நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 17 April 2015

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்குஅபிஷகம்,ஆராதனை அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-ஸ்ரீ மரகதவல்லி அம்பாள்.கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 19-04-2015 சித்திரை  மாத ஞாயிற்று   கிழமை  பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :+91 909510237





Thursday, 16 April 2015

அத்ரி மலையின் தெய்வீக அனுபவங்கள்




அத்ரி மலையின் தெய்வீக அனுபவங்கள்




நெல்லை மாவட்டம் அம்பசமுத்திரம்
ஆழ்வார்குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரிமலை அமைந்துள்ளது.

இங்கு அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம். அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.
மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.மேலும் கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது.
சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு. அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.



பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை



சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது
இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.

அத்ரி மகரிஷியின் கோவில்வருகிறவர்கள்
.வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை;


மேலும் தகவல்கள்களுக்கு :

செந்தில்குமார்

திருநெல்வேலி cell :+91 98420 78733
சுரேஷ் 
திருப்பூர் cell :9043942091
                             9043016651  

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் சித்திரை மாத
சனி கிழமை 18-04-2015அன்று நடைபெறுகிறது
அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து
புனித சேஷ்திரமகிமை
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்பெற்பட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

Monday, 6 April 2015

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா கோவிலில்தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிஷகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
 14.04.2015 சித்திரை  மாத தமிழ் புத்தாண்டு செவ்வாய்  கிழமை புத்தாண்டு தினத்தன்று சிறப்பு அபிஷகம்  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஒரு ரூபாய் நாணயம் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:98428 93762

மஞ்சள் காமாலை மருந்து


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

 மஞ்சள் காமாலை மருந்து



சங்கன்  அதிமதுரம் கீழ்நெல்லி  கட்டுதயிர் ,
பொங்குங்கா மாலை மருந்து ................குறள்

விளக்கம் :

சங்கன்  வேர் ,அதிமதுரம் ,கிழா நெல்லி  இம்மூன்றையும்  மை போல் அரைத்து புளித்த தயிரில் கலந்து 50 மில்லி கிராம் அளவு காலை மட்டும் உணவிற்கு முன் உண்டு வர  காமாலை நோய் தீரும் .மூன்று நாள் மட்டும் மருந்து சாப்பிடவும் ,பத்தியம் உணவில் கடை பிடிக்கவும் .

தவிர்க்க வேண்டியது

:உப்பு,எண்ணெய் ,புளி ,மசாலைகள் ,காரம் ,கொழுப்பு சத்துள்ள உணவுகள் .

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி அபிசேகம்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி அபிசேகம்




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு
08-04-2015 புதன்  கிழமை சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு  ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி திருவருள் மற்றும் ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை, அன்னதானம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 08.04.2015
பங்குனி மாத புதன் கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,
அன்னதானம் நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
87540 16236
98428 58236
9843016651