நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 31 October 2015

மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை


மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும். 
காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.

விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது.

நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்குதேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்குதேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை










அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து
உள்ள 
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு 03-11-2015 தேதி ஐப்பசி (17) மாதம் திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமி,அபிஷேகம்,
அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும்  
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

Friday, 30 October 2015

குல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள குல தெய்வம் இன்னதென அறியாதவர் செய்ய வேண்டியது என்னவெனில் தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் பிரம்ம முகூர்த்த வேளையில் சுத்தமான பசு நெய் விட்டு ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கயே உங்கள் குல தெய்வமாக பாவிக்க வேண்டும். அந்த விளக்கிடமே என் குல தெய்வத்தை அறிந்து கொள்ள உதவுமாறு பிரார்த்தனை வைக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் செய்து வர உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருந்தாலும் சரி, சரியாக தொண்ணூறு நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய உண்மையான தகவல் உங்களை வந்து சேரும்

குல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள் 

குல தெய்வம் இன்னதென அறியாதவர் செய்ய வேண்டியது என்னவெனில் தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் பிரம்ம முகூர்த்த வேளையில் சுத்தமான பசு நெய்விட்டு ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
அந்த விளக்கயே உங்கள் குல தெய்வமாக பாவிக்க வேண்டும். அந்த விளக்கிடமே என் குல தெய்வத்தை அறிந்து கொள்ள உதவுமாறு பிரார்த்தனை வைக்க வேண்டும்.
இப்படியே தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் செய்து வர உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருந்தாலும் சரி, சரியாக தொண்ணூறு நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய உண்மையான தகவல் உங்களை வந்து சேரும்

உங்கள் தலையெழுத்தை மாற்றி அருளும் பிரம்மா


உங்கள் தலையெழுத்தை மாற்றி அருளும் பிரம்மா




'ஹூம்... எல்லாம் என் தலையெழுத்து. பிரம்மா எழுதின தலையெழுத்தை யாரால மாத்த முடியும்?’ என்று அலுத்துக் கொள்கிற சராசரி மனிதர்கள்தானே நாம்! கவலைப்படாதீர்கள். நாம் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு, நம் தலையெழுத்தை மாற்றி அருளத் தயாராக இருக்கிறார் பிரம்மா.
இந்த அற்புதத் தலத்தை அறிவதற்கு முன்பு சிறியதொரு கதை!
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா!’ என்பது சத்தியமான வார்த்தை! நம் தீவினை நமக்குள்ளேயேதான் உள்ளது. அது... கர்வம்! 'நான்’ என்பதை அழிக்க, முனிவர்களும் ஞானிகளும் தெளிவுற வலியுறுத்தியுள்ளனர். கர்வத்தால் துயரத்தைச் சந்தித்த இன்னொருவரும், 'கர்வம் கூடாது; தலைக்கனம் வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளார்; கர்வத்தால் தன் தலையையே இழந்த அவர்- பிரம்மா! தலையை இழந்தார்; பதவியை இழந்தார்; பணியை இழந்தார்; வெறுமனே இருந்தார்.
'சிவபெருமானுக்கு நிகரானவன் நான்; அவருக்கும் தலைகள் ஐந்து; எனக்கும் ஐந்து தலைகள்’ என்று ஆணவம் கொண்டிருக்க... பிரம்மாவின் தலையில் ஒன்றைக் கொய்தார் சிவபெருமான். இழந்த ஆற்றலைப் பெறுவதற்காக சிவனாரையே பூஜித்து, வரம் பெற்றார்! பிரம்மா வணங்கியதால் சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது! ஆனால், வரம் கொடுத்த சிவனார், கூடவே நிபந்தனை ஒன்றும் விதித்தார்.

நிபந்தனையா? அதென்ன...?
'இழந்த ஆற்றலையும் தேஜஸையும் வழங்குங்கள் ஸ்வாமி’ என சிவனாரை நோக்கி கடும் தவம் இருந்த பிரம்மாவின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், 'நீ இழந்தவற்றை திரும்பப் பெற வேண்டுமெனில், 'கர்ம விதியால் அவதியுறும் பக்தர்கள், இந்தத் தலத்துக்கு வரும் வேளையில், 'விதி இருப்பின் விதி கூட்டி அருள்க!’ என்றார். அதாவது முன்பு எழுதிய விதியைத் திருத்தி, செம்மையாகவும் சிறப்பாகவும் விதியை மாற்றி எழுதச் சொன்னார் சிவபெருமான்! பிரம்மாவும் ஏற்றார்; வரம் பெற்றார்; இழந்த ஆற்றலைப் பெற்றார். பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா!
திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். இந்த ஊரில், பிரமாண்ட ஆலயத்தில், பிரம்மா தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.
இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... பிரம்ம புரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயு மானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணா சலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திர நாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திரு மேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். எனவே இங்கே வந்து தரிசித்தால், 12 தலங்களை தரிசித்த புண்ணியம் கிட்டுமாம்!
தலத்தின் நாயகி- கருணைக் கடலான ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி! சிவபெருமானுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளிய தால், பிரம்ம சம்பத் கௌரி எனும் திருநாமம் இவளுக்கு! பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், சிவனாரின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப் பாதங்களிலும் விழுமாம்!
குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மகேஸ்வர: குருசாட்சாத் பர பிரம்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்பதற்கு ஏற்ப, ஆலயத்துள்... சிவ சந்நிதியின் கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி, அடுத்து அருகில் தனிச்சந்நிதியில் ஸ்ரீபிரம்மா, கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணு, அடுத்து மூலவரான ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என காட்சி தருவது விசேஷம் என்கின்றனர் பக்தர்கள்.
ஆரம்பத்தில், திருப்படையூர் என அழைக்கப்பட்டதாம்! முருகப்பெருமான், அசுரர்களை அழிப்பதற்காக இங்கே... சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பிறகு படை திரட்டிச் சென்றாராம். இதனால் இந்த ஊர் திருப்படையூர் எனப்பட்டு திருப்பட்டூர் என்றானதாகச் சொல்கிறது தல வரலாறு! இங்குள்ள ஸ்ரீகந்தபுரீஸ்வரரை வணங்கினால், சகல நலனும் பெறலாம்.
இன்னொரு விஷயம்... பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான... அதாவது முக்தி அடைந்த தலங்களாக, ராமேஸ்வரம் முதலான பத்து தலங்களைச் சொல்வர். இவற்றுள், திருப்பட்டூர் தலமும் ஒன்று! இங்கு, சிவபெருமானுடன் பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான இடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். சித்தர் பாடலில் 'பதஞ்சலி பிடவூர்’ என இந்தத் தலம் சிறப்பிக்கப்படுகிறது. இப்போது இந்தப் பகுதியையே தியான மண்டபமாக அமைத்துள்ளனர். யோக நிலையை அடைய விரும்புபவர்கள், மனதில் அமைதி இன்றி தவிப்பவர்கள், இங்கே வந்து பதஞ்சலி
மகரிஷி சமாதிக்கு எதிரே அமர்ந்து தியானம் செய்து வழிபட்டால், நன்மை உண்டு என்கின்றனர் பக்தர்கள்! வைகாசி சதய நாளில், குரு பூஜை விசேஷம். தவிர, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணற்ற பக்தர்கள், மகரிஷியை வணங்குகின்றனர்.
இதோ... ஆங்கிலப் புத்தாண்டு நெருங்கி விட்டது; 2010-ஆம் வருடத்தை வரவேற்கவும் உறவுகளுக்கும் தோழமைகளுக்கும் வாழ்த்துகளைப் பரிமாறவும் தயாராகி விட்டோம். இந்த வேளையில்... நம் புத்தியில் அகந்தை அகன்று, புதுவாழ்க்கை மலர, பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து, பிரம்மாவை தலை வணங்கி வேண்டுங்கள்; நம் தலையெழுத்தை திருத்தி அருளுவார், பிரம்மா!


மஞ்சள் காப்பு... புளியோதரை!
வாழ்வில் துன்பம், கடன் தொல்லை, நிலையான வேலையின்மை, குழந்தை பாக்கியம் ஆகியன கிடைக்கப் பெறாதவர்கள், இங்கே வந்து பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபட, விரைவில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்; தொட்டில் சத்தம் கேட்கும்! வியாழக்கிழமை காலை 6 மணி; மற்ற நாளில் 8 மணிக்கு பிரம்மாவுக்கு அபிஷேகம் நடைபெறும்!
7ஆம் தேதி பிறந்தவரா?
ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம்! இந்த ஏழு நிலைகளைக் கடந்து, சுமார் 300 அடி தூரத்தில் மூலவரான பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதியில், பங்குனியில், சூரிய பகவான் தனது வெளிச்சக் கதிர்களால் சிவனாரை வழிபடுகிறார். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி, ஏழு நிலை கோபுரத்தைக் கடந்து, ஏழு நிமிடங்கள்... சிவனாரின் மீது சூரிய ஒளி படும். ஆகவே 7-ஆம் தேதி பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என்பர். அதுமட்டுமா? ஜாதகத்தில் 7-ஆம் இடத்தைப் பொறுத்தே ஒருவருக்கு நல்ல மனைவி மற்றும் நல்ல நண்பர்கள் அமைவார்கள். எனவே தோஷ நிவர்த்திக்காகவும் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிரம்மாவை வழிபடுகின்றனர்.
ஷென்ம நட்சத்திர நாளில் தரிசிப்பது விசேஷம்!
மாதந்தோறும் வருகிற... உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில், பிரம்மாவை தரிசித்தால், செல்வம் பெருகும்; ஐஸ்வரியம் கொழிக்கும்; இழந்ததைப் பெறுவீர்கள்!
எங்கே இருக்கிறது?
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் உண்டு; ஆனாலும் குறைவுதான்!
சமயபுரத்தில் இருந்து சிறுகனூர் வரை பேருந்து வசதி நிறையவே உண்டு. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.
கோயில் தொடர்புக்கு: 94438 17385 / 98949 26090

அமாவாசை குலதெய்வ வழிபாடு

அமாவாசை குலதெய்வ வழிபாடு






குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று
விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது
.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை

ஓம் ஸ்ரீ விராட் விஸ்வகர்மனே நம: விஸ்வகர்ம பெருமக்களுக்கு சமர்ப்பணம்.


ஓம் ஸ்ரீ விராட் விஸ்வகர்மனே நம: விஸ்வகர்ம பெருமக்களுக்கு சமர்ப்பணம்.







ஓம் ஸ்ரீ விராட் விஸ்வகர்மனே நம:
வரலாறு
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளவாறு:
தேவ சிற்பி என்று புகழப்படும் 
ஸ்ரீ விஸ்வகர்மாவே ஸநாதனமான ஸப்த ரிஷிகளுக்கும் முதன்மையானவர். பிரபாஸூக்கும், யோக சித்தைக்கும் மகனாய் அவதரித்தவர். யோக சித்தை மஹா பிரஹஸ்பதியின் சகோதரி. பிராஸ் அட்டம பஸூவின் எட்டாம் தலைமுறை ரிஷிகுமாரர்.
ரிக் வேதம் விஸ்வகர்மாவைப் புகழ்வதைக் கண்ணுறுங்கள்:
முழு உலகத்தையும் வடிவமைத்த தெய்வீக கைவினைஞன் விஸ்வகர்மா.
 (ரிக் வேதம் 10.81.03)
இவரே தெய்வங்களின் வசிப்பிடங்களையும், அவர்களது வாஹனங்களையும், பறக்கும் இரதங்களையும் வடிவமைத்தவர்.
நான்காவது துணை வேதமாகிய ஸ்தபத வேதத்தை வெளிப்படுத்தியவர்.
அறுபத்து நான்கு ஆய கலைகளுக்குத் தலைவரானவர்.
சொர்க்கம், நரகம் இவைகளோடு பதினான்கு உலகங்களையும் படைத்த ஆதி பிரம்மன்.
தெய்வங்களுக்கு ஆயுதங்களையும் செய்தளித்தருளியவர். குறிப்பாக இந்திரனுக்காக ததிச்சி என்ற முனிவரின் முதுகெலும்பிலிருந்து வஜ்ராயுதத்தையும், விஷ்ணுவிற்காக சாரங்கம் என்னும் வில்லையும், சிவபெருமானுக்காக பிங்களம் என்னும் வில்லையும் படைத்தளித்தவர்.
சிவ-பார்வதி திருமணத்தின் போது லங்கா பட்டிணத்தை ஸமுத்திரத்தின் மத்தியில் படைத்தவர்.
இராமபிரானுக்கு உதவுவதற்காக கடலினில் ஸேதுவை கட்டும் வல்லமையுள்ள நளன் என்னும் வானரத்தைப் படைத்தவர்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஆட்சிப்பீடமான துவாரகையையும், எமபுரத்தையும் சிருஷ்டித்தவர்.
இப்படி பலப்பல அற்புத நிகழ்வுகளை வேதப்பதிவுகளிலிருந்து கூறிக்கொண்டே போகலாம்.
வசிஸ்ட புராணம் (3.6.11)ல் கூறப்பட்டுள்ளவாறு,
ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவானவர், தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து பிரம்மாக்களை படைத்தார். பஞ்ச பிரம்மாக்கள் என்றும் பஞ்ச பிரம்ம ரிஷிகள் என்றும் அழைக்கப்பட்ட இவர்கள்:
1. சானக பிரம்ம ரிஷி, 2.ஸநாதன பிரம்ம ரிஷி, 3. அபுவநஸ பிரம்ம ரிஷி, 4. ப்ரத்னஸ பிரம்ம ரிஷி, 5. ஸூபர்ணஸ பிரம்ம ரிஷி
ரிக் வேதம் (10.81. மற்றும் 10.82) ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவின் சொரூபத்தை சித்தரிக்கிறது:
உலகத்தின் முழு முதல் தோற்றுவிக்கும் சக்தியாகவும், உலகத் தந்தையாகவும் விளங்குபவர் தனது அனைத்துப் புறங்களிலும் விழிகளையும், வதனங்களையும், புஜங்களையும், பாதங்களையும் உடையவர்.
மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற மஹா காவியங்கள் “கலைகளின் தேவன். ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை விளைவிப்பவர், கடவுளர்களின் சிற்பி, மிகவும் முதல்தரமான, மேம்பட்ட, தலைமையான தொழில் நிபுணர், அணிகலன்களில் புதுமைகளைப் புகுத்துபவர், முடிவும்-அழிவும் அற்ற நிலையான இறைவன்.” என்று விராட் ரூபத்தைப் புகழ்கின்றன.
நான்கு கரங்களையுடைத்தும், மணிமுடி தரி்த்தும், மணம் நிறைந்த மலர்களைச்சூடியும், பட்டாடை உடுத்தும், நவரத்ன சிம்மாஞஸத்தில் வீற்றும், தனது நான்கு கரங்களில் புனிதநீர்க் கமண்டலமும், ஒலைச்சுவடியும், பாசக் கயிறும், அளக்கும் கருவியும் தாங்கியவராய் வேத-புராண-சாஸ்த்ரங்களிலே வர்ணிக்கப்படுகிறார்-------+---------++++-+-----++-------—-----்
பாரம்பரியமும் பரம்பரையும்
இன்றைய ஆய்வறிஞர்கள் வேதம், ஸூக்தம், ஸாஸ்த்ரம் முதலிய நூல்களை நன்கு ஆய்ந்து, விஸ்வ கர்ம குலம் ப்ருகு குலம் என தெளிந்துள்ளனர். வாயு புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில், இந்த நெடிய பரம்பரை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன


த்ரிஷிரா விஸ்வரூபஸ்து த்வஸ்டு: புத்ராவ பவதாம்|
விஷ்வரூபானுஜஸ்சாபி விஸ்வகர்மா ப்ரஜாபதி:||
விஸ்வகர்ம மஹத்பூதம் விஷ்வகர்மானாம் மதங்கேஷூ ச ஸம்பூதா|
புத்ரா பஞ்ச ஜடாதரா:ஹஸ்ய கெளசல ஸம்பஔர்ணா பஞ்ச பிரண்மரதா ஸதா||
இவ்வழியிலான மரபுப்படம் தரப்பட்டுள்ளது:
தரன், துருவன், சோமன், அஹன், அனிலன், அனலன், ப்ரத்யுஸன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ஆவர். இவர்கள் பிரஜாபதியின் புத்திரர்கள் ஆவார்கள்.
பஞ்ச கர்ம குலங்களின் வம்சாவளி:
1) மனு :
விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரிபாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார்.
2) மயன் :
விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி.
3) த்வஷ்டா:
விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.
4) சில்பி : ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.
5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :
ஜைமினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி. இவரது வழித்தோன்றலான ஸூபர்ணரிஷி, விநதையின் மகனான கருடனுக்கு பொன்னொளியை வழங்கி, ஸ்ரீமந் மஹாவிஷ்ணுவின் வாஹனமாகும்படி அனுக்ரஹம் செய்தார். கருடன் அங்கிரஸ குலத்தில் உதித்த கன்வ முனிவரின் மகனாவார்.
ஆதாரம்: விஸ்வகர்மா விஜயபிரகாஷ், ஆசிரியர்: இந்திரதேவ்சர்மா
இந்துமதத்திற்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் கொள்ளப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் விஸ்வகர்மாவினைப் பற்றி ஏராளமான விஷயங்கள், சுலோகங்கள் காணப்படுகின்றன. இவற்றிலெல்லாம் விஸ்வகர்மா முழுமுதற் பிரம்மனாகவும், அனைத்துலகத்தையும் வடிவமைத்த சிறந்த கலைஞனாகவும், வித்தையின் (கல்வி) வடிவமாகவும், அனைத்துத் திறன்களிலும் நிபுணனாகவும், கலைகளின் தலைவனாகவும், எல்லா இடங்களிலும் நிறைந்தவராகவும், சிறந்த கலைஞர்களின் மனத்திலும், அவர்கள் உருவாக்கும் கலைப்பொருட்களில் வாஸம் செய்பவராகவும், யாரையும்-எவற்றையும் சாராது விளங்கும் தனிப்பெரும் பொருளாகவும், பூர்ணத்வமுடையவராகவும், ஸூர்ய ஒளி பொருந்தியவராகவும், ஸத்வ குணமுடைவராகவும் இன்னும் பலப்பல புகழொலிகளால் அலங்கரித்துப் போற்றப்படுகிறார். எப்போது ஆதியில் நீரும், நெருப்பும், காலநிலையும், அறிவும் (ஞானமும்), மணமும், உணர்வும், ப்ரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும் இல்லையோ, வெற்றிடம் மட்டுமே இருந்தபோது தானே தோன்றியவர் விஸ்வகர்மா என்றும் விஸ்வகர்மா தோன்றிய விதத்தை வேதம் விவரிக்கின்றது


கோத்திரங்கள்பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன. இன்று பலருக்கும் தங்களின் கோத்திரம் தெரியாது. தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
1) மனுவின் வழித்தோன்றல்கள் (இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்
2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்
3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்
4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்
5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்


வாஸ்த்து சாஸ்திரம் (கலை) தொடர்பான விதிமுறைகளையும், அக்கலையினது நுணுக்கங்களையும் சாக்ஷாத் சிவபெருமானே பராசர ரிஷிக்கு உபேதசம் செய்தருளினார். பராசரர் ப்ருஹத்ரதனுக்கும், ப்ருஹத்ரதன் தேவசில்பியான விஸ்வகர்மாவிற்கும் உபதேசம் செய்தனர். விஸ்வகர்ம பரப்ரஹ்மனே இன்றளவும் இக்கலையை காத்து, வளர்த்து வருவதாய் ஐதிஹம்.
ஆர்ஷபாரத கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்கள் விஸ்வகர்மாக்கள். இவர்களே முன்பு சிந்து நதி தீரத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பன் நகரங்களை நிர்மாணித்து, வாழ்ந்து சிந்துச் சமவெளி எனும் சீரிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். சிந்துச்சமவெளி நாகரிகமே பின்னாட்களில் மருவி இந்து என்னும் மதமாகியது.
வாயுபுராணத்தின் நான்காம் அத்யாயம், மத்ஸ்ய புராணத்தின் 252ஆம் அத்யாயம்.
மத்ஸ்ய புராணத்தின் 252ஆம் அத்யாயம், மஹாபாரதம் அனுசாஷன பர்வம் 85ஆம் அத்யாயம் முதலியவற்றில் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம வம்சாவளியின் குலங்கள் விளக்கப்பெற்றுள்ளன.இரும்பு, மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இக்குலத்தோர் பரவி இருந்தாலும் ஆசியா கண்டத்தில் இவர்களின் பரவல் அதிகம் என புள்ளி – விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்


1) தமிழகம் :
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.
2) ஆந்திர மாநிலம் :
விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.
3) கேரளம் :
கேரள தேசத்தில் ஆச்சாரிகள் எனவும், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்


4)கர்நாடகம்:
கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.
5) கோவா:
கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.
6) ராஜஸ்தான்:
ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள்.பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள். பொதுவாக இந்திய சமூகத்தில் இவர்கள் குறிப்பிடக்கூடிய சமுதாய-பொருளாதார நிலையினை பெற்றுள்ளனர்.


சமூக-பொருளாதார நிலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் விளங்கும் இவர்கள் கிராமப்புற பொருளாதாரத்தில் சிறப்பான பங்கினை வகிக்கின்றனர். தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.
எழுத்தாளர் ஆனந்த் கே.குமாரசாமி ஹிந்து மற்றும் புத்தமதத்தினரின் தொன்மங்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் கம்மாளர்கள் விஸ்வபிராமணர்கள் எனவும், வேதகம்மாளர்கள் எனவும் அறியப்படுகிறார்கள். அவர்கள் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து, சிலோன், பர்மா, ஜாவா தீவுகள் போன்ற இடங்களில் வாழ்கிறார்கள். ஆன்மீகத்திலும், கல்வியிலும் தங்களை முன்னோடிகளாகக் கருதுகிறார்கள். இவர்கள் தங்களின் சடங்குகளைத் தாங்களே நடத்துகிறார்கள். பிராமர்களைச் சார்ந்து நிற்பதில்லை. என்று பதிவு செய்து இருக்கிறார்.
டாக்டர் கிருஷ்ணராவ் தனது நூலில், உயர்ந்த தொழில் நிலையையும், சமூக அந்தஸ்தையும் பெற்றவர்களாக இரும்பு வேலை, மரவேலை செய்வோரும், கைவினைஞர்களும் இருந்தனர். எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இவர்கள் மிகச் சிறப்பானதொரு சமூக-பொருளாதார நிலையைப் பெற்றிருந்தனர். பவித்ரமான பூநூல் அணிந்தும், தங்களை விஸ்வகர்ம பிராமணர்கள் என பிரகடனப்படுத்தியும் வாழ்ந்தனர். இவர்களின் புகழும் பெருமையும் வளர மிக முக்கிய காரணம், இவர்கள் தங்களது கலைத் திறமைகளின் மூலம் இந்தியப் பண்பாட்டினை, குறிப்பாக இந்து மத கலாச்சாரத்தை உலகினுக்கு உணர்த்தி, உணர்த்தியதுதான் என்று ஆய்ந்து கூறியிருக்கிறார்.
மறைக்கப்பட்ட வரலாறு:


சமுதாயத்திற்கான பெரும்பாலானத் தேவைகளை நிறைவேற்றியும், சமுதாயத்திற்குக் குருமார்களாய் இருந்து வழிகாட்டியும் வந்த விஸ்வகர்ம இனம் பேஷ்வாக்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரும் கொடுமைக்கு ஆளானது. இந்த வரலாறு பெரும்பாலும் ஆய்வறிஞர்கள் கூட அறியாதது. வரலாற்றின் ஆழ்ந்த ஏடுகளித் தேடிப்பார்த்தால் கிடைக்கும் இந்த அவலத்தின் சில துளிகள் இதோ…
பாஞ்சாலர்கள் என அழைக்கப்பட்ட விஸ்வகர்ம இனத்தவர்களின் சமூக முக்கியத்துவத்தையும், அபார வளர்ச்சியையும் கண்ட பிராமணர்கள் இவர்களை சமுதாயத்தினின்றும் ஒதுக்க ஆவல் கொண்டவர்களாய், பொறாமை மேலிட, இவர்கள் விஸ்வகர்மாக்கள். பிராமணத் தகுதியுடையவர்கள் அல்ல என்று கூறி பிராமணர்களாக ஏற்க மறுத்தனர்.இதனால் பிராமண-விஸ்வபிராமணர்களிடையே பல காலங்களாக விரோத மனப்பான்மை இருந்து வந்தது.
பேஷ்வாக்கள்
எனப்படும் ஒரு இனத்தவர் மன்னர்களாக அரசாண்ட காலத்தில், விஸ்வகர்மாக்கள் பல வகையிலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில், பேஷ்வாக்கள் பிராமண சமுதாயத்தைத் தழுவியவர்கள். இவர்கள் பாஞ்சாலர்களை இடுப்பில் வேட்டி கட்ட அனுமதிக்க வில்லை. வேறுசில காலத்தில் பஞ்ச கச்சம் போன்ற ஆடைகளை (பிராமணர்களுக்கு உரியது) அணிய தடை செய்தனர். சிகையை பாரம்பரிய வழக்கப்படி (மரபுப்படி) வளர்க்கவோ, கட்டவோ அனுமதிக்கவில்லை. இன்னும் நாம் அறியாத பல கொடுமைகளும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.
வேதகால நாகரிகத்தின் தோற்றுவாய்களாய் திகழ்ந்த இனம் ஒடுக்கப்பட்ட இந்த வரலாறு இன்று பெரும்பாலும் தேய்ந்து, மறைந்து வெளியில் தெரியாமல் போய்விட்டது


-+--+-------+++++-
பங்களிப்பு
இந்திய நாகரிகத்தின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் விஸ்வகர்ம பெருமக்கள் தொன்றுதொட்டு பெரும் பங்காற்றி வந்துள்ளார்கள்.
சில வரலாற்றுப் பெருமைகளை காணலாம்.
நாளந்தா பல்கலைக்கழகம்:
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களையும், ஏறத்தாழ 2 ஆயிரம் ஆசிரியப் பெருமக்களையும் கொண்ட இப்பல்கலைக்கழகம் விஸ்வ-வினைஞர்களால் உருவாக்கப்பட்டது. வானுயர்ந்த சுவர்களையும், பாதுகாப்பான கதவங்களையும் கொண்ட இப்பல்கலைக் கழகத்தில் எட்டு தனித்தனி பகுதிகளும், பத்து கோணங்களும், பரந்த தியான அறையும், வகுப்பறைகளும் அமைந்திருந்தன. மிகப்பெரிய நீர்நலைகளும், பூங்காக்களும் வளாகத்திற்குள்ளேயே அமைந்திருந்தன. ஒன்பது நிலைகளைக் கொண்ட பிரம்மாண்டமான நூல்நிலையமும் நாளந்தாவில் இருந்தது. அங்கு புகழ்பெற்ற புத்தகங்களைப் படியெடுக்கும் செம்பணி நடைபெற்று வந்தது. இப்பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட்ட அரிய பல பாடங்களைப் பயில கொரியா, ஜப்பான், சைனா, திபெத், இந்தோனேஷியா, பெர்ஷியா, துருக்கி உட்பட உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் வந்து சென்றனர். உலகின் முதல் பல்கலைக்கழகமாக விளங்கும் இந்த நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு கெளதம புத்தர் வந்து பார்வையிட்டுச் சென்றதாக வரலாறு புகல்கிறது


இரும்புத்தூண்:
IORN PILLER
இந்தியத் திருநாட்டின் தலைநகராம் புதுதில்லியில் உள்ள இரும்புத்தூண் 98 சதவீதம் தூய இரும்பினால் படைக்கப்பட்டது. கடந்த 1600 ஆண்டுகளாக துருப்பிடிக்காமல், சேதமடையாமல் உள்ள இது தனிப்புகழுடன் விளங்குகிறது. இவ்விரும்புத்தூணின் அடிப்பாகத்தில் ஒரு மெல்லிய காகிகத்தை சொறுகி, அதனை மறுபக்கத்திலிருந்து எடுத்துவிடலாம் என்று கூறுகிறார்கள். (என்றால் அத்தூண் பூமிக்குள் புதைக்கப்படாமல் உள்ளதென்பது அவர்கள் கூற்று)

அதிக பலன் தரும் பஞ்சமி திதி வழிபாடு


அதிக பலன் தரும் பஞ்சமி திதி வழிபாடு




அதிக பலன் தரும் பஞ்சமி திதியில் ...பஞ்சமி வழிபாடு

 31.11.2015 சனி கிழமை   பஞ்சமி திதி



பஞ்சமி திதியில் சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.
அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும்.
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளியை தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணை கலந்து ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கில் ஐந்து திரி இட்டு தீபத்தினை ஏற்ற வேண்டும்.

அதில் தீபத்தின் ஒரு முகத்தை உற்றுப்பார்த்தபடி நாம் மனம் உருகி வேண்டினால் தீபத்தில் அம்மன் கொலுவிருக்க வந்து அமர்ந்திடுவா..!
அப்பொழுது நமது குறைகளை எல்லாம் அந்த தீபத்தை பார்த்து கூறவேண்டும் .
108 முறை ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ..!
எனகூறிய படி ஒவ்வொரு மந்திரத்திற்க்கும் ஒவ்வொரு கற்கண்டு இடவேண்டும். பூவும் குங்குமமும் அர்ச்சிக்கலாம்.. ! அத்துடன்தேவிக்கு பழங்களை படைக்கலாம்.
அன்பே .. என்..அருந்துணையே ..!
உன்னை வந்தடைந்த எந்தனுக்கு ..
வந்த வினை அகற்றி மகா...பாக்கியம் தந்தருள்வாய்!
தந்தையும் தாயும் நீயே..! தற்காக்கும் ரட்சகி நீயே.... !!!
என்று மனமுருகி வழிபட வேண்டும்..!!!
நித்ய நிரந்தர பரிபூர்ண வாழ்வு பெறுவோம் ..!!!