நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 11 September 2015

அமாவாசை யாகம்


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் ஆவணி மாதம்


அமாவாசை யாகம் 12.09.2015 சனிகிழமை ஆவணி மாதம்







மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் 12.09.2015 சனி கிழமை ஆவணி மாதம்அன்று நடைபெறுகிறது

அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.

இந்த மண்ணை மிதித்து இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

கடன் கழுத்தை நெறிக்கிறதா? உங்களை தப்புவிக்க உதவும் ஸ்லோகம் ...

கடன் கழுத்தை நெறிக்கிறதா? உங்களை தப்புவிக்க உதவும் ஸ்லோகம் ...

நாம் இப்போது இருக்கும் நிலையில், கடன் இல்லாத மனிதர்களே இல்லை யென்று கூறலாம். நல்ல உத்தியோகத்தில் இருக்கும் நபர்களுக்கும், வீட்டுக் கடன், வாகன கடன், கடன் அட்டை என பல ரூபங்களில்.. ஒரு சிலருக்கு - கந்து வட்டி ரேஞ்சுக்கு ...

நமக்கு வரும் கேள்விகளில் - நிறைய கடன் தொல்லைகளில் இருந்து தப்பிக்க , வழி கூறுங்கள் சார் என்று.. நாம் ஏற்கனவே ஒரு சில கட்டுரைகள் வெளியிட்டிருந்தாலும், நமது வாசக அன்பர்களுக்காக இந்த தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் , ஏழரை சனி நடந்து கொண்டு இருந்த போது , தனது முப்பது வருட சேமிப்பை - சுமார் 50 லட்சங்களை, தனி தொழில் தொடங்குகிறேன் என்று ஆரம்பித்து , அத்தனையும் தொலைத்தார்.. அவரது வாழ்க்கை சுமார் முப்பது வருடம் பின் தங்கி விட்டது.. அதற்கு முன்பு வரை , தெய்வ நம்பிக்கை அவருக்கு அதிகம் கிடையாது. அவரது ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து , நாம் கூறிய பரிகாரங்களை முறைப்படி செய்து, இந்த ஸ்லோகத்தை மனமுருக , 108 முறை தினமும் துதித்து , வேண்டி - இன்று அவரது ஒரு நிலத்தை விற்றதின் மூலம் , முழுவதுமாக மீண்டு விட்டார்.

இது முழுக்க, முழுக்க - உங்களை கடன் தொல்லைகளில் இருந்து தப்புவிக்க உதவும் ஸ்லோகம்.

கடன் உங்களுக்கு வரவே வராமல் தடுக்க , புதன் கிழமைகளில் , புதன் ஹோரைகளில் ( காலை : ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை ; இரவு எட்டு மணியில் இருந்து 9 மணி வரை ) இந்த ஸ்லோகத்தை கூறி வழிபாடு செய்து வரவும்



ருண விமோசன - நரசிம்ஹா ஸ்தோத்திரம்..

தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 1.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 2.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 3.

ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 4.

ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 5.

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 6.

க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 7.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 8.

ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத் 9.

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி




ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள்,
தெரியாமல் செய்தபாவங்கள்,அறிந்து செய்த பாவங்கள்,அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு
சனிக்கிழமையன்று காலையில் வன்னி மரம் அருகே அமைந்துள்ள விநாயகர்க்கு பச்சரிசியை ஒரு கையில் அள்ளி (நன்கு பொடி செய்து) சூரியநமஸ்காரம் செய்துவிட்டு மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த
பச்ச அரிசிமாவை வன்னி மரம்விநாயகரைச்
சுற்றிப்போட வேண்டும் ,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.
எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.
இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.
இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.
இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.
அப்படிமாறியதும்,அதன்இழந்துபோய்விடும்.
இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.

Wednesday, 9 September 2015

உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி


உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி


கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்திரமில்லாத நிலை, எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை,தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல், திடீர் நோய்,திடீர் அவமானம்,மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது.வெள்ளி கிழமை (11.09.2105)அன்று கோயில்களில் வளர்க்கப்படும் பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைபழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.
"ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிக்ஷேசினி பாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே!'' ""

எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன்'' என்பது இதன் பொருள். இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்

Monday, 7 September 2015

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை



அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை



அத்ரி மலையின் தெய்வீக அனுபவங்கள்




நெல்லை மாவட்டம் அம்பசமுத்திரம்
ஆழ்வார்குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரிமலை அமைந்துள்ளது.

இங்கு அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம். அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.
மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.மேலும் கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது.
சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு. அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.



பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை
சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது
இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.

அத்ரி மகரிஷியின் கோவில்வருகிறவர்கள்
.வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை;

















அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு
10-09-2015வியாழன் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும்

ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651

Sunday, 6 September 2015

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை


அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை



அத்ரி மலையின் தெய்வீக அனுபவங்கள்





நெல்லை மாவட்டம் அம்பசமுத்திரம்
ஆழ்வார்குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரிமலை அமைந்துள்ளது.

இங்கு அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம். அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.
மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.மேலும் கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது.
சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு. அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.



பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை



சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது
இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.

அத்ரி மகரிஷியின் கோவில்வருகிறவர்கள்
.வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை;



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 

10-09-2015வியாழன்  கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் 
ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

அத்ரி மலையின் அற்புதங்கள்!















பிரபஞ்சத்தின் ஜீவநாடி அறுந்து போகாமலிருப்பதற்காக இயற்கை அன்னை பல நற் கொடைகளை வாரி வழங்கியிருக்கிறாள். அந்த இயற்கைவளம் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல பல ஆன்மீக அதிசயங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆணித்தரமான உதாரணம் அத்ரி மலையும் அங்கே உடனுறையும், சிவன் வடிவில் உள்ள அத்ரி ஆலயமே.

கையடக்கமான அந்த ஆலயம், அன்றாடம் ஆன்மீக பக்தர்களை ஈர்த்த வண்ணமிருக்கிறது.

எந்த ஒரு பொருளையும் நினைத்த வேளையில் அடைந்து விட்டால் அதற்கு மதிப்பு குறைவு தான். சிரமப்பட்டு, கஷ்டங்களை அனுபவித்துப் பெறும் பொருள், அதுவே பரம்பொருள் ஆனாலும், அது தரும் சுகமும், அமைதியும், வாழ்நாள் முழுக்க மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடும்.

அத்ரிமலை ஆலயத்தின் வரலாற்றுக்குள் போவதற்கு முன், அந்த ஆலயம் சென்றடைவதற்கான வழியினை முதலில் பார்த்து விடுவது நல்லது.

நெல்லை மாவட்டத்தின் நகரமான தென்காசி அல்லது அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ஆழ்வார்குறிச்சிக்கு, பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 6 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.

சுத்தமான பிராணவாயுக்காற்றோடு மூலிகை மணத்தையும் கொண்ட காற்று வீசும் சூழல். சுவாசிக்கும் மனிதர்களின் இதயத்தைச் சுத்திகரிக்கும். புத்துணர்ச்சியோடு கரடு முரடானபாதையைக கடப்பது கூட அங்கே செல்லும் பக்கதர்களுக்குத் துன்பமே தெரியாது.


அப்படி ஒரு சிறப்பம்சம்.

சரி. இனி ஞான விஷயத்திற்கு வருவோம்.

ஆன்மீக சரித்திரம் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறது.

இன்றைக்கு சரியாக 2.500 ஆண்டுகளுக்குச் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணமாக வந்த மகாமுனிவர் தான் அத்ரி.
தனது பக்தர்களோடு வந்த அத்ரி முனிவர் அந்த மலையில் சிவபெருமானை வேண்டிக் கடும் தவம் செய்தார். தனது அடியாரின் கடும் தவத்தை மெச்சிய சிவபெருமானும் அத்ரி முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.
அத்ரி மாமுனிவர் அங்கு தவமிருந்ததால் அது அத்ரி மலை எனப் பெயராகி, சிவன் வடிவில் உள்ள அத்ரி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய ஆலயாமானது.

இடையில் ஒரு அதிசயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அத்ரி முனிவர் தவ வேளையில் இருக்கும் சமயம் அவரது சீடர்களில் ஒருவரான அனுசுயாதேவிக்குத் தாக மெடுதத்து. தண்ணீருக்காக தன் சிஷ்யை தவிப்பதை உணர்ந்த அத்ரி முனிவர் தனது கமண்டலத்தைத் தரையில் ஒங்கி ஒரு தட்டு தட்ட, அந்த இடத்தைப் பிளந்து கொண்டு நீருற்று பீய்ச்சியடிக்க அனுசுயாதேவி தன் தாகம் தீர்த்துக் கொண்டாள். வானம் பிளந்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்தாலும், 110 டிகிரியளவு கோடைவெப்பம் சூட்டைக்கிளப்பினாலும், அந்த நீர் ஊற்று ஒரே சீரான அளவு பொங்கி வருவது. அற்புதமானது என்பது பக்தர்களின் திகைக்கவைக்கும் பேச்சாகத் தொடர்கிறது.


அத்ரி மலையின் சிவனாலயம் பற்றிய பேச்சு கசிந்த உடனேயே. அது ஆலயமாக உருவெடுக்கும் காரியங்கள் நடக்கத் தொடங்கின. மலைக்கு அவரைத் தரிசிக்கச் சொல்லும் பக்தர்களே நேர்ச்சையாகத் தலைக்கு மூன்று செங்கற்களைக் கொண்டு சேர்க்க, அதன் பிறகே பக்தர்களால் அமைக்கப்பட்ட கையடக்க கோயில் மலைமேல் உருவானது வனதுர்க்கை, பேச்சியம்மன், 21 கன்னிமார்சிலைகள், கருப்பசாமி, சுடலை மாடன உள்ளிட்ட பல துணை தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு. காலப் போக்கில் பிரபலமாகி தற்போது பக்தர்களின் ஜனரஞ்சகக் கேத்திரமாக மாறி நிற்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது. [

அத்ரி மலை சிவபெருமானைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் தங்களின் மன எண்ணப்படி நேர்ச்சையாகவும் விரதமிருந்தும், சிலர் அவரையே நெஞ்சில் தேக்கிக் கொண்டு மலை ஏறுகிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு கரடு, முரடான கற்களையும், பாதைகளையும், முட்களையும் மெத்தையாக மாற்றி அவர்களைச் சேதாரமில்லாமல் மலைக் கோவிலுக்குக் கொண்டு சேர்க்கிறார். அங்குள்ள வனதுர்க்கையம்மன். காட்டு மிருகங்கள் பக்தர்களை அண்ட விடாமல் பாதுகாத்தும், மழைக் காலங்களில் அங்குள்ள கல்லாறு வெள்ள மெடுத்து பக்தர்கள் கடப்பதற்கு தடையாய் நிற்பதையும் தடுத்துக் கொண்டு, அத்ரி பரமேஸ்வர சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களைச் சிரமமின்றி தரிசனம் முற்றுப் பெற்று தரையிறங்கும் வரை காவல் துணையாய் வழித்துணையாய் வந்த வனதுர்க்கையம்மனுக்கு முதல் வணக்கும் வைத்துப் பூஜிக்கிறார்கள்.


ஆலயம் தோன்றிய காலம் தொட்டே இந்த வனதுர்க்கை தான் அத்ரிவனத்தின் காவல் தெய்வம். ராமரும், சீதாப்பிராட்டியாரும் அத்ரிமலை தபோவனத்திற்கு வந்த போது வனதுர்க்கையைத் தான் முதலில் வணங்கி முதல் மரியாதை செலுத்தினார்கள்.


அத்ரிமலை அமைதிச் சூழலையும், மெஞ்ஞானத்தையும் கொண்ட சிறப்பான ஒரு தபோவனமாக இருந்த காரணத்தினால் தான், தன் பிரதான சிஷயர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார் அத்ரி மகரிஷி. அவரது சீடர்களில் குறிப்பிட்டத்தக்கவர் கோரக்கர். தன்னுடைய குருவான ஆத்ரி முனிவருக்குப் பணிவிடைகளைச் செய்தமையால், அதன் வலிமை காரணமாக தென்பாண்டிச் சீமையின் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தையும் போக்கியவர் கோரக்கர்.


அத்ரி பரமேஸ்வர சுவாமியை மனதார வணங்கி நீர் ஊற்றில் தலை நனைத்து பிறகு, அங்கேயுள்ள அரச மரத்தின் முன்பாக தியானத்தில் அமர்வது தான் இங்கே குறிப்பிடும்படியான விசேஷம்.


பரம்பொருளை வணங்கி விட்டு, மனதார அரசமரம் முன்பு தியானத்திலிருப்பவர்களின் மனக்குறை நீங்கப் பெற்று எண்ணிய காரியங்கள். ஈடேறுகின்றன. பறைசாற்றலோ விளம்பரமே இல்லாமல் அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தெல்லாம் அத்ரி மலைக்கு வருகின்றார்கள்.


ஞாயிறு, அமாவாசை, பங்குனி, சித்திரை, மாதப் பிறப்பு, பிரதோஷம் போன்ற காலங்களில் சிறப்பான சிறப்பு பூஜை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கிறது


அத்ரிமலையின் அற்புதங்களில் இது கடுகளவே... மலை ஏறினாலோ புதைந்து கிடக்கும் பிரம்மாண்டங்கள் விரியும்
 


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 10-09-2015 வியாழன் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் 

ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651