நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 23 June 2016

பெண்கள் கருவுற :


பெண்கள் கருவுற :




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
பெண்கள் கருவுற :

நீண்ட நாள்களாக கருவுறாமல் இருந்தவர்கள் மட்டும்
கடலை வேர் தோடை குறிஞ்சான் எருக்கு
விடல் பிரண்டை பெண்மலடின் மாற்று ----குறள்


விளக்கம்
நீண்ட நாள்களாக கருவுறாமல் இருந்தவர்கள்மட்டும் இதை குருவின் அருள் துணை கொண்டு உபயோகிக்கவும் .
கடலை செடியின் வேர் ,ஆடாதோடை வேர் ,சிறுகுறிஞ்சான் வேர் ,எருக்கு வேர் . பிரண்டை இவை சேர்த்து அரைத்து நெல்லி காய் அளவு எடுத்து நீராடிய பிறகு மூன்று நாளும் உண்டு வர பெண் மலடாக இருந்தாலும் அது நிவர்த்தியாகும்


Sunday, 19 June 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி அபிசேகம்




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு 23-06-2016 ஆனி (09)மாத வியாழாக்கிழமை சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி திருவருள் மற்றும் ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு உத்திராட நட்சத்திர அன்னதானம்


ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி &
ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு

22-06-2016 ஆனி (8)மாத புதன் கிழமை உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்

அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236

Saturday, 18 June 2016

நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா 512ம் ஆண் டு தேரோட்டம்

நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா 512ம் ஆண் டு தேரோட்டம் 



 Image result for நெல்லையப்பர் கோவில்



நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா 512ம் ஆண் டு தேரோட்டம் நாளை 19.06.2016 (ஞாயிற்றுக் கிழமை)  நடக்கிறது. இதையொட்டி நெல்லை நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.




தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது. 

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், சப்பர வீதி உலாக்களும், கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

8-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடராஜ பெருமான் வெள்ளை சாத்தியும், பின்னர் பச்சை சாத்தியும் உலா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா நடக்கிறது.

இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பருவத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா சென்று தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 
இரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது

நெல்லையப்பர் சுவாமி தேர், தமிழ்நாட்டிலேயே 3-வது பெரிய தேர் ஆகும். இந்த தேர் 28 அடி நீளமும், 28 அடி அகலமும், 450 டன் எடையும் கொண்டதாகும். கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கென 5 தேர்கள் உள்ளன.

ஆனிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 19.06.2106(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள்கிறார்கள். காலை 8.06 மணிக்கு முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள். தேரோட்டத்தையொட்டி 5 தேர்களும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. முதலில் விநாயகர் தேர், 2-வதாக சுப்பிரமணியர் தேர், 
3-வது சுவாமி நெல்லையப்பர் தேர், அதன் பின்பு காந்திமதி அம்பாள் தேர் இழுக்கப்படும். இந்த தேர்களுக்கு பின்னால் சண்டிகேசுவரர் தேர் ஓடும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் கண்ணதாசன், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

Thursday, 16 June 2016

உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி



உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி



கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்திரமில்லாத நிலை, எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை,தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல், திடீர் நோய்,திடீர் அவமானம்,மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது.வெள்ளி கிழமை (17.06.2016)அன்று கோயில்களில் வளர்க்கப்படும் பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைபழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.

"ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிக்ஷேசினி பாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே!'' ""

எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன்'' என்பது இதன் பொருள். இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்

எளிதில் கருத்தரிக்க

எளிதில் கருத்தரிக்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்



எளிதில் கருத்தரிக்க

அரசங் கொழுந்தோடே ஆன் பாலுங் கூட்டித் ,
தரின்கரு தங்கும் தகைத்து .............குறள்



விளக்கம் :

குழந்தை வேண்டிய தாய் அரசமரக் கொழுந்து இலையை மை போல் அரைத்துப் பசும் பாலில் கலந்து அருந்திவர கருஜெனிக்கும் .




Wednesday, 15 June 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி திருவிளக்குபூஜை

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி திருவிளக்குபூஜை




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஆனி மாதம் (4) ஞாயிற்றுகிழமை 19.06.2016 காலை 10.00 மணிக்கு மேல்  பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை

மற்றும் மாலை 6.00மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236