நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 9 November 2016

பாலா திரிபுர சுந்தரி - வாலைக் குமரி

பாலா திரிபுர சுந்தரி - வாலைக் குமரி


பாலை என்னும் பாலா திரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டில் முதற்படி என்பர்.
ஸ்ரீ வித்யையில் "பாலா" மந்திரத்துடன் பெரும்பாலோர் நின்றுவிடுவது வழக்கம். இதனால் தானோ என்னவோ இம்மந்திரத்திற்கு "லகு ஸ்ரீ வித்யா" என்றே பெயர் இருக்கிறது. அன்னையை இந்த ரூபத்தில் ஆராதிக்க என்றே தனியாக கட்கமலா மற்றும் ஆவரண பூஜைகள் எல்லாம் இருக்கிறது. குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்ரங்களில் அம்பிகையை பாலையாக பூஜிக்கச் சொல்லப்பட்டிருக்கிறது.


அம்பிகையின் 9 வயது ரூபமே பாலா திரிபுர சுந்தரி என்பர். ஆனால் லலிதோபாக்யானத்தில் பாலா என்னும் சக்தி அன்னையின் ப்ரியத்தை பரிபூரணமாகப் பெற்ற தனி சக்தியாகவே கூறுவர். பாலாம்பிகையின் அனுக்ரஹம் கிடைத்தால், பராம்பிகை அனுக்ரஹம் சுலபமாகுமாம்.


ஒரு முறை குபேரன் அம்பிகையை பூஜிக்கையில், 'நித்ய யெளவனா' என்ற நாமாவைச் சொன்னபோது அன்னையைக் கூர்ந்து நோக்கினானாம். அதாவது, தன்னை மறந்து, தான் செய்யும் பூஜையை மறந்து அன்னையின் பிம்பத்தினை தன் கண்களிலிருந்து மறைத்து அகக்கண்களில் அன்னையை கன்னியாக, குமரியாகக் காண தலைப்படுகிறான். உபமானங்களூக்கு அப்பாற்பட்ட அவளை மனக்கண் முன் கொண்டுவர இயலவில்லையாம். அப்போது ஈசன் அவன் முன் தோன்றி, பாலாவாக அன்னையைப் பார்க்க வேண்டுமானால் உஷத்காலத்தில் த்ரிஸாகர சங்கமத்தில், பாரதத்தின் தென் மூலையில் காணலாம் என்றாராம். அதே கன்யாகுமாரி கோவில் கொண்ட இடம் என்று கூறிக் கேட்டிருக்கிறேன். லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள "தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா" என்னும் நாமம் இந்த குமரியம்மனுக்கே உரியதோ என்று தோன்றுகிறது. இந்த நாமத்தின் பொருள், நக்ஷத்திரத்தை விட அதிக ஒளிதரும் மூக்குத்தியை அணிந்தவள் என்பது. இந்த மூக்குத்தியே ஒரு சமயத்தில் கலங்கரை விளக்காக தடுமாறிய மாலுமிக்கு வழிகாட்டியது என்பர். இங்கே அம்பிகையை பிரதிஷ்ட்டை செய்தவர் பரசுராமர் என்று கூறப்படுகிறது. பாலாவிற்கு இன்னும் சில கோவில்களில் தனி சன்னதி உண்டு, அவை திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருக்கடையூர், சென்னை கொத்தவால் சாவடி கன்னிகா பரமேஸ்வரி போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகிறது.


சித்தர்கள் சிலரும் இந்த அன்னையை பலவாறாகப் பாடியுள்ளனர். திருமூலர் தனது திருமந்திரத்தில்,


சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை (1199)
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்


ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை (1073)
நீங்காத பச்சை நிறம் உடையவள்
ஆங்காரியாகிய ஐவரை பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனித்திருந்தானே

என்பதாக கூறியிருக்கிறார். கருவூரார் கூறுகையில்,

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அதுதான் பாரு


என்று அன்னையை வாலைப் பெண்ணாக வைத்து அவளது மாயை போன்ற கூறுகளைப் பற்றிக் கூறுகிறார். இவர் போன்றே கொங்கண சித்தர் பாடியது வாலைக்கும்மி என்னும் பாடல் தொகுப்பு. அதிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.



முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை
அமர்ந் திருக்கிறாள் வாலைப் பெண்ணே (54)

காலனை காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த
மானுடன் கோட்டை பிடித்தவளாம் (57)


இடுகையின் ஆரம்பத்தில் சொல்லியது போல, ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் பொருளாவது; சிவந்த நிறமுடைய கிரணங்களின் கூட்டங்களால் நிரம்பிய எல்லாத் திக்குகளையும் உடையவளும், இரு கைகளிலே ஜபத்திற்கான மாலையையும், புத்தகத்தையும் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய-வரத முத்திரைகளுடனும், செந்தாமரையில் அமர்ந்து நிரந்தரமான ஸுகத்தை தருபவள் என் ஹ்ருதயத்தில் வசிக்கட்டும்.




அன்னையின் மேல் வலது கையில் ஜப மாலையும், மேல் இடது கையில் புஸ்தகத்தையும், கீழ் இடது-வலது முறையே அபய, வரத முத்திரைகளும் கொண்டதாக பாவிக்க வேண்டும். குழந்தைகள் இந்த அன்னையை வணங்கச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது கல்வி செழிப்புறும் என்பர்.

Monday, 7 November 2016

பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்

பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்



ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மாளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது.
வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடலாம்.
வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.

Saturday, 5 November 2016

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி


கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்






கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி


கருப்பங் கலைந்தால் கனிமா துளம்தோல்
பெருமரப் பட்டைய சோகு .-------------------குறள்

விளக்கம் :-
தாய் கருவுற்ரும் ,பின்னர் கலைந்துவிட்டால் ,அதற்கு மாதுளம் பழ தோல் உடன் அசொகமரப் பட்டையும் சம அளவு எடுத்து கொதி நீரிட்டுப் பதமுடன் 45 நாள் காலையில்அருந்தி வர உடல் நலம் தேறி ,நலம் பெற்று மீண்டும் கரு உண்டாகி நிலைத்துப் பிறக்கும்

Tuesday, 1 November 2016

கணவன் மனைவி ஒற்றுமைக்கு...

கணவன் மனைவி ஒற்றுமைக்கு...





கணவன் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அதைப்போல ஆனந்தம் வேறில்லை. அதே நேரம் வெறுப்பு வளர்ந்து விட்டால் நிலைமை தலைகீழாகிவிடும். சில நேரங்களில் விவாகரத்து வரை போய் விடுகிறது. இந்த நேரத்தில், மற்றவர்களின் யோசனையைக் கேட்டு மனதைக் குழப்புவதை தவிர்க்க வேண்டும். கணவன், மனைவி விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே. ""பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை'' என்று அமைதியாக இறைவனை சரணடைவது ஒன்று தான் இதற்கு எளிய வழி. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை சிவபெருமானே நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆண்பாதி பெண்பாதியாக இருக்கும் "அர்த்தநாரீஸ்வரர்' கோலத்தில் இருக்கும் இறைவனை வழிபடுங்கள்.

 பவுர்ணமி நாளில் விரதமிருந்து மாலையில் அர்த்தநாரீஸ்வரருக்கு பால்நிவேதனம் செய்து பருகி வாருங்கள். அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி இல்லாத ஊர்களில், சிவாலயத்துக்கு சென்று,
""மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' என்ற தேவாரப்பாடலை மூன்று முறை சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்தம் மலரும்

Monday, 31 October 2016

வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட இரு பரிகாரங்கள்

வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட இரு பரிகாரங்கள்



சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப் பரிகாரங்கள்

வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட இரு பரிகாரங்கள் தரபட்டுள்ளன. முழு நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம்.

(1) இது செவ்வாய் அல்லது வெள்ளி அன்று செய்ய வேண்டியது. சிறிது வெள்ளம் மற்றும் வருத்த (அல்லது) வேக வைத்த கொண்டை கடலை இரண்டையும் நமது இஷ்ட தெய்வம் எதுவோ அவருக்கு நிவேதனம் செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.

(2) இது வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் செய்ய வேண்டியது. 7 லட்டு அல்லது மஞ்சள் நிற இனிப்பு பண்டத்தை வாங்கி வீட்டில் உள்ள யாரேனும் வியாபாரம் / தொழில் செய்யும் நபரை கிழக்கு பார்த்து நிற்க வைத்து 7 (ஏழு) முறை உடம்பு மற்றும் தலையை சுற்றி தனியாக வைத்து விட வேண்டும். பின்பு அடுத்த நாள் சுற்றி போட்ட நபர் சூரிய உதயத்திற்கு முன் அந்த லட்டுகளை ஏதேனும் வெள்ளை நிற பசுவிற்கு அளித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விட வேண்டும் என்கிறது பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழதப்பட்ட சிவப்பு புத்தகம் எனும் லால் கிதாப்.

பெரிய செலவில்லாத பரிகாரமானதால் நம்பிக்கையுடன் செய்து பார்ப்பதில் தவறென்ன ?

கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை

கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை








பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி
கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சி
பூர்வமானது. ஒருசமயம் அவர் கடும் வயிற்று
வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ
சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று
வலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்
போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து
கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா
ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய
சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த
திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம்
மாறினார்.

திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை
எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர்,
முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம்
இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர்
கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு,
கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில்
அமர்ந்தார்.

அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள்
புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும்
திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள்
மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து
ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…

என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான
சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்.
அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின்
பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி,
சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.

6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள்
இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த
வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை
முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல்
புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த
பரவசம் ஆனார்.

அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி
தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள்
யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு
தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும்
கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள்
கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த
சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார்.
அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும்
இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட
வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம்.
இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம்
போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது
குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி.
இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில்தொடங்கி,

ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை
நிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப்
பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை
வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப்
பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்
பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின்

ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம்,
சத்ரு போன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும்
வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.
அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர்
திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5
அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய
சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும்
பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி
கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால்
நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப்
பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,
நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள்,
குழந்தை பாக்கியம் கிட்டும்…. இப்படி பல பலன்கள்
கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்
பட்டுள்ளது.

கந்தசஷ்டி கவசத்தின் வயது 362!


கந்தசஷ்டி கவசத்தின் வயது 362!





சென்னிமலை முருகன் கோயிலில் அரங்கேற்றப்பட்ட கந்தசஷ்டி கவசம், இன்று பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்கு உரிய பாராயண நூலாகத் திகழ்கிறது. இதைப் பாடியவர் பாலதேவராயசுவாமிகள். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நூல். இதைப் பாடுவோரை கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டதால் ‘கந்த சஷ்டி கவசம்’ எனப் பெயர் பெற்றது. கி.பி., 1654ல்பிறந்த இந்நூலின் இன்றைய வயது 362. ‘துதிப்போர்க்கு வல்வினை போம்’ என்று துவங்கும் இந்த பாராயணம், பக்தர்களின் நோய், பயம் தீர்க்கும் மாமந்திர நூலாகும். இக்கவசத்தை மனப்பாடமாக நெஞ்சில் பதிய வைப்போருக்கு செல்வம் பெருகும்.