நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 9 January 2015

பல்லி கடிக்கு மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
பல்லி கடிக்கு மருந்து பல்லிக் கடிக்குப் பனைவெல்லம் உள் மருந்தாம் ,
நல்லமஞ்சள் நீர்மேல் மருந்து . ...............குறள்

விளக்கம் :
பல்லி கடித்தால் 25 கிராம் பனை வெல்லம் உண்ட பின் கடி பட்ட இடத்தில்
மஞ்சள் நீர் பூசுவதும் நஞ்சை அகற்றும் நன் மருந்தாகும் .


சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு நாளை 11.01.2015 ஞாயிற்று கிழமை மார்கழி மாத உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும்
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :94425 59844
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Wednesday, 7 January 2015

இதய நோய் குணமாக

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய்  வாழ வேண்டி

 இதய நோய்  குணமாக


 இதயநோய்  வாராமல் எந்நாளும்  காக்கும்

பதப்பாலில்  வெங்காயம்  பூண்டு .


பாலில்  வெங்காயமும்  பூண்டும்  சேர்த்து  காய்ச்சிப்  பக்குவமாக  அருந்திவர  இதய  வாராமல்  காக்கும்
 .
வரும்முன் காக்க :

பச்சை பூண்டு  ஐந்து பல்  அரைத்து  ஒரு குவளை  மோரில்  கலக்கி  குடிக்கவும்  இதய நோய் வராது .





Monday, 5 January 2015

குடல் புண் ஆறுவதற்கு

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

குடல் புண் ஆறுவதற்கு

துளிர்கொய்யா மென்கொழந்து தேன்கலந் துண்ணின்
நெளிபுண் சீழ் மாற்றும் மருந்து .-------குறள்

விளக்கம் :
கொய்யாமரத்தின் தளிரிலைகளை எடுத்தரைத்து அதனுடன் தேன் கலந்துண்டு வந்தால் வெகு விரைவில் குடல் புண் ஆறிவிடும் .




Sunday, 4 January 2015

பூவனூர் அகஸ்தியருக்கு அன்னதானம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 

மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 
9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும்  08.01.2015 வியாழன் கிழமை ஆயில்யம் நட்சத்திரம தினத்தன்று அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236 

பூவனூர் தியாகராஜன் : 94436 55399
 நாரயணசாமி :93443 02923

Friday, 2 January 2015

கர்ப்பம் தரிக்க மாமருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கர்ப்பம் தரிக்க மாமருந்து
 


வாறான மங்கையர் கெர்பமாக
வறையுறேன் பசும்பாலு வசம்புந்தானும்
நீறான் விழுதிஇலை மூலிதானும்
நிலையான குப்பை மேனி சமனாய்க் கூட்டி
காறான பால் தனிலே குழப்பியே தான்
கனமாக இருவேளை கொண்டாயானால்
சோரான கிருமியது அற்றுப் போகும்
செனிக்குமே பிள்ளையது செனிக்கும் பாரே .........தன்வந்திரி மகரிஷி

விளக்கம் :

தன்வந்திரி பகவான் பெண்கள் கர்ப்பம் தரிக்க உடலைப் பக்குவப்படுத்த
சுரண முறை வைத்தியத்தை பற்றி சொல்லி இருக்கிறார் அதை கொண்டு பலன் பெறாலாம்
தன்வந்திரி மகரிஷியை வணங்கி அவர் ஆசியை பெற்று வைத்தியத்தை ஆரம்பிக்கவும் .

வசம்பு,விழுதி இலை மூலிகை ,குப்பைமேனி இம் மூன்ரையும் சம அளவுஎடுத்து நிழலில் உலர்த்தி சரி எடையாக எடுத்து இடித்து வைத்துக்கொள்ளவும் .

இச் சூரணத்தை பசும் பாலில் காலை-மாலை உணவுக்கு முன் குழப்பி சாப்பிட்டு வர ,கர்ப்பப் பையில் இருந்திடும் கிருமிகள் அழிந்து போய் கர்ப்பம் தரித்து குழந்தை..

செனிக்குமது பிள்ளையது பிறக்கும் பாரு
தெளிவாகும் திரேகமது சொலிக்கும் பாரு
கனிக்குமே இந்த முறை பொய்யாதையா
காசினியில் யாரும்தான் சொல்லமாட்டார் .......தன்வந்திரி மகரிஷி

வசம்பு

விழுதி இலை (ஆலமரத்து இலை ) மூலிகை

குப்பைமேனி -------பசும் பால்


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்

04.01.2015 ஞாயிற்று கிழமைபௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்

காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை

மற்றும் மாலை 6.00மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

சிவகங்கை மாவட்டம்

cell :98428 58236