமலை தலபுராணம் கூறுகிறது. சதுரகிரி மலையைச் சித்தர்கள் பல பெயர்களால் வழங்கினர். போதகிரி, பொதிகைகிரி, சூரிய கிரி, மயேந்திர கிரி, கும்ப கிரி, பரம கிரி, கயிலாயம் என்னும் வேறு வேறு பெயர்களால் குறிப்பிடும் போது, இடங்களைக் கண்டறி வதில் மயக்கம் உண்டாகிறது.

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் , சதுரகிரியோ அல்லது திருவண்ணாமலை யோ - அடிக்கடி சென்று வந்து கொண்டு இருங்கள். ஈசன் , உங்களை நிச்சயம் நல்லதொரு நிலையில் வைப்பது உறுதி

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை


அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை



அத்ரி மலையின் தெய்வீக அனுபவங்கள்




நெல்லை மாவட்டம் அம்பசமுத்திரம்
ஆழ்வார்குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரிமலை அமைந்துள்ளது.

இங்கு அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம். அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.
மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.மேலும் கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது.
சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு. அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.

பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை

சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது

இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;

வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.

அத்ரி மகரிஷியின் கோவில்வருகிறவர்கள்
.வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை;

















அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு
04-11-2015 புதன் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும்  ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651


Thursday, 29 October 2015

குருவிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்?


குருவிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்?




கொஞ்சம் விளக்கி சொல்வது என்றால் நாம் குரங்கு குட்டி மாதிரி இருக்க வேண்டுமா அல்லது பூனை குட்டி மாதிரி இருக்க வேண்டுமா

நான் ஒரு போதும் குரங்கு குட்டியாக இருக்க ஆசைபட்டதில்லை. ஏன் எனில் நீங்கள் குரங்கையும், குரங்கு குட்டியையும் பார்த்து இருக்கிறிர்களா

ஆம், குரங்கு மரத்திற்க்கு மரமும், மாடிக்கு மாடி தாவும் போது சிறிது கவனித்து பாருங்கள். அப்படி குரங்கானது தாவும் போது அதன் குட்டியை பாருங்கள்! குட்டிதான் அதன் தாயை கெட்டியாக பிடித்திருக்கும். தாய் குரங்கோ, நம்து குழந்தை (குட்டி குரங்கு) நம்முடன் இருக்கிறது என்ற நினைவே இல்லாமல் அசாத்தியமாக தவ்வி கொண்டிருக்கும். இதை பார்க்கும் போதே எனக்கு மனம் பதறும்… எங்கே குட்டியானது விழுந்து விடுமோ என்று!

ஆனால், நீங்கள் பூனையையும் பூனை குட்டியையும் பார்த்து இருக்கிறீர்களா… பூனை குட்டியானது அமைதியாக மட்டுமே இருக்கும், பூனையின் தாயே அந்த குட்டிக்கு தேவையானதை செய்யும். ஆம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு செல்ல வேண்டுமானால் தாயே அதை பாதுகாப்பாக வாயால் கவ்வி கொண்டு எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்த்து விடும்.

ஆம், நாம் பூனை குட்டி போல அமைதியாக இருக்க(சும்மா இருக்க) மட்டுமே முயற்ச்சி செய்தால் போதும் மற்றதெல்லாம் நமது குரு நாதர் வள்ளல் பெருமானே தாய் தன்மையுடன் இந்த சமய்த்தில் நாம் இது செய்ய வேண்டும் என்றால் அந்த இடத்தில் நம்மை கொண்டு சென்று விட்டு விடுவார். இந்த இடத்தில் நாம் இருக்க கூடாது என்றாலும் அந்த இடத்தில்ருந்து நீக்கி பாதுகாப்பான இடத்திற்க்கு நம்மை மாற்றி விடுவார்.

மேலும் ஒரு முறை குரங்கு குட்டியானது தாயை பிடித்திருக்கும் பிடியை விட்டு விட்டால் அவ்வளவுதான் அந்த குட்டியை மீண்டும் அந்த தாய் சேர்த்து கொள்ளாது.

ஆனால் பூனை குட்டி வழி மாறி எங்காவது கிடந்தால் கூட அந்த தாய் பூனை மீண்டும் அந்த குட்டியை தேடி வந்து தூக்கி சென்று நல் வழிபடுத்திவிடும்

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பெருமை


ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பெருமை




ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்
பெருமை


ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்
பெருமையை பலர் சரியாக இன்னும் உணரவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த மந்திரத்தை கொண்டு பல விஷயங்களை சாதிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ளதை சரியாக கடைபிடித்தோமானால் வெற்றி நிச்சயம்.

கணவன்-மனைவி, காதல்,மாமியார்-மருமகள் போன்ற எந்த உறவு விட பிரச்சனைகளுக்கு:

இரவு தூங்கு முன் கண்மூடி 72 முறை 'ஓம்' என மனதிலேயே தியானித்து கொண்டு மூச்சு விட வேண்டும். அதாவது மூச்சிழித்து வெளிவரும் போது சொல்லி முடிக்க வேண்டும். அப்படி உள்ளிழுத்து வெளி வருவது ஒன்று என கணக்கில் 72 முறை கூறவேண்டும்.

பண பிரச்சனைகளுக்கு 48 முறை

உடல் நலம் பெற 58 முறை

வம்பு, வழக்கு சரியாக 78 முறை

நல்ல வேலை கிடைக்க 80 முறை

கடன் பிரச்சனைகளுக்கு 84 முறை

குழந்தையின்மை 52 முறை

மூச்சு எண்ணிக்கை மிக முக்கியம். மேலும் இதை இரவு உறங்குமுன் கூறுவது நல்ல பலனளிக்கும்

Wednesday, 28 October 2015

சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை



சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை







தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர். இந்த கிராமத்தில் ஸ்ரீவாலைகுருசாமி கோவில் இருக்கிறது. இத்தலத்தில் சித்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வமாக வணங்கிய வாலாம்பிகை அம்மன் அருள்பாலித்து வருகிறாள். இந்த அம்மனுக்கு பாலாம்பிகை என்ற பெயரும் உண்டு.

கொம்மடிக்கோட்டையில் குடிகொண்டிருக்கும் வாலாம்பிகை, தனக்கு ஒரு ‘குரு’ வேண்டும் என்று எண்ணி, வடக்கில் இருந்து ஸ்ரீவாலைகுருசாமியையும் (சிவன்), காசியானந்தரையும் சுமார் 800 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்துக்கு அழைத்து வந்ததாகவும், அவர்களுக்கு தன்னுடைய இடத்திலேயே ஆலயம் அமைத்து வணங்கிய தாகவும் தல வரலாறு கூறுகிறது.

இங்கு வாலைகுருசாமியும், காசியானந்தரும் ஒரே கருவறையில் பிரதான தெய்வங்களாக காட்சி தருகின்றனர். அபூர்வமாக காட்சி தரும் அந்த இருவரையும் முழுமையாக சரண் அடைந்தால், குருவின் அனுக்கிரகத்தையும், அனைத்து பாக்கியங்களையும் பெறலாம். மேலும் வாலாம்பிகையின் தரிசனமும் ஒரே இடத்தில் கிடைப்பது அற்புதத்திலும் அற்புதம்.

இதனை அறிந்த சித்தர்கள் இங்கு வந்து, வாலைகுருசாமி–காசியானந்தருடன் வாலாம்பிகையையும் வணங்கி இருக்கிறார்கள். இதற்கு சித்தர்கள் பாடிய பாடல்கள் சான்றாக உள்ளன.

வாலாம்பிகை பற்றி திருமூலர் தனது திருமந்திரத்தில்,

‘சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண்பிள்ளை
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்
பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்
சுத்திய நாய் போல கதறுகின்றனவே’
 
– என்று பாடி உள்ளார்.

இத்தகைய சிறப்பு மிக்க ஸ்ரீவாலைகுருசுவாமி கோவிலில் ஸ்ரீசந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சன்னிதி, ஸ்ரீகன்னி விநாயகர் சன்னிதி, ஸ்ரீபாலமுருகன் சன்னிதி, 
ஸ்ரீ சொர்ண ஆகார்ஷண பைரவர் சன்னிதிகளும் உள்ளன.

மனோன்மணி என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. மனதை அழித்து ஞானநிலைக்கு அழைத்துச் செல்பவள் என்பது இதன் பொருள். புருவ மத்திக்கு மேலே, பிரம்ம மந்திரத்திற்கு கீழ் உள்ள, பிந்து முதலிய எண் வகை நிலைகளில் இறுதி நிலை உன்மனி எனும் மனோன்மணியாகும். அங்கு உறைவதால் இவளுக்கு மனோன்மணி என்றும் பெயர். பற்றற்ற நிலையில் மனம் இயங்குதல். அற்று நிற்கும் நிலை உன்மனி. அந்த நிலையில் அருள்புரிவதால் அம்பிகைக்கு இப்பெயர் ஏற்பட்டது. மனோன்மணி வடிவில் இருப்பதும் பாலாம்பிகையே.

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி, சொர்ண ஆகார்ஷண பைரவர் சன்னிதி அமைந்துள்ளது. சித்தர்கள் அனைவரும், அஷ்டமா சித்திகளை எளிதில் பெறுவதற்கு சொர்ண ஆகார்ஷண பைரவரை வழிபாடு செய்தனர். அவரது அருளாசியாலேயே அனைத்து சித்திகளையும் தடையின்றி எளிதாகப் பெற்றனர். அகத்திய முனிவர், சொர்ண ஆகார்ஷண பைரவரை வழிபட்டு பல வரங்களை பெற்று மகிழ்ந்தார்.

மனதை ஸ்திரப்படுத்தி அன்னை ஸ்ரீவாலையை அணுகுவதற்குரிய மனப்பக்குவத்தை பைரவர் வழிபாடு மூலம் தடையின்றி பெறலாம். நாமும் ஸ்ரீ சொர்ண ஆகார்ஷண பைரவரை வழிபட்டால், நமது ஜென்ம பாவ வினைகள் அனைத்தும் தீரும். நினைத்த காரியம் தடையின்றி எளிதில் கைகூடும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெறுகிறது.

கோவிலின் தல விருட்சமாக மஞ்சணத்தி மரம் உள்ளது. இந்த மரத்தின் இலைகளை நோய் தீர்க்கும் மருந்தாகவும் பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆரம்ப காலத்தில் கோவிலில் இருந்த மஞ்சணத்தியின் வயது பல நூறு வருடங்களுக்கு மேல் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன், அந்த மரம் பட்டுப்போனது. பக்தர்கள் மனக்கவலையுடன் இருந்தனர்.

புதிய மஞ்சணத்தி மரக்கன்றுகளை நடலாம் என யோசனை எழுந்தது. ஆனால் புதிய மரம் எதுவும் நடத் தேவையில்லை. பட்டமரம் துளிர்க்கும் என இறைவனின் உத்தரவு கிடைத்தது. அதே போல பழைய பட்டமரம் துளிர்த்து மரமாகியது. இதைக்கண்ட பக்தர்கள் மனம் குளிர்ந்தது.

இங்கு வருடந்தோறும் ஆவணி, சித்திரை மாதங்களில் திருவிழாக்களும், ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் மனோன்மணி அம்பாள் சமேத ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு திருக்கல்யாண உற்சவமும் பிரசித்தி பெற்றவை. சிவராத்திரி நாளன்று இரவு நான்கு கால பூஜையும், அபிஷேகமும், மார்கழி மாதம் பஜனையும், திருக்கார்த்திகை தினத்தன்று சிறப்பு பூஜையுடன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடக்கின்றன. இதுதவிர மாதந்தோறும் பவுர்ணமி பூஜை, அமாவாசை பூஜை, தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகார்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று இரவு லலிதா சகஸ்ர நாம பாராயணம், திருவிளக்கு பூஜையும் நடக்கின்றன.


மேலும் தகவல்கள்களுக்கு
cell :98420 78733