நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 1 May 2017

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திரஅபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திரஅபிஷகம்,அலங்காரம் , ஆராதனை



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார்
ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 
 03-05-2017 சித்திரை (20) மாதம் புதன் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651


அத்ரி மலையின் தெய்வீக அனுபவங்கள்




நெல்லை மாவட்டம் அம்பசமுத்திரம்
ஆழ்வார்குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரிமலை அமைந்துள்ளது.

இங்கு அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம். அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.
மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.மேலும் கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது.
சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு. அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.



பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை

சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது
இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.

அத்ரி மகரிஷியின் கோவில்வருகிறவர்கள்
.வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை;












Thursday, 27 April 2017

அட்சயதிதி அன்று, சாதுக்களுக்கு அன்னதானம் செய்தால் ஞானச் செல்வம் கிடைக்கும்.


அட்சயதிதி அன்று, சாதுக்களுக்கு அன்னதானம் செய்தால் ஞானச் செல்வம் கிடைக்கும்.



ஒரு விறகுவெட்டி, மிகுந்த பக்திமான்,. ;காட்டிற்கு விறகு வெட்டச்செல்லும்போது ஒரு நொண்டி நரியைப் பார்க்கிறான். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் ஈசன் படியளப்பானாமே!, இந்த நொண்டி நரிக்கு எப்படி சாப்பாடுபோடுகிறான் எனப்பார்போம் .' என பக்கத்திலிருந்த மரத்தில் அமர்ந்துவிடுகிறான் .


சற்று நேரத்தில் வந்த புலி, சாப்பிட்ட மீதி இறைச்சியை நரி அருகில் விட்டுச்செல்கிறது. ;நரிக்கு உணவிட்ட ஈசன் தனக்கும் உணவிடுவானென வேலை செய்யாமல் இருக்கிறான் விறகுவெட்டி.. ;இரண்டு நாள் கழிந்து விட்டது. ; உணவு கிடைக்கவில்லை. இறை நம்பிக்கை குறைந்த நேரத்தில்


அங்கு வந்த ஞாநி சொன்ன பதில் என்ன தெரியுமா?

தம்பி நீ கற்றுக்கொண்ட பாடம் தவறு. நீ நரியிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டதற்குப் பதிலாக புலியிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கவேண்டும். இனியாவது முடியாதவர்களுக்கு உதவி செய் '



சரி இந்தக் கதைக்கும் அட்சயத்திதிக்கும் என்ன சம்பந்தம்.



ஆதி சங்கரர் பிச்சைக்கு வந்திருக்கிறார்.ஆனால் பிச்சையிட ஒன்றுமில்லை. அந்த வீட்டுத்தலைவி ரொம்பத் தவிக்கிறாள். தனது வறுமையை எண்ணி நொந்து கொள்கிறாள்.பரபரப்புடன் எதாவது கிடைக்குமா?........ தேடுகிறாள்.


கிடைத்தது ஒரு நெல்லிக்கனி, அவசரமாக கொண்டுவந்து அதீதிக்கு தானமிடுகிறாள்


சங்கரருக்கு அந்த அம்மையாரின் அவலம் புரிகிறது. மனஒருமையுடன்,கனகதார தோத்திரம் படிக்கிறார் .விளைவு பொன்மழை பொழிகிறது. அன்றைய தினம் அட்சயதிதி.


அட்சயதிதி என்பது , வாங்குவதற்கு உகந்த நாள் அல்ல நண்பர்களே!
கொடுப்பதற்கு உகந்த நாள். ;அட்சயதிதி அன்று, சாதுக்களுக்கு அன்னதானம் செய்தால் ஞானச் செல்வம் கிடைக்கும். குருவிடமிருந்து ஞானத்தைப்பெற்றுக்கொள்வதற்கு அட்சயத்திதி சிறந்தது.


பரசுராமன் பிறந்ததும், தனது மாணவர்களுக்கு யோக பாடங்களை ஆரம்பிப்பதும் அட்சய திதியில்தான்.

குசேலன் கண்ணனுக்கு அவல் கொடுத்து செல்வச் சிறப்புகளைப் பெற்றதும் இந்த நாளில்தான். இந்த நாளில் தானம் கேட்டால் இல்லை என சொல்லாது தருவான் என்பதால் கர்ணனிடம் கண்ணன் கவசக் குண்டலங்களைத் தானமாகக் கேட்டதும் இந்த அட்சயத்திதி நன்னாளில்தான்.


சயம் என்றால் குறை எனப்பொருள். அட்சயம் என்றால் குறைவில்லாத எனப்பொருள். அட்சயதிதி அன்று செய்யக்கூடிய தானங்களால் அள்ள அள்ளக்குறையாத அருட்செல்வத்தைப் பெறலாம்.கொஞ்சமாகத் தானம் செய்தாலும்,மேரு மலையைப் போல் புண்ணியம் சேரும் என்கிறார்கள் இத்தினத்தின் சிறப்பை உணர்ந்த யோகிகள்.

சித்திரைமாதம் அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில்வரும் இந்த அட்சயதிதி, மனமுவந்து நாம் செய்யும் தானதர்மங்களை மேலும்மேலும் வளர்க்கிறது.அரிசிபருப்பு பானகம் நீர்மோர் விசிறி செருப்பு பால் என இயன்றவைகளைவாங்கி சாதுக்களுக்கும், ஏழைகளுக்கும் அளிக்கலாம்.


அனைத்திலும் மிக உயர்ந்தபுண்ணியம், சாதுக்களுக்கு வயிறார உணவிடுவதுதான்!

Tuesday, 18 April 2017

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!





பொட்டு :

பொட்டு வைக்கும்
பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :

மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும்.
கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி :

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை
சரி செய்கிறது.

மோதிரம் :

பாலுறுப்புகளை தூண்டும்
புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..
ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு
அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள
சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :

கையின் புஜை பகுதியில்
இறுக்கமான அணிகலன்கள்
அல்லது
கயிறுகள் அணியும்
பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி
பதற்றம் , படபடப்பு, பயம்குறைகிறது .
மார்பக புற்று நோய் வருவது
தவிர்க்க படுவதாக ஆய்விலே
உறுதிபடுதப்பட்டிருக்கிறது

லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.
காரணம்
மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு
மேல்வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்
மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :

வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது.

முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.
இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும்
நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :

ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.
வயிற்று பகுதிகள் வலுவடையும்.

மூக்குத்தி :

மூக்கில் இருக்கும் சிலபுள்ளிகளுக்கும்
பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும்நெருக்கமான
தொடர்பு உண்டு.
அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது
அது சம்மந்தமான நோய்கள்
குணமாகும் .

மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :

கல்லீரல்,
மண்ணீரல்,
பித்தப்பை,
சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,
வயிறு போன்ற
மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன்
கொலுசு.

கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

படித்ததில் மிகவும் பிடித்தது.

Monday, 17 April 2017

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு குரு பூஜை அன்னதர்மம்

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி &
ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு குரு பூஜை அன்னதர்மம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில் அமைந்து உள்ள 
ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,
ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு 19-04-2017 சித்திரை(6) மாதம் புதன் கிழமை உத்திராட நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் குரு பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236

Wednesday, 12 April 2017

இதில் பதிவு செய்யப்படுகிற ஆன்மீகம் தகவல்கள்


இதில் பதிவு செய்யப்படுகிற ஆன்மீகம் தகவல்கள்
அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன் இதில் பதிவு செய்யப்படுகிற ஆன்மீகம் தகவல்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு தெரிந்து பயன்பட வேண்டும் அவர்களும் தங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பத்திலிருந்து விடுபட்டு ஆனந்தமாய் வாழ வேண்டும் என்று நல்ல என்னத்தில் தான். நான் பதிவு செய்கிறேன்
என்னுடைய பிளாக்கில் இருக்கிற அம்பாள்
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி இந்த கோயில் மானாமதுரை உள்ளது .
நான் இந்த அம்மாளின் பக்த்தன் அதனால் இந்த அம்மாள் படத்தை என்னுடைய பிளாக்கில் வைத்து உள்ளேன இந்த அம்மாள் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு .
ஆன்மிகம் என்பது கடவுளை அடையும் வழி அதை அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம் .
அன்புடன் உலகமக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

என்றும் அன்புடன்
N .செந்தில் குமார்
திருநெல்வெலி
தமிழ்நாடு
இந்திய

Monday, 10 April 2017

ஸ்ரீ காரைக்கால்அம்மையார் குருபூஜை சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

ஸ்ரீ காரைக்கால்அம்மையார் குருபூஜை சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்



அறுபத்து மூவர்களில் இறைவனல் அம்மையே
என அழைக்க பெற்றவர்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி காரைக்காலில்
அமைந்துள்ள ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு
12.04.2017 பங்குனி மாதம் (30) புதன் கிழமை
சுவாதி நட்சத்திரதன்று குரு பூஜை,அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் 
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 38268,98428 93762

Friday, 7 April 2017

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா? உடன் பகிருங்கள்

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா? உடன் பகிருங்கள்






இங்கு ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.


மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்டால் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். இப்படி மூட்டுக்களில் ஏற்படும் வலி ஆர்த்ரிடிஸ் அல்லது பலவீனமான எலும்பு அமைப்பிற்கு வழிவகுக்கும். மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும் வலியைப் போக்க முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அதற்கான இதர அறிகுறிகளையும் அறிவது தான்.

அதுவும் நடக்கும் போது மற்றும் நிற்கும் போது கடுமையான வலியை உணர்வது, மூட்டுக்கள் சிவந்து காணப்படுவது என்று இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். இதனால் ஒரே நாளில் மூட்டுக்களில் உள்ள வீக்கம் போய்விடும்.

வழி #1

தேவையான பொருட்கள்:

முட்டையின் மஞ்சள் கரு - 1

உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவுடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வீக்கம் உள்ள முழங்காலில் தடவி, ஒட்டும் காகிதத்தை ஒட்டி, எலாஸ்டிக் பேண்டேஜ் கொண்டு கவர் செய்ய வேண்டும். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் மூட்டுகளில் உள்ள பேஸ்ட்டை மாற்ற வேண்டும். இப்படி தினமும் 5 முறை செய்து வந்தால், மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும வலி குறைந்துவிடும்.

வழி #2

தேவையான பொருட்கள்:

கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, வீக்கம் மற்றும் வலி உள்ள மூட்டுக்களில் தடவி, சுடுநீரில் நனைத்த துணியை மேலே போர்த்த வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, வலி மற்றும் வீக்கம் குறையும்.

வழி #3

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் சீடர் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

வெதுவெதுப்பான நீர்- தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து, அந்நீரில் வீக்கமுள்ள மற்றும் வலியுள்ள மூட்டுக்களை 10 நிமிடம் ஊற வையுங்கள். இறுதியில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரு வேளை மசாஜ் செய்யுங்கள்.

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளால் வலியும் வீக்கமும் குறையாமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.