நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 9 November 2014

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை






மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.


மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர். செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.

இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. இதோ அதன் செய்முறை…!

பொருட்கள் அளவு

1. வெண்கடுகு 250 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்

மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. எங்கும் தேடி அலைய வேண்டாம். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இது எல்லாம் வல்ல போகர் பெருமான் மக்களுக்கு துன்பத்திலிருந்து விடுபட அருளியதாகும்

வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்



வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள்.

பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.

உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு. இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.

உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்

சூட்சும சக்தி


‘நான்’ என்ற எண்ணமும், தன்முனைப்பான ஆர்வமுமே ஒரு மனிதனின் வாழ்வியல் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. சாதனை செய்யத் தூண்டுகின்றது. ஒவ்வொரு மனிதனும் ‘தான்’ என்ற தன் முனைப்புடன் தான் உலகில் செயல்படுகிறான். ‘தன்னுடையது,’ ‘தனக்கு’ என்பது அவன் பிறந்து வளர்ந்து இந்த உலகை உணரத் தொடங்கும் பொழுதே வளர ஆரம்பித்து விடுகிறது. இறக்கும் வரை தொடர்கின்றது. இரண்டு வயதுச் சிறு குழந்தையே ஆனாலும், ஒரு பொம்மையை அதனிடமிருந்து பிடுங்கினால், ‘என்து, வேணும், கொண்டா’ என்றெல்லாம் அழுகிறது.

இந்தத் ‘நான்’ என்ற தனிமனித எண்ணமே ‘அகங்காரம்’ என்றும் ‘ஆணவம்’ என்றும், அதுவே ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடை என்றும் பல சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. பிறந்த உடனேயே, மனிதனை ‘மாயை’ சூழ்ந்து கொள்வதால் தான், அவனால் அதனை மீறிச் செயல்படவும் முடிவதில்லை. அதிலிருந்து விடுபடவும் முடியவில்லை. அதற்கான சரியான வழிமுறையும் மனிதனுக்குத் தெரிவதில்லை. ஆக, இந்தத் தன்முனைப்பு என்பது வாழ்வியலுக்கு ஆதரவாகவும், இறையை உணர்வதற்குத் தடையாக உள்ளதாகவும் கொள்ளலாம். ஆனால் ஒரு விஷயம் இங்கு சிந்திக்கவேண்டியதாகிறது. ஒவ்வொரு செயலையும் மனிதன் தன் ஈடுபாட்டோடு தான் செய்கிறானா? இல்லை. ஏதேனும் சில சக்திகள் அவனை அவ்வாறு செய்யுமாறுத் தூண்டுகிறதா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியதாகிறது.

உண்மையில் அனைத்துச் செயல்களையும் செய்வது யார்? நாம் தானா? அல்லது நம்மை ஆட்டி வைக்கும் ஏதேனும் சூட்சும சக்திகள் அவ்வாறு நம்மைத் தூண்டுகின்றனவா?. நாம் தான் என்றால் ஏன் இவ்வளவு சிக்கல்கள், குழப்பங்கள், தவறுகள், வேதனைகள்? அல்லது அந்த சூட்சும சக்திகள் தான் என்றால் ஏன் பல தோல்விகள், துயரங்கள், சோதனைகள்?. அவற்றின் சக்திகள் தான் எவ்வளவு? இதெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியவையாக உள்ளன.

உண்மையில் அந்தச் சூட்சும சக்திகள் என்பது எது? ஏன் அவை நம்மை ஆட்டிப் படைக்கின்றன? அவை நல்லவையா, கெட்டவையா?. அதற்கான விடைகளை நம்மால் உணர முடிவதில்லை. ஒருசிலருக்கு நன்மை தருபனவாகவும் மற்றவர்களுக்கு ஏன் தீமை செய்பவனவாகவும் அவை ஏன் நடந்து கொள்கின்றன?. அதற்கு என்ன காரணம்?. நாம் செய்த, பாவ, புண்ணியங்களா?. இல்லை. வேறு ஏதெனும் நம்மால் அறிய இயலாத காரணங்கள் உள்ளனவா?. நமக்குத் தெரியாது. நம்மால் அவ்வளவு எளிதில் அவற்றை அறிந்து கொள்ளவும் இயலாது. ஏன் நன்மை செய்பவர்கள், நல்லது நினைப்பவர்கள் துன்பப்படுகின்றனர், தீயவர்கள் வசதியோடு, செழிப்பாக வாழுகின்றனர்?. அதற்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா? மனிதன் செய்த கர்மவினை தான் காரணமா?. அல்லது வேறு ஏதேனும் சூட்சுமமான செயல்பாடுகள் உள்ளனவா?. விடை அறிவது மிக மிகக் கடினம்.

ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்கிறது நமது சாத்திரம். அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன என்றும் அது கூறுகிறது. அப்படியென்றால், அந்த நவக்கிரகங்களை சாந்தி செய்து விட்டால், பரிகாரம் செய்து விட்டால் போதுமே, ஊழிலிருந்து தப்பித்து விடலாமே! இப்படி எண்ணத் தோன்றும். ஆனாலும் அவை சாத்தியமா?

ஏனெனில், நம்மை ஆட்டி வைப்பவை வெறும் நவக்கிரகங்கள் மட்டுமல்ல; அதற்கும் மேலான, இறைவனின் ஏவலைச் செய்து முடிக்கக்கூடிய சில தேவதாம்சங்களும் உள்ளன என்பது தான் உண்மை. அவை தான் நம்மை வழிநடத்துகின்றன. நம்மை சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்கின்றன. துன்பத்திலிருந்து காக்கின்றன. அதே சமயம் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற விதிப்பாடு இருக்குமானால், அவற்றை அவன் அனுபவிக்குமாறும் விட்டு விடுகின்றன. அவற்றின் மூலம் அவன் தான் செய்த தவறை உணர்ந்து, தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே இவற்றின் நோக்கம்.

இவ்வகை சூட்சுமசக்திகளே தேவதைகளாகப் போற்றப்படுகின்றன. இவை, மனிதனின், மூளையில் தங்களது எண்ண அலையைப் பிரயோகித்து, அவரவர் கர்மவினைக்கு ஏற்றவாறு, அவனை நல்ல வழியிலோ, அல்லது தீய வழியிலோ செயல்படத் தூண்டுகின்றன. பாவ, மத்திய, புண்ணிய ஆவியுலகங்களையும் கடந்த நிலையில் வாழும் இவ்வகைத் தேவதைகள், இறைவனின் ஏவலர்களாகப் பணிபுரிகின்றன. இவற்றில் நல்ல தேவதைகளும் உண்டு. தீய தேவதைகளும் உண்டு. பிரதமர், அமைச்சர் என படி நிலையில் அரசு செயல்படுவது போல, இவ்வகைத் தேவதைகளும், இறைவனின் தலைமையில் செயல்படுகின்றன.

இது போன்ற தேவதைகள் வழிபாடு, இந்து மதத்தில் மட்டுமல்லாது, முஸ்லிம், கிறித்துவ, சொராஸ்டிரிய மதங்களிலும் காணப்படுகின்றன. கிறித்துவ மதத்தில் இவை ‘ஏஞ்சல்’ என்றும், இசுலாமியர்களால், ‘ஜின்’ வானவர், தூதர் என்றும் இவை குறிப்பிடப்படுகின்றன. மேலும் தீயவற்றைச் செய்யும் சாத்தான்களும், மலக்குகளும் உண்டு.

தேவதூதர்கள் இயேசு பெருமானுக்குக் காட்சி அளித்ததாக பைபிள் கூறுகின்றது. நபி பெருமானும் தேவதூதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டே குரானை அருளினார். இந்து மதத்திலும் தேவதைகள் சிறப்பிடம் பெறுகின்றன. ஹோமங்கள், யாகங்கள் யாவற்றிலும் அவற்றிற்கு அவிர்ப்பாகம் அளிக்கப்படுகின்றன. மேலும், சில தீய தேவதைகளும் உண்டு. சில குறி சொல்பவர்கள், சோதிடநிபுணர்கள், யக்ஷணி போன்ற தேவதைகளை உபாசனை செய்து, தங்களை நாடி வந்திருப்பவரைப் பற்றிய உண்மையான நிலையை அறிந்து, அதை அவர்களிடம் எடுத்துக் கூறி பொருள் ஈட்டி வருகின்றனர். அவற்றிலும் பல வகைகள் உள்ளன. அவ்வவற்றின் தன்மைக்கேற்ப அவற்றை, குறி சொல்ல, அடுத்தவர் மனதில் இருப்பதைக் கண்டறிய, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பணம் நகைகள் போன்றவற்றைக் கண்டறிய, களவு போன பொருட்கள், காணாமல் போன மனிதர்கள் பற்றி அறியப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் மிகக் கொடூரமானவைகளும் உண்டு. சற்று கொடூரம் குறைந்தவையும் உண்டு. தன்னை உபாசிப்பவர்களையே பழிவாங்கும் யக்ஷிணிகளும் உண்டு.

இவற்றில் தேவ யக்ஷணியும் உண்டு. அசுர யக்ஷனியும் உண்டு. அசுர யக்ஷணிகள் துர் தேவதைகளாகவும், நீச தேவதைகளாகவும் கருதப்படுகின்றன. யக்ஷனிகளில் கர்ண யக்ஷணி, தாம்பூல யக்ஷணி எனப் பலவகைகள் உள்ளன. மேலும் யோகினி, சாகினி, டாகினி, ஹாகினி, மோகினி எனப் பல தேவதாம்சங்களும் உண்டு.

சில மாந்த்ரீகர்கள், இது போன்றவற்றை உபாசித்து, தீய காரியங்கள் சிலவற்றிற்கு உபயோகப் படுத்துகின்றனர். இறுதியில் அவற்றாலேயே அழிந்தும் போகின்றனர்.

இந்துமதத்தைப் பொறுத்தவரை, தேவதைகள் அனைத்தும், சப்தமாதாக்களின் கட்டுப்பாட்டில் வருகின்றனர். ஸ்ரீ சக்ர மகாமேருவில் வீற்றிருந்து இவ்வுலகைப் பரிபாலிக்கும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் காவல் நாயகிகளாக இந்த சப்தமாதாக்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சன்னதியின் எதிரே இவற்றிற்கு சன்னதிகள் இருக்கும். இம் மாதாக்களுக்குக் காவலாக ஸ்ரீ சாஸ்தா அல்லது அய்யனார் இருப்பார். சில சமயங்களில் சில முனிவர்களின் திரு உருவங்களும், விநாயகப் பெருமானின் சன்னதியும் கூட அடுத்து இருக்கும். இச் சப்த மாதாக்களில் வாராஹி மிகவும் சக்தி வாய்ந்தவள். கேட்ட வரம் தருபவள். இவளை வழிபட்டுத் தான் சோழச் சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் மாபெரும் வெற்றி அடைந்தான் என்பது வரலாறு. தஞ்சாவூர் அரண்மனையை ஒட்டி ஸ்ரீ வாராஹிக்கு தனி ஆலயம் உள்ளது. தஞ்சை பிரகீதீஸ்வரர் ஆலயத்திலும் தனிச் சன்னதி உள்ளது. இது போக சப்த மாதாக்களான பிராமி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி ஆகியோரை வழிபட நன்மைகள் பெருகும்.

எனவே, நம்மை நாமே அறியாமல் கட்டுப்படுத்தும் தேவதைகளின், சூட்சும சக்திகளின் பாதுகாப்பினைப் பெற சப்த மாதாக்களையும், ஸ்ரீ சக்ர மாதாவினையும் சரணடைவோம். வளம் பெறுவோம்.

வாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்


வாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்


வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இதமான தென்றல் தவழும் காலநிலைக்கு மாற்ற மரங்கள் துணைபுரிகின்றன. அதனால் இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் இருப்பிடத்தை தேர்ந்தெடுப்பதற்கு பலர் ஆசைப்படுகிறார்கள். வீட்டில் இருக்கும் காலி இடங்களிலும் மரம், செடி, கொடிகள் வளர்த்து இயற்கையின் சுவாசத்தை மாசின்றி அனுபவிக்க முயற்சிக்கிறார்கள். வீட்டில் வளர்க்கப்படும் அல...ங்கார செடிகள் வீட்டின் அழகியலில் பங்கெடுத்துக்கொள்கின்றன.

காய்கறிகள் வகையை சார்ந்த செடிகள் வீட்டின் சமையல் தேவையை பூர்த்தி செய்கின்றன. மரங்கள் நிழல் தரும் இயற்கை குடையாக மாறி வீட்டு பகுதியில் வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்துபவையாக நிமிர்ந்து நிற்கின்றன. வீட்டில் தோட்டம் அமைப்பது பலருக்கு பிடித்தமான வேலையாக மாறி இருக்கிறது. இருக்கும் குறைந்த இடத்திலும் அதற்கு ஏற்ப செடிகளை வளர்த்து தங்கள் செடி வளர்ப்பு ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். வீட்டு தோட்டத்தில், வீட்டை சூழ்ந்திருக்கும் பகுதியில் வளர்க்கும் மரங்கள், செடிகள் பற்றியும் வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அத்தகைய மரம், செடிகளை பற்றி பார்ப்போம்.

* வீட்டின் தெற்கு, மேற்கு பகுதிகள் மரம் வளர்ப்பதற்கு சிறந்த இடங்களாகும். அதிலும் தென்மேற்கு பகுதி, தெற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில் வேப்பமரம், அரச மரம், ஆலமரம், மாமரம், பலா மரம், சப்போட்டா, முந்திரி, தைல மரம், தென்னை மரம் போன்ற மரங்களை வளர்க்கலாம்.

* வாழை மரம், எலுமிச்சை மரம், மாதுளை மரம், கொய்யா மரங்களையும் வளர்க்கலாம்.

* இடம் இருக்கும் பகுதிகளில் பூஞ்செடிகளை வளர்க்கலாம். மல்லிகை பூஞ்செடி மணம் பரப்புவதுடன் மனதுக்கு உற்சாகத்தையும் தரும்.

* துளசி செடியை மாடத்தில் வைத்தும் வளர்க்கலாம். மண் பரப்பிலும் துளிர்விட செய்யலாம். தொட்டிகளிலும் வளர்க்கலாம். அவை உடல் ஆரோக்கியத்தை பேணும் மருத்துவ குணங்களை தன்னகத்தே பெற்ற மூலிகை செடியாக இருப்பதால் கட்டாயம் வீட்டில் துளசியை இடம்பெற செய்ய வேண்டும்.

* கீரைவகைகள், காய்கறி செடிகளை இடவசதியை பொருத்து தோட்டமாக பயிரிடலாம். அல்லது மண் தொட்டிகளில் வளர்க்கலாம்.

* தென்மேற்கு திசையில் கருவேல மரம் வைக்கலாம். அது வீட்டுக்கு நன்மை தரும் மரவகைகளுள் முக்கியமானது ஆகும்.

* வீட்டு பகுதியில் கண்டிப்பாக புளியமரம் வளர்க்கக்கூடாது.

* வில்வமரம், இலுப்பை மரம், பனைமரம், அவுரி, எருக்கு, மிளகு, அகத்தி போன்ற செடிகளை வீட்டில் வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது

தெய்வீக சக்தியில் உயர்ந்த சக்தியை தரிசிப்பது எப்படி?

தெய்வீக சக்தியில் உயர்ந்த சக்தியை தரிசிப்பது எப்படி?



ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி




இந்திய அரசு அமைப்பின் படி வி.ஏ.ஓ.தான் ஆணிவேர்;அவருக்கு மேல் வருவாய் ஆய்வாளர் எனப்படும் ஆர்.ஐ.அவருக்கு மேல் மாவட்ட துணை ஆட்சியாளர்;அவருக்கும் மேல் மாவட்ட ஆட்சியாளர்;ஆளுநர்,ஜனாதிபதி;ஐநா சபை என மிகப்பெரிய நிர்வாக இயந்திரம் செயல்பட்டுவருகிறது.


அதே போல்,நம்மை இயக்குவது நவக்கிரகங்கள்.நாம் முற்பிறவி அல்லது முற்பிறவிகளில் செய்த பாவபுண்ணியங்களுக்கேற்ப நாம்பிறக்கும் நேரத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட ராசியில் நின்று நமது வாழ்க்கைப் பயணத்தை இயக்கும்.அனுபவமுள்ள ஜோதிடர்களுக்கு இது புரியும்.

இந்த நவக்கிரகங்களை இயக்குவது 27 நட்சத்திரங்கள்.(நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதே வேத ஜோதிடம்!)இந்த 27 நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்தி இயக்குபவை பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு.(நட்சத்திரங்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குவதே பஞ்சபட்சி சாஸ்திரம்)

இந்த பஞ்சபூதங்களை இயக்கும் மண்டல நிர்வாகிகளே மும்மூர்த்திகள் எனப்படும் பிரம்மா,விஷ்ணு,சிவன்.

பிரம்மா ஒரு உயிரைப் படைத்தால்,அந்த உயிருக்குத் தேவையான கல்வியைத் தரும்பொறுப்பு பிரம்மாவின் துணைவியான கலைவாணிக்குத் தரப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணு ஒரு உயிரைக் காத்தால்,அப்படிக் காக்கும்பொறுப்பு அவரது துணைவியான மகாலட்சுமிக்குத் தரப்பட்டுள்ளது.

சிவன் ஒரு உயிரை அழித்தால்,ஒருவரது பிறப்பு இறப்பை நிர்ணயிப்பவராக இருப்பதால்,அந்த உயிருக்கு முக்திஎனப்படும் இறவா நிலையைத் தருவது சிவனின் துணையாகிய பார்வதிக்குத் தரப்பட்டுள்ளது.

இந்த மூவருக்கும் மேலே சதாசிவம் இருக்கிறார்.அவரைப் பற்றி யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
சதாசிவத்திற்கும்மேலே இருப்பவள்,இந்த மும்மூர்த்திகளை இயக்குபவள் ஆதி பரப்பிம்ம சக்தி என்ற மனோன்மணி ஆவாள்.
அவளின் வடிவம் வாலை எனப்படும் 12 வயதுச்சிறுமியைப் போன்றது.அவளை நாம் ஒவ்வொருவரும் தரிசிக்கலாம்.

தினமும் ஒரு மணிநேரம் தனிமையில்,சப்தமில்லாத இடத்தில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்துகொண்டு,நமது காதுகளுக்குப் பஞ்சுவைத்து அடைத்துக்கொள்ள வேண்டும்.மனதுக்குள் இம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.எவ்வளவு உரத்து(ஆனால் மனதுக்குள்,வாய்விட்டுச் சொல்லாமல்)க்கூறுகிறோமோ,அவ்வளவு நல்லது.இப்படி இரண்டு ஆண்டுகள் ஜபித்துவந்தால்,மனோன்மணியைத் தரிசிக்கலாம்.

இன்னொரு வழிமுறை உண்டு.இங்கு அதை விரிவாக வார்த்தைகளால் விவரிக்க இயலாது.ஒரு குறிப்பிட்ட தியான முறையினால்,மூக்குக்கும் நுரையீரலுக்கும் இடையில் செய்யும் பிராணயாமத்தை,நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையில் மாற்றிட வேண்டும்.அப்படிச் செய்தவாறு,ஒரு வரி மந்திரம் உண்டு.அதை எந்த குருவும் வாயால் நமக்கு உபதேசிக்க மாட்டார்;மனதால் உபதேசிப்பார்;அதை ஒருமுறை சொன்னாலே மனோன்மணி நேரில் காட்சியளிப்பாள்.
காட்சியளித்து,நம்மை தன்னுடன் கைபிடித்து அழைத்துச் செல்லுவாள்;இந்த பிரபஞ்சத்தில் அவள் படைத்துள்ள அத்தனைப் படைப்புகளையும் நமக்குக் காட்டுவாள்;காட்டியப்பின்னர்,அவள் தன்னுடைய இருப்பிடத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுவாள்.அப்படிச் சென்றதும்,எதற்காக என்னைத் தேடினாய்? எனக் கேட்பாள்.நம்மால் அவளைப் பார்த்தப்பின்னர் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது

கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல :

கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல :



பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும். ஒவ்வொரு உருண்டைகள் நீரில் வீசும் போதும் " ஓம் ஹ்ரீம் நமஹ" என ஜெபிக்க வேண்டும். ஏரி, குலம், கிணறு, ஆறு இவைகளில் உள்ள மீன்களுக்கு மேற்கண்ட பரிகாரம் செய்தால் நலம். பிரச்சனைகள் விலகும் வரை வாரம் ஒரு முறை நம்பிக்கையுடன் செய்து வர பலன்கள் நிச்சயம். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை வேலையில் குளித்து முடித்ததும் சிறிது சர்க்கரை எடுத்து வீடு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மட்டும் எறும்புகள் உண்ண உணவாகும். இதை தினசரி செய்து வரலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் செய்தால் நலம். சிறு சிட்டிகை அளவு போதுமானது. இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்களும் சிறிது சிறிதாக விலகுவது கண் கூடாக தெரியும். மிக எளிய பரிகாரமாக தோன்றினாலும் மேற்கண்ட இரண்டும் மிக சக்தி வாய்ந்த பரிகாரங்கள் ஆகும்.

தொட்டாற்சிணுங்கி.....


தொட்டாற்சிணுங்கி.....

பழைய ஆனந்த விகடனில் படித்த ஒரு கதை....
அகலிகை கல்லாய் இருந்து ராமனின் காலடி பட்டு சாப விமோட்சனம் அடைந்தாள். 

அப்போது ராமன் கால் கட்டை விரலை பிடித்து இழுத்து ராமனை நிறுத்தியது ஒரு புல். கௌதமரை அழைக்க சொன்னது. ஏன் என்று ராமன் கேட்க... "மனைவி தவரு செய்தாள், சாபம் பெற்றாள். நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் இந்த கல்லாய் போன அகலிகையின் அடியில் மாட்டி இத்தனை வருடம் வளர்ச்சி இன்றி கிடக்கிறேன்? எனக்கு பதில் சொல்ல சொல்லு ராமா" என்றது புல்.
உடனே ராமன்... "அன்று என்ன நடந்தது என்று உனக்கு தெரியுமா? சொல்" என்றார். "இந்திரன் வந்து கோழி போல் கூவினான். விடிந்து விட்டது என்று கௌதமர் நீராட போனார். உடனே இந்திரன் கௌதமர் உருவில் மாறி, அகலிகையை அழைத்தான். அவளை அணைத்தான். அகலிகை புறியாது விழித்தாள். கௌதமன் சத்தம் கேட்டதும் இந்திரன் ஓடிவிட்டான். தொட்டது யார் என்று தெரியவில்லையா உனக்கு என்று கோவம் கொண்ட கௌதமன் அகலிகையை கல்லாய் போக சபித்தான்" என்று சொல்லி முடித்தது புல்.
ராமன் "என் விரலை பிடித்து இழுக்க முடிந்த உன்னால் அன்று கௌதமனை நீராட போகாமல் தடுக்க முடியவில்லையா?? தவறான எண்ணம் கொண்ட இந்திரனை வீழ்த்த முடியவில்லையா?? உன் கண் முன் குற்றம் நடந்தும் பார்த்து மவுனமாய் இருந்ததுக்கான தண்டனை தான் இக்கோலம். என்னை போக விடு" என்று அம்பால் நீக்கினார்.
புல் சுருங்கிற்று. அன்று முதல் இன்று வரை யார் தொட்டாலும் ராமனோ என்று எண்ணி வெட்கத்தால் குவியுமாம் தொட்டாற்சிணுங்கி.