நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 24 December 2016

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பு அபிஷகம், ஆராதனை, அன்னதானம்


சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பு அபிஷகம், ஆராதனை, அன்னதானம்










அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 


நாகர் கோவில் அருகே சுசீந்திரம் அமைந்துள்ள தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வரும் (29-12-2016)மார்கழி மாதம் 14ம் தேதி வியாழகிழமை தினத்தன்று சிறப்பு அபிஷகம், ஆராதனை, அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236

Friday, 23 December 2016

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரம்அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரம்அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


திருநெல்வேலி மாவட்டம்கூடங்குளம்
அணுமின் நிலையம் அருகில் விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
26.12.2016 திங்கள் கிழமை அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : 8754016236
9843016651
9842078733

இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.

.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.
அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படிஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும்.


இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..

விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி விஸ்வாமித்திரமகரிஷி கோவில்

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி
விஸ்வாமித்திரமகரிஷி கோவில்














விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.
இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழி நடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும்.


இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார்.

இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும்
முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். 
இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம்

. இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மாதம்தோறும் அனுஷம் நக்ஷத்திரத்தில் அபிஷேகம் புஸ்பாஞ்சலி அன்னதானம் நடைபெறும்
. தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:
இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்
போன்ற பிரச்சனைகள்நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன்

விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!


ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது



திருநெல்வேலி மாவட்டம்கூடங்குளம்
அணுமின் நிலையம் அருகில் விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
26.12.2016 திங்கள் கிழமை அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
 cell : 8754016236
9843016651
9842078733

தீபம் உங்களுடன் பேசும்


தீபம் உங்களுடன் பேசும்


ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்...

இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்

கர்ப்பப்பை கோளாறு நீங்க பரிகாரம்


கர்ப்பப்பை கோளாறு நீங்க பரிகாரம்

பெண்களுக்கு வரும் பல பிரச்சினைகளில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகள் மிக முக்கியமானது. அந்த கோளாறை தீர்க்க உதவும் தக்க பரிகாரம் வருமாறு:-

புதுப்பானை வாங்கி அதில் அரிசி, காய்கறிகள் பல சரக்குச் சாமான்கள் ஆகியவற்றைப்போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமையன்று ஏழைகள் சிலரை அழைத்து வந்து தக்க மரியாதை செய்து பின்னர் புதுப்பானையை அதில் போடப்பட்ட பொருட்களுடன் அவர்களுக்குத் தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்

நெமிலி பாலா திரிபுரசுந்தரி!



நெமிலி பாலா திரிபுரசுந்தரி!







சுண்டு விரல் அளவு அம்மன், குசஸ்தலை ஆற்றில் தோன்றியவள், அடியாரின் வீட்டையே ஆலயமாக்கிக் கொண்ட அன்னை, என பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குபவள், வேலூர் மாவட்டம் நெமிலியில் எழுந்தருளியுள்ள பாலா திரிபுரசுந்தரி!

உலகைக் காக்கும் மாதாவின் செல்ல மகளே பாலா. ஒன்பது வயதான இவள் ஆற்றலில் அன்னைக்கு நிகரானவர். அன்னை வித்யா என்றால், இவள் வித்யாபாலா. ஸ்ரீலலிதோ பாக்யானம் என்ற புராணத்தில் இவளைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

அன்னை லலிதா தேவியோடு போரிட்டு வெல்ல முடியாத பண்டாசுரன், தனது முப்பது மைந்தர்களை போருக்கு அனுப்பினான். லலிதாவின் மகளான பாலா தன் அன்னை லலிதாவிடம் கலசங்களையும், ஆயுதங்களையும் பெற்று ரதம் ஏறி போருக்கு புறப்பட்டாள். போரில் பண்டாசுரன் மகன்களுடன் போரிட்டு அனைவரையும் அழித்தாள். இதன்பின் பாலா, அன்னை லலிதாவோடு ஐக்கியமானாள் என்கிறது புராணம்.

அதன்பின் இந்தக் கலியுகத்தில் மீண்டும் கண்கண்ட தெய்வமாகத் தோன்றினாள் பாலா.

வேலூர் மாவட்டத்தில் உள்ள நெமிலியில், அம்மன் உபாசகரான சுப்பிரமணியர் என்பவர் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் அவரது கனவில் தோன்றிய அன்னை பாலா, ‘உன்னோடு வாழும் அன்னை ராஜராஜேஸ்வரியின் கட்டளைக்கு இணங்க, ஆற்றில் மிதந்து குழந்தை பாலாவாக உன் ஊருக்கு வருகிறேன். என்னை உன் வீட்டில் வைத்து வழிபாடு செய்!’ என்றாள்.

கனவு கலைந்ததும் அந்த நடு இரவிலேயே கண் விழித்த சுப்பிரமணியர், உடனடியாக தன் வீட்டில் அருகில் ஓடும் குசஸ்தல ஆற்றிற்குச் சென்றார். அப்போது எதுவும் கிடைக்கவில்லை. மனம் தளர்ந்து போகாத நிலையில் மூன்றாம் நாளன்று அவர் ஆற்றில் மூழ்கி எழும்போது, அவரது கரங்களில் தவழ்ந்தாள் அன்னை பாலா.

ஒரு சுண்டு விரல் அளவே அன்னையின் உருவம் என்பது தனிச் சிறப்பு.

அன்னையின் ஆணைப்படி தன் வீட்டிலேயே வைத்து வழிபாடலானார். இந்த வீடே பிற்காலத்தில் பாலாபீடமாக உருமாறி, வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து வந்து அருள்பெற்றுச் செல்லும் ஆலயமாக மாற்றம் கண்டுள்ளது. அன்னை, பாலா திரிபுரசுந்தரி என்று அழைக்கப்படுகிறாள். அன்னை பாலாவிற்கு இசை மீது அளவற்ற பிரியம். கருவூர் சித்தர் இந்த அன்னையைப் பற்றி பாடல் பாடியுள்ளார்.

பாலா திரிபுரசுந்தரி

ஒரு கையில் ஜெப மாலை, மற்றொரு கையில் புத்தகம் கொண்டு காட்சி தருவது பாலா திரிபுரசுந்தரியின் தோற்றம் ஆகும். உலகத்து தெய்வ உருவங்களில் சிறிய உருவம் கொண்டு விளங்குவது நெமிலி பாலா மட்டும்தான். சுண்டு விரல் அளவில் ஒளி வீசும் அமைப்பில் அன்னையானவள் காட்சி தருகின்றாள்.

சித்தர்களும், ஞானிகளும் போற்றும் தெய்வம் இவள். தெய்வங்களே சீராட்டும் குழந்தை இவள். அளவற்ற சக்தியை பெற்ற மையப்புள்ளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னையானவள் கோவிலில் குடிகொள்ளாமல், அடியாரின் வீட்டை தேர்வு செய்து குடி கொண்டு அருளாட்சி செய்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்னை பாலா திரிபுரசுந்தரி வீற்றிருக்கும் இடம் பாலாபீடம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

காலை 9 மணிக்கு ஆலயம் திறந்திருக்கும். அப்போது பாலா திரிபுரசுந்தரியைத் தரிசிக்க முடியும்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா சத்திரம் தெருவில் அமைந்துள்ளது நெமிலி பாலா பீடம். இது அரக்கோணத்திற்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும், சோளிங்கருக்குக் கிழக்கே 26 கிலோமீட்டர் தூரத்திலும், காஞ்சீபுரத்திற்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவிலும், காவேரிப்பாக்கத்திற்கு கிழக்கே 20 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையிலிருந்து மேற்கே 85 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மாதத்தின் முதல் ஞாயிறு, புத்தாண்டு, நவராத்திரி இன்னிசை விழா, தை, ஆடி வெள்ளிகள், ஐப்பசி பூரத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

நிம்மதி காணவும், நினைத்த வரம் பெறவும் விரும்புவோர் நெமிலி பாலாவை தரிசிக்கலாம்பாலா பீடத்தினர் ஆன்மிக யாத்திரையை மேற் கொள்வதால், பாலாவை தரிசிக்க விரும்புவோர் 04177-247216 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசி விட்டுச் செல்லலாம்

Thursday, 22 December 2016

சித்தர்கள். மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை

சித்தர்கள். மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை







அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.

கடுக்காய் வகைகள் :

பிஞ்சு கடுக்காய்,
கருங்கடுக்காய்,
செங்கடுக்காய்,
வரிக்கடுக்காய்,
பால்கடுக்காய்
என, பல வகைகள் உண்டு. கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும்.

இவை தவிர,
காபூல் கடுக்காய்,
சூரத் கடுக்காய்
எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.

# பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.

# கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.

# செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.

# வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.

# பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்

என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.

கடுக்காயை
விஜயன்,
அரோகினி,
பிருதிவி,
அமிர்தமரிதகி,
த்ருவிருத்தி
என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு் வகைப்படுத்தியுள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.

உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து.

மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.

“கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு”
என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

பசியின்மையைப் போக்கும் கடுக்காய் :

பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.

ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள். துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம். அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.

சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய் :
கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.

திரிபலா பெருமைகள் :

திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது. நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

புண்களைக் கழுவ இந்தத் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ் நாள புண், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலாசூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

எமன் அருகில் வராமல் இருக்க, காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவ உலகம்.